லட்சாதிபதி ஆவது ஒன்றும் முடியாத செயல் இல்லை. கொஞ்சம் முயற்சி மற்றும் சிறிது அதிர்ஷ்டம் இருந்தால் நீங்களும் லட்சாதிபதி ஆகலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

20 ஆண்டுகளுக்கு முன் ரூ.5,000 சம்பாதித்தாலே அது பெரிய விஷயம். இப்போதெல்லாம் 20 வயது பசங்களுக்கு அந்தப் பணமெல்லாம் சரவ்சாதாரணம். செல்வம் சேர்க்க நீங்கள் எக்கச்சக்கமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்றில்லை, அந்த பணத்தை கொண்டு நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதே முக்கியம். லட்சாதிபதி ஆவதற்கான வாய்ப்பை அதிகரித்துக்கொள்ள விரும்பினால், கூடுதலாக சம்பாதிப்பதற்கான வழிகளைத் தேடுவது அவசியம். 


 


ALSO READ | நீங்கள் பழைய நாணயம் சேமிப்பவரா.. அப்படியானால், லட்சாதிபதி ஆகும் வாய்ப்பு உள்ளது..!!!


வார இறுதியில் அல்லது வார நாட்களில் இரவில் ஓரிரு மணி நேரத்தில் கொஞ்சம் பணம் சம்பாதிப்பதற்கான வழியை தேடுங்கள். அவை பிரிலான்ஸ் பணியில் இருந்து வீட்டில் இருந்தே வருமானம் ஈட்டுவது வரை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். 


நீங்கள் சம்பாதிப்பதை விட குறைவான செலவு செய்தால் நிதி விஷயங்களை சரியாக கையாள முடியும். நீங்கள் உங்கள் தேவைகளை சுருக்கிக் கொண்டு வருத்திக்கொள்ள வேண்டியதில்லை. தேவையில்லாத விஷயங்களில், உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்காதவற்றில், செலவை குறைப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.


உங்கள் வருமானத்திற்குள் வாழ்வது நிதி வெற்றிக்கு முக்கியமானதாகும். அதிகம் சம்பாதிப்பது மற்றும் குறைவாக செலவு செய்வது ஆகிய இரண்டு விஷயங்களையும் உங்களால் ஒன்று கலக்க முடியும் என்றால், உலகின் 95 சதவீதம் பேரை விட உங்களால் முன்னிலையில் இருக்க முடியும். உங்கள் லட்சாதிபதி பாதையில் முன்னேற வேண்டும் எனில் நிச்சயம் நீங்கள் சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூபாயையும் செலவிடக்கூடாது.  


வருமானத்தில் கொஞ்சம் சேமிக்கவும். நீங்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் சரி, நீங்கள் கொஞ்சம் தொகையை சேமித்தாக வேண்டும். கைவசம் கொஞ்சம் இருப்பது நல்லது. சேமிப்பு முக்கியம் என்பதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. வரிகள் மற்றும் இதர அம்சங்கள் தொடர்பு கொண்டிருப்பதால், சேமிக்கும் பணம் என்பது சம்பாதிக்கும் பணம் போன்றது.  


வரி சேமிப்பு அளிக்கும் ஓய்வுதியம் சார்ந்த முதலீடுகளில் சேமிப்பது உங்கள் வளத்தை அதிகரிக்க உதவுவதோடு, வரி பாதிப்பில் இருந்தும் விடுபடலாம். மேலும் இந்த முதலீடுகளை உங்கள் வரி திட்டமிடலுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.


உங்கள் பணம் எப்படி செலவாகிறது என்பதையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். இதற்கென உள்ள செயலிகளை நீங்கள் பயன்படுத்தலாம். செலவுகளை கண்காணிக்க உதவும் மற்றும் நிதி விஷயங்களை நிர்வகிக்க உதவும் செயலிகள் பல இருக்கின்றன. இப்படி செய்வதன் மூலம் உங்கள் செலவு பழக்கத்தை அறிந்து கட்டுப்படுத்தலாம்.  இதன் பிறகு செலவுகளையும், முதலீட்டையும் சிறப்பாக திட்டமிட்டு, இலக்கை நோக்கி லட்சாதிபதி ஆகலாம்.


 


ALSO READ | பணக்காரர்ராக மாறனுமா? 1 லட்சம் ரூபாய்க்கு ஈசியா தொடங்கக் கூடிய இந்த 10 தொழில்கள்!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR