நமது அன்றாட வாழ்க்கையில் மொபைல் போன் முக்கிய பங்காக ஆகிவிட்டது. பணப்பரிவர்த்தனைகள் முதல் பல விஷயங்களுக்கு மொபைல் போன் மிகவும் அத்தியாவசியமாகிறது. இந்தச் சூழலில் நம்முடைய மொபைல் போன் திருடி போகிவிட்டால் நம்முடைய முக்கியமான UPI விவரங்கள் மற்றும் வங்கி பரிவர்த்தனைகள் ஆகியவற்றிற்கு பெரிய ஆபத்து வரக்கூடும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருடப்பட்ட மொபைல் போன்களிலிருந்து UPI விவரங்களை பயன்படுத்தி பலரின் வங்கி கணக்கில் பல ஆயிரம் ரூபாய் பறிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியா மாதிரியான வளர்ந்து வரும் டிஜிட்டல் வர்த்தக நாட்டில் மொபைல் போன் திருட்டு போனால் பெரியளவில் பிரச்னைகளை சந்திக்க நேரிடும். ஆகவே மொபைல் போன் திருடப்பட்டால் நாம் முக்கியமாக செய்யவேண்டியவை என்னென்ன?


ALSO READ | அதிக credit cards விற்பனையான வங்கி எது


UPI பின்னை டிஆக்டிவேட் செய்ய வேண்டும்
வங்கி கணக்கு சேவைகள் முடக்கப்பட்டால் அடுத்து திருடிய நபர்கள் உங்களுடைய யுபிஐ செயலிகளுக்கு சென்று பணம் திருட வாய்ப்பு உள்ளது. எனவே மொபைல் போன் தொலைந்த உடன் உங்களுடைய யுபிஐ கணக்கை டிஆக்டிவேட் செய்ய வேண்டும். இதன் மூலம் அந்த பரிவர்த்தனைகளை தடுக்க முடியும். 


கூகுள் பே மற்றும் பேடிஎம் செயலிகள் கணக்கை முடக்க வேண்டும்
உங்கள் மொபைல் போனில் கூகுள் பே மற்றும் பேடிஎம் பயன்படுத்தி இருந்தால் அதன் சேவை மையத்தை தொடர்பு கொண்டு அந்த கணக்குகளை முடக்க வேண்டும். இதன் மூலம் இந்த செயலிகளிலிருந்து பணம் எடுப்பதை தவிர்க்க முடியும். 


How to block Phone Pe Account 
Phone Pe பயனாளர்கள் 08068727374 அல்லது 02268727374 என்ற எண்ணை அழைக்க வேண்டும், மொழியைத் தேர்ந்தெடுத்த பிறகு OTP உங்களிடவும். இதற்குப் பிறகு, நீங்கள் OTP பெறாத விருப்பத்தை கிளிக் செய்யவும். அதன் பிறகு தொலைந்த சிம் அல்லது சாதனத்தின் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். இதற்குப் பிறகு நீங்கள் வாடிக்கையாளர் பராமரிப்பில் பேசுவீர்கள், அவருக்கு முழுமையான தகவலைக் கொடுத்து அந்த கணக்குகளை முடக்க வேண்டும்.


ALSO READ | 8 மணி நேரம் தண்ணீரில் இயங்கும் அசத்தல் ஸ்மார்ட்போன் அறிமுகம்; விவரம் இங்கே


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR