How To Calculate Pension and EDLI on Total Investment: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO ஆல் நடத்தப்படும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அதாவது EPF ஒரு முதலீட்டுத் திட்டமாகும். இது ஓய்வூதிய நிதிக்கான முதன்மையான தேர்வாக பார்க்கப்படுகின்றது. சம்பளம் பெறும் ஊழியரின் சம்பளத்தில் ஒரு பகுதி இந்த திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் செல்கிறது. அதே அளவு தொகையை அவர்களது நிறுவனமும் பங்களிக்கிறது. முதலாளியின் பங்களிப்பில், 3.67% பணியாளர் வருங்கால வைப்பு நிதிக்கும் (EPF), 8.33% பணியாளர் ஓய்வூதியத் திட்டத்திற்கும் (EPS) செல்கிறது. இதில், EDLI (Employee’ Deposit Linked Insurance) திட்டத்தின் நன்மை கிடைக்கிறது. இதன் கீழ், ஒரு PF உறுப்பினர் அகால மரணம் அடைந்தால், அவரால் நியமிக்கப்பட்ட நாமினிக்கு ரூ. 7 லட்சம் வரை காப்பீட்டுப் பலன் கிடைக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஓய்வூதியம் மற்றும் EDLI நன்மைகளின் அளவை நீங்கள் கணக்கிடலாம்


பணியாளர்கள் தங்கள் ஓய்வூதியம் மற்றும் EDLI நன்மைகளையும் கணக்கிடலாம். இபிஎஃப்ஓ சந்தாதாரர்கள் (EPFO Subscribers) தங்கள் டெபாசிட்கள் மற்றும் மொத்த முதலீட்டில் எவ்வளவு ஓய்வூதியம் மற்றும் EDLI நன்மை கிடைக்கும் என்பதை முன்கூட்டியே கணக்கிடும் வசதியைப் பெறுகின்றனர். EPFO -வின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் EDLI நன்மைகள் மற்றும் ஓய்வூதியத்தை கணக்கிட கால்குலேட்டர் வழங்கப்பட்டுள்ளது. பணியாளர்கள் தங்கள் வேலை மற்றும் வருமானம் குறித்த சில விவரங்களைக் கொடுத்து தங்கள் பிஎஃப் கணக்கில் (PF Account) எவ்வளவு மாதாந்திர ஓய்வூதியம் மற்றும் EDLI நன்மைகளைப் பெற முடியும் என்பதை தெரிந்துகொள்ளலாம். 


கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்முறையை பின்பற்றி இந்த விவரங்களை பெறலாம்


1. EDLI நன்மைகளை கணக்கிடும் கால்குலேட்டர் (EDLI Benefits Calculator)


- முதலில் EPFO இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
- டாஷ்போர்டில் உள்ள Online Services tab -இன் கீழ், EDLI and Pension Calculator என்பதை கிளிக் செய்யவும். 
- அதன் பிறகு ஒரு புதிய பக்கம் திறக்கும். ஒரு பெட்டியில் EDLI Benefit Calculator மற்றும் Pension Calculator என இரண்டு விருப்பங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். 
- EDLI Benefit Calculator -இல், EPFO உறுப்பினர் இறந்த தேதி, சராசரி ப்ராக்ரசிவ் இருப்பு மற்றும் கடந்த 12 மாதங்களாக இறந்தவரின் சராசரி சம்பளம் பற்றிய தகவல்களை வழங்க வேண்டும்.
- விவரங்களை பெட்டியில் உள்ளிட்ட பிறகு, Show Updated Calculation என்பதைக் கிளிக் செய்யவும். அதன் பின்னர், EDLI நன்மைகளின் மொத்தத் தொகை பற்றி தெரிந்துகொள்ளலாம். 


மேலும் படிக்க | பில்லியனர் ஆக ஆசை, ஆனால் வழி தெரியலையா? ‘இந்த’ சூப்பர் ஐடியாவை படிங்க..


2. ஓய்வூதிய கால்குலேட்டர் (Pension Calculator)


- முதலில் Pension Calculator பக்கத்திற்கு வரவும். 
- இதில் உங்கள் பிறந்த தேதியை உள்ளிட வேண்டும். இதனுடன், நீங்கள் பணியில் சேர்ந்த தேதி, வேலையை விட்டு வெளியேறிய தேதி போன்ற விவரங்களைக் கொடுக்க வேண்டும். இதற்குப் பிறகு, Show/Update details என்பதைக் கிளிக் செய்யவும்.
- இதற்குப் பிறகு, சிஸ்டம், 58 வயதை நிறைவு செய்யும் தேதி, முன்கூட்டிய ஓய்வூதியத்திற்கு 50 வயதை நிறைவு செய்யும் தேதி, மாதாந்திர ஓய்வூதியத் தொகைக்கான ஓய்வூதியத் தொடக்க தேதி ஆகியவற்றைக் கணக்கிட்டு காண்பிக்கும்.
- 50 வயதிற்குப் பிறகு பணியாளர்கள் ஏர்ளி பென்ஷனைப் பெற முடியும். ஆனால் ஓய்வூதியத் தொகை குறைக்கப்படும். 58 வயதை அடைந்த பிறகு, பணியாளர்கள் முழு ஓய்வூதிய பலனைப் பெறுவார்கள். 
- கால்குலேட்டரில் ஓய்வூதியம் தொடங்கும் தேதி மற்றும் ஓய்வூதிய சம்பளத்தை உள்ளிட்டு விவரங்களைக் Show/Update details என்பதைக் கிளிக் செய்யவும். இதன் பிறகு சிஸ்டம் உங்களது சூப்பரானுவேஷன் மாதாந்திர ஓய்வூதியத் தொகையைக் காண்பிக்கும்.


Progressive Balance என்றால் என்ன?


ஊழியர் மற்றும் நிறுவனத்தில் பிஎஃப் இருப்பு (PF Balance) மற்றும் கடந்த 12 மாத ஓய்வூதிய பங்களிப்பு ஆகியவற்றின் மொத்த தொகை Progressive Balance எனப்படும். EPF பாஸ்புக்கில் இருந்தும் இந்த இருப்பைச் சரிபார்க்கலாம். பென்ஷன் கால்குலேட்டர், ஓய்வுக்கால ஓய்வூதியம் மற்றும் முன்கூட்டிய ஓய்வூதியத்தை (Early Pension) மட்டுமே காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | லட்சங்களில் வருமானம் தரும் பேப்பர் நாப்கின் பிஸினஸ்... முத்ரா கடனுதவியும் கிடைக்கும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ