Tax Regime: பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் வரி செலுத்துவோருக்கு சிறப்பாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. தற்போது புதிய வரிமுறை இயல்பு நிலை அதாவது டீஃபால்ட் வரிமுறையாக உள்ளது. எனினும் இன்னும் இந்த வழிமுறையில் வரி சலுகைகள் அதிகம் சேர்க்கப்படவில்லை. ஆகையால் இன்னும் வரி செலுத்துவோர் பழைய முறையிலேயே வருமான வரி தாக்கல் செய்யும் எண்ணத்தில் உள்ளனர். நீங்கள் கடந்த ஆண்டு புதிய வரி முறையில் ஐடிஆர் தாக்கல் செய்திருந்து, இந்த முறை உங்கள் முதலீடு அதிகரித்து இருந்தாலோ, அல்லது வீட்டுக் கடன் பெற்றிருந்தாலோ, இவற்றில் வரி விலக்கு பெற நீங்கள் இந்த முறை புதிய வரி முறையில் ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டும். இப்படி செய்ய நீங்கள் உங்கள் வரிமுறையை மாற்றலாம், அதாவது ஸ்வவிட்ச் செய்யலாம். அதை பற்றிய விவரங்களை இந்த பதிவில் காணலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வரிமுறையை எப்படி மாற்றுவது


2023 ஆம் ஆண்டின் பட்ஜெட்டில் புதிய வரிமுறை (New Tax Regime) இயல்பு வரிமுறையாக அறிவிக்கப்பட்டது. அதாவது வரிமுறையை மாற்றவில்லை என்றால், உங்கள் வரி தானாகவே புதிய வரிமுறையின் படி கணக்கிடப்படும். ஆனால் ஐடிஆர் தாக்கல் (ITR Filing) செய்வதற்கு முன்னதாக உங்களுடைய வரிமுறையை மாற்றும் வசதி உங்களிடம் உள்ளது. சம்பள வர்க்கத்தினர் (Salaried Classs Employees) ஒவ்வொரு ஆண்டும் வரிமுறையை மாற்றிக் கொள்ளும் வசதியை பெறுகிறார்கள். எனினும் வணிக வர்க்கத்தினர் (Business People) அதாவது வணிகத்தின் மூலம் வருமானம் பெறும் நபர்களுக்கு வசதி ஒருமுறை மட்டுமே அளிக்கப்படுகின்றது.


வரி முறையை மாற்றுவதற்கான எளிய வழிமுறை


ஸ்டேப் 1: வரிமுறையை தேர்வு செய்யுங்கள்


உங்களுக்கு எந்த வரிமுறையின் கீழ் வருமான வரி (Income Tax) தாக்கல் செய்தால் அதிக லாபம் இருக்கும் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். புதிய வரி முறையில் குறைந்த வரி விகிதம் கிடைக்கும். ஆனால் இதில் விலக்குகள் கிடைக்காது. பழைய வரிமுறையில் (Old Tax Regime) வரி விகிதம் அதிகமாக இருக்கும், ஆனால் இதில் பலவகையான முதலீடுகள், செலவுகள் மற்றும் பிற விஷயங்களுக்கு வரி விலக்கு (Tax Exemption) கிடைக்கும்.


மேலும் படிக்க | சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகித விவரங்கள்: சிறிய சேமிப்பு, பெரிய வருமானம்


ஸ்டேப் 2: உங்கள் நிதி நிலையைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்


- வரிமுறைக்கு மாற்ற, உங்களுக்கு தேவையான ஆவணங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். சம்பள வர்க்கத்தினர் வரிமுறையை மாற்ற இதற்கு தனியாக ஒரு படிவத்தை பூர்த்தி செய்ய அவசியம் இல்லை. அவர்கள் தங்களுடைய ஐடிஆர் படிவத்தை நிரப்பும்போது தாங்கள் எந்த வழிமுறையில் ஐடிஆர் -ஐ தாக்கல் செய்ய விரும்புகிறோம் என்பதை முதலிலேயே குறிப்பிட வாய்ப்பளிக்கப்படும்.


- வர்த்தகங்களின் மூலமாக வருமானம் பெறும் நபர்கள், ஒருமுறை மட்டுமே வரிமுறையை மாற்ற முடியும். இதற்கு அவர்கள் அசெஸ்மென்ட் இயர் அதாவது மதிப்பீட்டு ஆண்டில் ஜூலை 31 ஆம் தேதிக்கு முன்னர் படிவம் 10IE -ஐ நிரப்ப வேண்டும்.


ஸடெப் 3: வரி முறையை தேர்வு செய்வது எப்படி? 


சம்பள வர்க்கத்திர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:


- உங்கள் ஐடிஆர் படிவத்தைத் திறக்கவும்.
- இங்கே நீங்கள் எந்த வரி முறையைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்று கேட்கப்பட்டிருக்கும்.
- அதில் உங்கள் விருப்பப்படி வரி முறையைத் தேர்வு செய்யவும்.
- அதன் பிறகு உங்கள் ITR ஐ நிரப்பவும்.
- அதன் பிறகு அதை வெரிஃபை செய்து பின் சப்மிட் செய்யவும். 


வணிகத்திலிருந்து வருமானம் பெறும் நபர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறை:


- ஆன்லைன் படிவம் 10IE ஐ பதிவிறக்கம் செய்து நிரப்பவும்.
- மதிப்பீட்டு ஆண்டின் ஜூலை 31 க்கு முன் இதை நிரப்பவும்.
- இப்போது உங்கள் விருப்பப்படி வரி முறையைத் தேர்ந்தெடுத்து ஐடிஆர் -ஐ நிரப்பவும்.


வணிகத்திலிருந்து வருமானம் பெறும் நபர்கள் பழைய வரி முறைக்கு மாற விரும்பினால், அவர்கள் இதற்கு முன் மாறாமல் இருந்தால் மட்டுமே இந்த விருப்பம் கிடைக்கும். நடப்பு ஆண்டில் வருமானத்தில் பழைய வரி முறையின் கீழ் வரிவிலக்கு பெற முடியாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அனைவரும் தங்கள் ஐடிஆர் -ஐ கவனமாக நிரப்பி, சரிபார்த்த பின்னர் சமர்ப்பிக்கவும். நிதி ஆண்டு 2023-24 (FY 2023-24), மதிப்பீட்டு ஆண்டு (AY 2024-25) -க்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31, 2024 என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 


மேலும் படிக்க | EPF Claim மீண்டும் மீண்டும் நிராகரிக்கப்படுகிறதா? கவலை வேண்டாம், புதிய வழிகாட்டுதல்கள் இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ