EPF Balance Check: ஒழுங்கமைக்கப்பட்ட பணிகளில் உள்ள பெரும்பாலான ஊழியர்கள் இபிஎஃப் கணக்கு பற்றி நன்கு அறிந்திருப்பார்கள். மாதா மாதம் ஊழியர்களின் சம்பளத்திலிருந்து 12% தொகை இபிஎஃப் கணக்கில் (EPF Account) டெபாசிட் செய்யப்படுகின்றது. இதே அளவு தொகையை நிறுவனமும் டெபாசிட் செய்கின்றது. எனினும் நிறுவனம் அளிக்கும் பங்களிப்பில் ஒரு பகுதி, அதாவது 3.67 சதவிகிதம் இபிஎஃப் கணக்கிலும், 8.33 சதவிகிதம் இபிஎஸ் கணக்கிலும் (EPS) செல்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இபிஎஃப் உறுப்பினர்களுக்கு அவர்களது கணக்கில் சேரும் தொகைக்கு வட்டியும் வழங்கப்படுகின்றது. இபிஎஃப் கணக்கில் வட்டித்தொகை டெபாசிட் செய்யப்பட்டு விட்டதா? இபிஎஃப் கணக்கில் சேர்ந்துள்ள மொத்த தொகை என்ன? சில எளிய வழிகளில் இபிஎஃப் இருப்பை (EPF Balance) தெரிந்துகொள்ளலாம். ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகள் மூலம் இதை நாம் வீட்டில் இருந்தபடியே அறியலாம். இதற்கான வழிமுறையை இங்கே காணலாம்.


ஆன்லைன் முறையில் இபிஎஃப் இருப்பை செக் செய்வது எப்படி?


1. இபிஎஃப்ஓ போர்டல் (EPFO Portal)


- போர்டல் மூலம் இருப்பை தெரிந்துகொள்ள, EPFO இணையதளத்திற்குச் சென்று பணியாளர்கள் பிரிவில் கிளிக் செய்து, உறுப்பினர் பாஸ்புக்கைக் கிளிக் செய்யவும். 
- இபிஎஃப் சந்தாதாரர்கள் (EPF Subscribers) தங்கள் UAN மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு PF பாஸ்புக்கை அணுகலாம். 
- இதில் தொடக்க மற்றும் நிறைவு இருப்பையும், பணியாளர் மற்றும் முதலாளியின் பங்களிப்பையும் தெரிந்துகொள்ளலாம்.
- கணக்கில் செய்யப்பட்ட பிஎஃப் பரிமாற்றம் (PF Transfer) மற்றும் இதுவரை ஈட்டப்பட்ட இபிஎஃப் வட்டித் தொகையும் (EPF Interest Amount) இதில் தெரியும்.


2. உமங் செயலி (UMANG App)


- பிஎஃப் உறுப்பினர்கள் உமங் செயலியை தங்கள் ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்து தங்கள் பிஎஃப் இருப்பை சரிபார்க்கலாம். 
- இந்த செயலியின் மூலம் பயனர்கள் தங்கள் க்ளெய்ம்களை சமர்ப்பிக்கலாம், EPF பாஸ்புக்கைப் பார்க்கலாம், க்ளெய்ம்களின் ஸ்டேடசை கண்காணிக்கலாம். 
- இதைச் செய்ய, உமங் செயலியில் உங்கள் தொலைபேசி எண்ணை உள்ளிட்டு ஒரு முறை பதிவு செய்ய வேண்டும்.


மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ ஹைக்: யாருக்கு எவ்வளவு ஊதிய உயர்வு? கணக்கீடு இதோ


ஆஃப்லைன் முறையில் இபிஎஃப் இருப்பை செக் செய்வது எப்படி?


1. எஸ்எம்எஸ் (SMS)


- EPFO உறுப்பினர்கள் 7738299899 என்ற எண்ணுக்கு SMS அனுப்பி தங்கள் PF கணக்கின் இருப்பு மற்றும் சமீபத்திய பங்களிப்பை அறிந்து கொள்ளலாம். 
- பிஎஃப் உறுப்பினர்கள் தங்கள் பதிவு செய்யப்பட்ட எண்ணிலிருந்து AN EPFOHO ENG என டைப் செய்து SMS அனுப்ப வேண்டும். 
- இங்கே ENG என்பது ஆங்கிலத்தைக் குறிக்கிறது. நீங்கள் தமிழ் மொழியில் விவரங்களை தெரிந்துகொள்ள  விரும்பினால், அந்த மொழியின் முதல் மூன்று எழுத்துக்களை, அதாவது  AN EPFOHO TAM என டைப் செய்து அனுப்ப வேண்டும்.


2 மிஸ்டு கால் (Missed Call)


- பிஎஃப் உறுப்பினர்களிஉன் மொபைல் எண் UAN உடன் பதிவு செய்யப்பட்டிருந்தால், அவர்கள் தங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 9966044425 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்து PF இருப்பை செக் செய்யலாம். 


- இந்த எண்ணில் மிஸ்டு கால் கொடுத்த பிறகு, EPFO ​​இலிருந்து சில செய்திகளைப் பெறுவீர்கள்.


- இவற்றின் மூலம் PF கணக்குகளின் இருப்பை தெரிந்துகொள்ளலாம்.


மேலும் படிக்க | பம்பர் லாபம் தரும் SIP: முதலீடு செய்யும் முன் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ