EPF Balance Check: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO ஆல் நடத்தப்படும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அதாவது EPF ஒரு முதலீட்டுத் திட்டமாகும். இது ஓய்வூதிய நிதிக்கான முதன்மையான தேர்வாக பார்க்கப்படுகின்றது. சம்பளம் பெறும் ஊழியரின் சம்பளத்தில் ஒரு பகுதி இந்த திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் செல்கிறது. அதே அளவு தொகையை அவர்களது நிறுவனமும் பங்களிக்கிறது. முதலாளியின் பங்களிப்பில், 3.67% பணியாளர் வருங்கால வைப்பு நிதிக்கும் (EPF), 8.33% பணியாளர் ஓய்வூதியத் திட்டத்திற்கும் (EPS) செல்கிறது. இபிஎஃப் கணக்கில் (EPF Account) டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு ஆண்டு வட்டி கிடைக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதிய நிதியாண்டு தொடங்கியுள்ள நிலையில், உங்கள் பிஎஃப் கணக்கிற்கு வட்டி பணமும் வந்து சேரும். உங்கள் கணக்கில் உங்களுக்கு வர வேண்டிய தொகை டெபாசிட் ஆகிவிட்டதா? இதை தெரிந்துகொள்வது எப்படி? இதற்கான சில வழிமுறைகள் உள்ளன. இவற்றின் மூலம் வீட்டில் இருந்தபடியே பணியாளர்கள் தங்கள் கணக்கில் உள்ள வட்டித் தொகையை பற்றி தெரிந்துகொள்ள முடியும். 


இந்த ஆண்டு அதிக வட்டி கிடைக்கும்


இந்த ஆண்டு, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) கோடிக்கணக்கான சந்தாதாரர்களுக்கு நல்ல செய்தியை வழங்கியுள்ளது. 6 கோடிக்கும் அதிகமான இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) தங்கள் பிஎஃப் கணக்குகளில் உயர்த்தப்பட்ட வட்டியை பெறுவார்கள். பிப்ரவரி 2024 இல், EPFO ​​வட்டி விகிதத்தை 0.10 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது 2023-24 நிதியாண்டிற்கான வட்டி விகிதம் 8.25 சதவீதமாக உள்ளது.


இந்த வழிகளில் பிஎஃப் இருப்பை செக் செய்யலாம்


EPFO சந்தாதாரர்கள் (EPFO Subscribers) ஆன்லைனில் இபிஎஃப் இருப்பை (EPF Balance) எளிதாக சரிபார்க்கலாம். பாஸ்புக் பரிவர்த்தனைகள் மூலம் வட்டிப் பணம் கணக்கிற்கு வந்துள்ளதா என்பதை அவர்கள் எளிதாக அறிந்து கொள்ளலாம். EPF இருப்பை சரிபார்க்க பயனர்களுக்கு பல வழிகள் உள்ளன. பயனர்கள் EPFO ​​போர்ட்டல், மிஸ்டு கால், உமங் செயலி மற்றும் எஸ்எம்எஸ் மூலம் EPF இருப்பை சரிபார்க்கலாம்.


இபிஎஃப்ஓ இணையதளம் (EPFO Website) மூலம் இபிஎஃப் இருப்பை சரிபார்ப்பதற்கான வழிமுறை


- முதலில் https://www.epfindia.gov.in/site_en/index.php என்ற இபிஎஃப் இணையதளத்திற்கு செல்லவும்.


- போர்டலில் லாக் இன் செய்ய வேண்டும்.


- அதில் Our Services என்ற டேபை கிளிக் செய்யவும்.


- அதன் பிறகு அதில் உள்ள For Employees என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.


- அதன் பின்னர் PF Passbook View என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.


- இதில் பணியாளர்கள் இபிஎஃப் கணக்கில் உள்ள மாதாந்திர பங்களிப்புடன் மொத்த இபிஎஃப் இருப்பையும் தெரிந்துகொள்ளலாம். 


உமங்/இபிஎஃப்ஓ செயலி மூலம் பிஎஃப் இருப்பை எவ்வாறு செக் செய்வது?


- உமங் செயலி மூலம் இருப்பை சரி பார்க்க உமங் செயலியை மொபைலில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். 


 - இந்த செயலியில் பணியாளர்கள் 127 வகையான சேவைகளின் பலனைப் பெற முடியும்.  


- உமங் செயலி (Umang App) இந்திய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட ஒரு மொபைல் செயலியாகும்.


- இந்த செயலியானது ஆல்-இன்-ஒன், சிங்கிள், யூனிஃபைட், செக்யூர், மல்டி-சேனல், மல்டி-ப்ளாட்ஃபர்ம், பல மொழி வசதிகளை ஆகியவற்றை பயனர்களுக்கு வழங்குகிறது.


- இருப்பை சரிபார்க்க முதலில் உமங் செயலியில் லாக் இன் செய்ய வேண்டும். 


- அடுத்து View Passbook என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். 


- அதன் பிறகு UAN எண்ணை உள்ளிடவும். 


- உங்கள் மொபைலில் OTP வரும், அதை உள்ளிடவும். 


- அதன் பிறகு, இ-பாஸ்புக்கைக் காண உறுப்பினர் ஐடியைக் கிளிக் செய்ய வேண்டும். 


மேலும் படிக்க | PF கணக்கு இருந்தால் நீங்கள் ஓய்வு பெற்ற பின்பு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்?


SMS மூலம் பிஎஃப் இருப்பை எவ்வாறு செக் செய்வது?


- உங்கள் KYC விவரங்களுடன் UAN ஒருங்கிணைக்கப்பட்டவுடன், இந்த செயல்முறையை பின்பற்றவும்.


- 7738299899 என்ற மொபைல் எண்ணுக்கு SMS அனுப்ப வேண்டும்.


- 'EPFOHO UAN ENG' என்ற வடிவத்தில் SMS -ஐ அனுப்பவும். 


- இதில் கடைசி மூன்று எழுத்துக்கள் மொழியை குறிக்கும். தமிழுக்கு EPFOHO UAN TAM என அனுப்ப வேண்டும்.


- உங்களின் UAN செயலில் இருந்து, உங்கள் வங்கி கணக்கு, ஆதார் எண் மற்றும் PAN உடன் இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே SMS அனுப்பி இந்த விவரத்தை அறிய முடியும். உங்கள் வங்கிக் கணக்கை, ஆதார் மற்றும் பான் உடன் உங்கள் UAN ஐ இணைக்கவில்லை என்றால், SMS மூலம் உங்கள் இருப்பைச் சரிபார்க்க, UAN உடன் eKYC ஐ முடிக்க வேண்டும்.


மிஸ்டு கால் மூலம் பிஎஃப் இருப்பை எவ்வாறு செக் செய்வது?


- உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 9966044425 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் (Missed Call) கொடுக்கவும். 


- மிஸ்டு கால் கொடுத்த பின்னர், உங்கள் PF விவரங்களுடன் SMS ஒன்றைப் பெறுவீர்கள்.


- மொபைல் எண் சேவை மூலம் EPF இருப்புச் சரிபார்ப்பைப் பெற நீங்கள் எந்தக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.


மேலும் படிக்க | கேஸ் சிலிண்டர் முதல் வங்கிக் கட்டணம் வரை... இந்த விதிகள் மே 1 முதல் மாறும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ