EPF Interest Amount: அலுவலக பணிகளில் இருப்பவர்கள் மாதா மாதம் தங்கள் ஊதியத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்கிறார்கள். அதே அளவு தொகையை நிறுவனமும் டெபாசிட் செய்கிறது. இந்த தொகைக்கு பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO வட்டியும் அளிக்கின்றது. சமீபத்தில் EPFO பிஎஃப் தொகைக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி 8.25 சதவிகிதமாக அதிகரித்தது. இதற்கான ஒப்புதலும் அளிக்கப்பட்டுள்ள நிலையில், கோடிக்கணக்கான இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) இந்த தொகை எப்போது தங்கள் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் என காத்திருக்கிறார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பல உறுப்பினர்கள் EPFO -ஐ டேக் செய்து சமூக ஊடக தளங்களில் இது குறித்து கேட்டும் வருகிறார்கள். 2023-24 நிதியாண்டுக்கான வட்டி தங்கள் இபிஎஃப் கணக்கில் (EPF Account) எப்போது டெபாசிட் செய்யப்படும் என இவர்கள் வினவியுள்ளனர். 


இதற்கு தனது சமூக ஊடக பதிவிலேயே பதிலளித்த EPFO, இபிஎஃப் உறுப்பினர்களின் கணக்குகளில் இபிஎஃப் வட்டித்தொகையை (EPF Interest Amount) டெபாசிட் செய்யும் செயல்முறை நடந்துவருகிறது என கூறியுள்ளது. இது மட்டுமின்றி எந்த ஒரு உறுப்பினருக்கும் வட்டித்தொகையை பொறுத்தவரையில் எந்த வித நஷ்டமும் இல்லாமல் இருப்பதை EPFO உறுதி செய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. 


பிஎஃப் உறுப்பினர்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் இபிஎஃப் இருப்பை (EPF Balance) செக் செய்யலாம். ஆன்லைனில் EPFO இணையதளம் அல்லது உமங் செயலி மூலமாகவும், ஆஃப்லைனில் எஸ்எம்எஸ் அல்லது மிஸ்ட் கால் கொடுத்தும் இந்த விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.


இபிஎஃப்ஓ இணையதளம் (EPFO Website) மூலம் இபிஎஃப் இருப்பை சரிபார்ப்பதற்கான வழிமுறை


- முதலில் https://www.epfindia.gov.in/site_en/index.php என்ற இபிஎஃப் இணையதளத்திற்கு செல்லவும்.


- போர்டலில் லாக் இன் செய்ய வேண்டும்.


- அதில் Our Services என்ற டேபை கிளிக் செய்யவும்.


- அதன் பிறகு அதில் உள்ள For Employees என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.


- அதன் பின்னர் PF Passbook View என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.


- இதில் பணியாளர்கள் இபிஎஃப் கணக்கில் உள்ள மாதாந்திர பங்களிப்புடன் மொத்த இபிஎஃப் இருப்பையும் தெரிந்துகொள்ளலாம். 


மேலும் படிக்க | வருகிறது மலிவான ஏசி, ஃப்ரிட்ஜ், டிவி, வாஷிங் மெஷின்.. முகேஷ் அம்பானியின் புதிய பிஸ்னஸ்!


UMANG App மூலம் பிஎஃப் இருப்பை எவ்வாறு செக் செய்வது?


உமங் செயலி மூலம் இருப்பை சரி பார்க்க உமங் செயலியை மொபைலில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். இந்த செயலியில் பணியாளர்கள் 127 வகையான சேவைகளின் பலனைப் பெற முடியும்.  உமங் செயலி (Umang App) இந்திய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட ஒரு மொபைல் செயலியாகும். இந்த செயலியானது ஆல்-இன்-ஒன், சிங்கிள், யூனிஃபைட், செக்யூர், மல்டி-சேனல், மல்டி-ப்ளாட்ஃபர்ம், பல மொழி வசதிகளை ஆகியவற்றை பயனர்களுக்கு வழங்குகிறது. இருப்பை சரிபார்க்க முதலில் உமங் செயலியில் லாக் இன் செய்ய வேண்டும். அடுத்து View Passbook என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். அதன் பிறகு UAN எண்ணை உள்ளிடவும். உங்கள் மொபைலில் OTP வரும், அதை உள்ளிடவும். அதன் பிறகு, இ-பாஸ்புக்கைக் காண உறுப்பினர் ஐடியைக் கிளிக் செய்ய வேண்டும். 


SMS மூலம் பிஎஃப் இருப்பை எவ்வாறு செக் செய்வது?


- உங்கள் KYC விவரங்களுடன் UAN ஒருங்கிணைக்கப்பட்டவுடன், இந்த செயல்முறையை பின்பற்றவும்.


- 7738299899 என்ற மொபைல் எண்ணுக்கு SMS அனுப்ப வேண்டும்.


- 'EPFOHO UAN ENG' என்ற வடிவத்தில் SMS -ஐ அனுப்பவும். 


- இதில் கடைசி மூன்று எழுத்துக்கள் மொழியை குறிக்கும். தமிழுக்கு EPFOHO UAN TAM என அனுப்ப வேண்டும்.


- உங்களின் UAN செயலில் இருந்து, உங்கள் வங்கி கணக்கு, ஆதார் எண் மற்றும் PAN உடன் இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே SMS அனுப்பி இந்த விவரத்தை அறிய முடியும். உங்கள் வங்கிக் கணக்கை, ஆதார் மற்றும் பான் உடன் உங்கள் UAN ஐ இணைக்கவில்லை என்றால், SMS மூலம் உங்கள் இருப்பைச் சரிபார்க்க, UAN உடன் eKYC ஐ முடிக்க வேண்டும்.


மிஸ்டு கால் மூலம் பிஎஃப் இருப்பை எவ்வாறு செக் செய்வது?


உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 9966044425 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் (Missed Call) கொடுத்தும் பிஎஃப் இருப்பை தெரிந்து கொள்ளலாம். 


மேலும் படிக்க | உணவகத்தில் அதிகம் சாப்பிட்டாலும் குறைவாக பில் கட்டலாம்! ‘இதை’ செய்து பாருங்கள்..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ