உங்கள் பெற்றோருக்கான சிறந்த மருத்துவ காப்பீட்டை தேர்ந்தெடுக்க...!
Health Insurance Policy for Parents: வயது முதிர்வு காரணமாக, காப்பீட்டு நிறுவனங்கள் காப்பீட்டில் பல நிபந்தனைகளை சேர்க்கின்றன. எனவே, காப்பீடு வாங்கும் போது குறிப்பிட்ட சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.
மருத்துவமனைக்கு சாதாரணமாக சென்றாலே, ஆயிரங்களில் செல்வாகும் இந்த கால கட்டத்தில், மருத்துவ காப்பீடு என்பது அவசியமாகிறது. அதிலும் மூத்த குடிமக்களுக்கான மருத்துவ தேவை என்பது எப்போதும் ஏற்படலாம். காப்பீட்டு நிறுவனங்களும் இன்றைய காலத்திற்கு ஏற்ப மூத்த குடிமக்களுக்கு ஏற்ற வகையிலான பல பாலிசி திட்டங்களை வழங்குகின்றன. இதன் மூலம் மூத்த குடிமக்கள், அதிகரித்து வரும் மருத்துவ செலவுகளை எளிதாக ஈடுகட்ட முடியும் என்பது இதன் மிகப் பெரிய நன்மை. எனினும், வயது முதிர்வு காரணமாக, காப்பீட்டு நிறுவனங்கள் காப்பீட்டில் பல நிபந்தனைகளை சேர்க்கின்றன. எனவே, காப்பீடு வாங்கும் போது குறிப்பிட்ட சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.
காத்திருக்கும் காலம் (Waiting Period)
பல காப்பீட்டு நிறுவனங்கள் நாள்பட்ட நோய்கள் கொண்ட மூத்த குடிமக்களுக்கு நீண்ட காத்திருப்பு காலத்தை வழங்குகின்றன. இத்தகைய சூழ்நிலையில், மூத்த குடிமக்களுக்கான சுகாதார காப்பீடு எடுத்துக் கொள்ளும்போது, நாள்பட்ட நோய்களுக்கான காத்திருப்பு காலத்தை நீங்கள் எப்போதும் சரிபார்த்து, குறைந்தபட்ச காத்திருப்பு காலத்தைக் கொண்ட பாலிசியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஏனென்றால், காத்திருப்பு காலத்தில் ஏற்படும் மருத்துவ செலவுகள் காப்பீட்டில் சேர்க்கப்படாது.
இணை கட்டணம் (Co-payment)
மூத்த குடிமக்களுக்கான பல ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகள் co-payment என்னும் இணைக் கொடுப்பனவுகளுடன் வருகின்றன. இதன் பொருள் உங்கள் கிளைம் வரும்போதெல்லாம், அதில் ஒரு பகுதியை நீங்களே செலுத்த வேண்டும். உதாரணமாக, ஒருவரின் உடல்நலக் காப்பீட்டில் 20 சதவீதம் கோ-பேமெண்ட் இருந்தால், க்ளைம் வரும்போது தொகையில் 20 சதவீதத்தைச் நீங்கள் செலுத்த வேண்டும். நீங்கள் காப்பீட்டைத் தேர்ந்தெடுக்கும் போது, எப்போதும் குறைந்தபட்ச கோ-பேமெண்ட் உள்ள காப்பீட்டை தேர்ந்தெடுக்க வேண்டும்.
புதுப்பிக்கத்தக்க அம்சம் (Renewable Feature)
பல உடல்நலக் காப்பீட்டு நிறுவனங்கள் புதுப்பித்தலுக்கு வயது வரம்பை வழங்குகின்றன (குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு). இந்த வரம்புக்குப் பிறகு உங்கள் பாலிசியைப் புதுப்பிக்க முடியாது. அத்தகைய சூழ்நிலையில், வயது வரம்பு இல்லாத மூத்த குடிமக்களுக்கான சுகாதார காப்பீட்டை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். அதுவே எப்போதும் சிறந்தது.
மருத்துவமனை நெட்வொர்க் (hospital network)
எந்தவொரு உடல்நலக் காப்பீட்டிலும், நீங்கள் உடல் நலக் காப்பீடு வைத்திருக்கும் நிறுவனத்தின் மருத்துவமனை நெட்வொர்க்கை எப்போதும் சரிபார்க்க வேண்டும். அதன் நெட்வொர்க்கில் உள்ள மருத்துவமனை உங்களுக்கு அருகில் உள்ளதா இல்லையா? நல்ல தரமான மருத்துவமனையா போன்ற விஷயங்களை ஆராய்ந்து தெரிது கொள்ள வேண்டும். நல்ல மருத்துவமனை நெட்வொர்க் கொண்ட அத்தகைய உடல் நலக் காப்பீட்டிற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
நோய்களுக்கான கவரேஜ்
காப்பீட்டில் எந்த எந்த நோய்கள் அடங்கும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஏனென்றால், சில காப்பீட்டு நிறுவனங்கள், கண்புரை அறுவை சிகிச்சை, பற்களுக்கான சிகிச்சை போன்றவற்றுக்கு கவரேஜ் கொடுப்பதில்லை. வயதனாவர்களுக்கு கண்புரை மற்றும் பற்களுக்கான சிகிச்சை என்பது பொதுவாக ஏற்படும் பிரச்சனைகள். எனவே இதற்கான கவரேஜ் உள்ளதா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதே போல் நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்றவை இருந்தால், அதற்கேற்ற வகையான காப்பீட்டை தேர்வு செய்ய வேண்டும்.
மேலும் படிக்க | முதுமையில் ஏற்படும் மருத்துவ செலவுகளை சமாளிக்க... சில டிப்ஸ் இதோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ