பொருளாதார நெருக்கடியில் இருப்பவர்களுக்கு கிரெடிட் கார்டுகள் மிகவும் உதவிகரமானதாக இருந்து வருகிறது, உங்களிடம் போதுமான பணம் இல்லாத போது ​​கிரெடிட் கார்டுகள் வாங்குதல் மூலம் நீங்கள் பணம் செலுத்தி கொள்ளலாம்.  கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் செலவின சக்தியும் அதிகரிக்கப்படுகிறது, ஏனெனில் உங்கள் நிலுவையைச் செலுத்த பொதுவாக 30 நாட்கள் இருக்கும்.  கிரெடிட் கார்டுகள் உதவிகரமானதாக இருந்தாலும் அதன் தவணை தொகையை சரியான தேதிக்குள் செலுத்திவிட வேண்டும், இல்லாவிட்டால் சிக்கல் நமக்கு தான்.  பல கிரெடிட் கார்டு பயனர்கள் தங்கள் கிரெடிட் கார்டு கட்டணங்களை உரிய காலக்கெடுவிற்குள் செலுத்த மறந்து விடுகின்றனர்.  இதன் காரணமாக மக்கள் அபராதம் சேர்த்து கூடுதலாக பணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டு விடுகிறது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | NRI ஆதார் அட்டைக்கு எப்படி விண்ணப்பிப்பது? முழு செயல்முறை இதோ


பெரும்பாலான கிரெடிட் கார்டுகளுக்கு ஆண்டுதோறும் 36% வரை வட்டி விகிதங்கள் இருப்பதால், உங்கள் கிரெடிட் கார்டு கடனைக் குறிப்பிட்ட தேதிக்கு முன்பே செலுத்துமாறு நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.  கிரெடிட் கார்டு பயன்படுத்தி ரூ.10,000-க்கு மேல் மின்சாதனங்கள், மரச்சாமான்கள், வாகனங்கள் போன்ற எதையும் வாங்கும்போது நீங்கள் அதை இஎம்ஐ ஆக மாற்றலாம்.  இஎம்ஐ கணக்கிடும்போது வங்கியின் வட்டி விகிதம், நீங்கள் தேர்ந்தெடுக்கும் காலம் மற்றும் நீங்கள் செலுத்தும் முன்பணம் அனைத்தும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.  உதாரணமாக நீங்கள் ரூ. 20,000 மதிப்புள்ள ஒரு மொபைலை முன்பணமாக ரூ. 10,000 செலுத்தி வாங்குகிறீர்கள் என்றால் மீதமுள்ள ரூ. 10,000 தொகையை ஒரு வருட தவணையில் 12% வட்டி விகிதத்தில் மாதந்தோறும் ரூ.1200 என்கிற அளவில் தவணையாக செலுத்தலாம்.


கிரெடிட் பயன்படுத்தும்போது நினைவில் வைத்திருக்க வேண்டிய விஷயங்கள்:


- ஒவ்வொரு கிரெடிட் கார்டும் இஎம்ஐ ஆப்ஷனை வழங்குவதில்லை.
- இஎம்ஐ பர்ச்சேஸ் மூலம் உங்கள் கார்டின் லிமிட் குறைக்கப்படும். 
- இஎம்ஐ பர்ச்சேஸ் மூலம் உங்கள் கார்டின் லிமிட் குறைக்கப்படும். 
- ஆன்லைன் பர்ச்சேஸை தேர்ந்தெடுக்கலாம்.
- முன்கூட்டியே செலுத்தும் அபராதத் தள்ளுபடிக்கு நீங்கள் தகுதி பெறலாம்.
- சரியான நேரத்தில் அனைத்து பேமென்டையும் செலுத்த வேண்டும்.


மேலும் படிக்க | ஆதார் அட்டையை தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம், உடனே இதை செய்யுங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ