ஆதார் அட்டையை தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம், உடனே இதை செய்யுங்கள்!

ஆதார் அட்டையை தொலைத்துவிட்டாலோ அல்லது தவறாக வைத்திருந்தாலோ, யூஐடிஏஐ வழங்கும் சேவைகள் மூலம் அதனை நீங்கள் மீட்டெடுக்கலாம்.   

Written by - RK Spark | Last Updated : Mar 25, 2023, 06:59 AM IST
  • யூஐடிஏஐ போர்டல் மூலமாகவும் ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.
  • ஆதார் பதிவு ஐடி(இஐடி) நியாபகம் இல்லையென்றாலும் ஆதார் அட்டைக்கு மீண்டும் விண்ணப்பிக்கலாம்.
  • 12 இலக்க எண் கொண்ட ஆதார் அட்டை முக்கியமான அடையாள ஆவணமாக விளங்குகிறது.
ஆதார் அட்டையை தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம், உடனே இதை செய்யுங்கள்!

இந்திய குடிமகன்களுக்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் அரசு வழங்கும் ஆதார் அட்டை  முதன்மை அடையாளச் சான்றுகளில் ஒன்றாக விளங்குகிறது.  இந்த 12 இலக்க எண் கொண்ட ஆதார் அட்டையில் தனிநபரின் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் பயோமெட்ரிக் தரவுகள் சேமிக்கப்பட்டுள்ளது.  வங்கி சேவை முதல் எல்பிஜி சிலிண்டருக்கு விண்ணப்பிப்பது வரையிலான பல சேவைகளுக்கும் ஆதார் அட்டை முக்கியமான ஆவணமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.  வருமான வரிப் பதிவுகள், வங்கிக் கணக்குகள், காப்பீட்டுக் கொள்கைகள், பரஸ்பர நிதிகள், வருங்கால வைப்பு நிதிகள் மற்றும் ஓய்வூதியக் கணக்குகள் போன்ற முதலீட்டுப் பதிவுகளுடன் ஆதார் அட்டையை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆதார் அட்டையை தொலைத்துவிட்டாலோ அல்லது தவறாக வைத்திருந்தாலோ, யூஐடிஏஐ வழங்கும் சேவைகள் மூலம் அதனை நீங்கள் மீட்டெடுக்கலாம்.  உங்கள் ஆதார் பதிவு ஐடி (இஐடி) உங்களுக்கு நியாபகம் இல்லையென்றாலும் பதிவுசெய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணுக்கு விவரங்களை அனுப்ப யூஐடிஏஐ-க்கு நீங்கள் கோரிக்கை வைக்கலாம்.  இதுதவிர யூஐடிஏஐ போர்டல் மூலமாகவும் நீங்கள் ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.  ஆதார் அட்டையை அப்டேட் செய்யும்போதோ அல்லது மீண்டும் விண்ணப்பிக்கும்போதோ நீங்கள் சில ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் படிக்க | EPFO Recruitment: 80 ஆயிரத்துக்கும் மேல் சம்பளம்.. 12ம் வகுப்பு படித்திருந்தால் போதும்! - என்ன வேலை தெரியுமா?

தேவையான ஆவணங்கள்:

- ரேஷன் கார்டு/ பாஸ்போர்ட்/ பான் கார்டு/ ஓட்டுநர் உரிமம்

- வங்கிக் கணக்கு விவரங்கள்/பாஸ்புக், மின்சாரக் கட்டணம், தண்ணீர்க் கட்டணம், தொலைபேசிக் கட்டணம், சொத்து வரி ரசீது, கிரெடிட் கார்டு அறிக்கை போன்றவை.

- பிறப்புச் சான்றிதழ், ஏதேனும் அரசு வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட மதிப்பெண் தாள், பான் கார்டு.

ஆன்லைனில் ஆதார் அட்டை பெறுவதற்கான வழிகள்:

1) www.uidai.gov.in என்கிற யூஐடிஏஐ-ன் அதிகாரபூர்வ பக்கத்தில் லாக் இன் செய்ய வேண்டும்.

2) 'Retrieve Lost UID/EID' என்கிற ஆப்ஷனை கிளிக் செய்ததும், ஒரு புதிய பக்கம் திறக்கும்.

3) இப்போது பெயர், மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் போன்ற தேவையான விவரங்களை உள்ளிட வேண்டும்.

4) ஆதார் எண்ணை மீட்டெடுக்க 'ஆதார் எண்ணை (யுஐடி) மீட்டெடுக்கவும்' அல்லது உங்கள் பதிவு எண்ணை மீட்டெடுக்க விரும்பினால், 'ஆதார் பதிவு எண்ணை (இஐடி) மீட்டெடுக்கவும்' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

5) சென்ட் ஓடிபி என்பதை கிளிக் செய்ததும், உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஆறு இலக்க ஓடிபி கிடைக்கும்.  செக்யூரிட்டி கோட், ஓடிபி-ஐ உள்ளிட்டு சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.

6) வெரிஃபிகேஷன் முடிந்ததும் நீங்கள் தேர்ந்தெடுத்த மீடியதை பொறுத்து உங்கள் ஆதார் எண் அல்லது உங்கள் பதிவு எண் மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலோ அனுப்பப்படும்.

ஆதார் அட்டையை ஆன்லைனில் டவுன்லோடு செய்வதற்கான வழிகள்:

1) www.uidai.gov.in என்கிற யூஐடிஏஐ-ன் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று, 'டவுன்லோடு ஆதார்' என்பதைக் கிளிக் செய்யவும்.

2) ஆதார் எண் அல்லது, பதிவு ஐடி அல்லது விர்ச்சுவல் ஐடியை உள்ளிட வேண்டும்.

3) கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு, 'சென்ட் ஓடிபி ' என்பதைக் கிளிக் செய்ததும், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி அனுப்பப்படும்.

4) ஓடிபி-ஐ உள்ளிட்டு 'வெரிஃபை அண்ட் டவுன்லோடு' என்பதைக் கிளிக் செய்யவும்.

மேலும் படிக்க | பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து பேச்சே இல்லை... அரசு ஊழியர்களின் நிலை என்ன?

ஆதார் அட்டையை ஆஃப்லைனில் பெறுவதற்கான வழிகள்:

1) யூஐடிஏஐ-ன் கட்டணமில்லா எண்ணை 1800-180-1947 அல்லது 1947க்கு டயல் செய்யவும்.

2) IVR-ன் படி பின்பற்றி நிர்வாகியுடன் பேசுவதற்கான ஆப்ஷனை தேர்வு செய்யவும்.

3) ஆதார் அட்டையின் நகலுக்கு நிர்வாகியிடம் கோரிக்கை வைக்க வேண்டும், அடையாளத்தைச் சரிபார்க்க அவர் உங்களிடம் சில கேள்விகளைக் கேட்பார்.  

4) ஒரு நகல் ஆதார் அட்டை குறிப்பிடப்பட்ட குடியிருப்பு முகவரிக்கு தபால் மூலம் அனுப்பப்படும்.

மொபைல் எண்ணுடன் உங்கள் ஆதார் பதிவு செய்யப்படவில்லை என்றால், நீங்கள் அருகிலுள்ள ஆதார் பதிவு மையத்திற்குச் சென்று நகல் ஆதாரைக் கோர வேண்டும்.  யூஐடிஏஐ அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆதார் அட்டை பதிவுக்கான சந்திப்பை பதிவு செய்வதற்கான அம்சத்தை வழங்குகிறது, இந்த மையங்கள் தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை திறந்திருக்கும்.

1) ஆதார் பதிவு மையத்திற்குச் சென்று ஆதார் திருத்தப் படிவத்தை நிரப்ப வேண்டும்.

2) உங்கள் ஆதார் எண் அல்லது பதிவு எண் உங்களுக்குத் தெரிந்தால், நகல் ஆதாரை வழங்க பதிவாளரிடம் கோரலாம்.

3) நிர்வாகி உங்கள் பயோமெட்ரிக்ஸை சரிபார்த்து, நகல் ஆதாருக்கான கோரிக்கையை வைப்பார்.

4) கோரிக்கையை வெற்றிகரமாகச் செயல்படுத்திய பிறகு, உங்கள் பதிவு செய்யப்பட்ட அஞ்சல் முகவரிக்கு ஆதார் அனுப்பப்படும்.

மேலும் படிக்க | Old Pension Scheme: சுமுகமான முறையை ஆராயும் அரசு, உத்தரவாதமான வருமானம் கிடைக்குமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

More Stories

Trending News