How To Earn Money Via Social Media News In Tamil : உலகம், தற்போது டிஜிட்டல் யுகமாக மாறிவிட்டது. செய்தி சேனல்கள்-செய்தி நிறுவனங்களை விட ட்விட்டர், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட தளங்கள் மிகவும் வேகமாக உள்ளன. இதற்கு காரணம், சமூக வலைதளங்களை உபயாேகிப்பவர்கள் அதிகமாகிவிட்டனர் என கூறப்படுகிறது. அது மட்டுமல்ல, பல துறைகளில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் சமூக வலைதளங்கள் வழிவகைகளை ஏற்படுத்தியிருக்கின்றன. இதன் மூலமாக பலருக்கு திரைத்துறையில் வேலை வாய்ப்புகள் கிடைக்கிறது, ஒரு சிலர் சில பிராண்டுகளுக்கு விளம்பர தூதுவர்களாகவே மாறுகின்றனர். இப்படி, பல லட்சம் பேர் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களில் இன்ஃப்ளுவன்சர்ஸ் அல்லது கண்டன்ட் கிரியேட்டர்ஸ் (Influencers or Content Creators ) மாறி பல வகைகளில் சம்பாதிக்கின்றனர். இப்படி ஒரு ஆளாக நீங்களும் மாறினால் நீங்கள்தான் உங்களுக்கு முதலாளி! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Content Creators என்றால் யார்?


எந்த விஷயத்தை எடுத்தாலும் அதை பார்வையாளர்கள் கூர்ந்து நோக்கும் வகையில் உருவாக்குபவரே Content Creator. இவர்கள் உருவாக்கும்/கூறும் விஷயங்கள் சினிமா,படிப்பு, உணவு என எது குறித்த விஷயமாக வேண்டுமானாலும் இருக்கலாம். இதை அவர்கள், வீடியோவாக/போட்டோவாக/ஆடியோவாக/எழுத்து மூலமாக உருவாக்குவர். இதற்காக ப்ளாக் இயங்குதளங்களும் இருக்கின்றன. யூடியூப், இன்ஸ்டாகிராம், டிக் டாக் (இந்தியாவில் இல்லை), ஃபேஸ்புக், ஷேர்சாட் என பல்வேறு சமூக வலதளங்கள் இருக்கின்றன. இந்த ஆண்டின் கணக்கெடுப்பின் படி, இந்தியாவில் மட்டும் மொத்தம் 80 மில்லியன் கண்டன்ட் கிரியேட்டர்ஸ் இருக்கின்றனராம். 


மேலும் படிக்க | எல்பிஜி சிலிண்டரை இலவசமாகப் பெறலாம்.. எப்படி என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்


பணம் சம்பாதிப்பது எப்படி? 


ஆன்லைனில் கற்றுக்கொடுப்பது..


இப்படி கண்டண்ட் கிரியேட்டராக இருப்பவர்கள், கண்டிப்பாக ஏதேனும் ஒரு துறையில் கை தேர்ந்தவர்களாக இருப்பர். அதை வைத்துதான் கண்டண்டும் செய்வர். எனவே, எந்த துறையில் நிபுணத்துவம் வாய்ந்தவராக இருக்கிறாரோ, அந்த துறை குறித்து ஆன்லைனில் பிறருக்கு சொல்லிக்கொடுக்கலாம். 


ஆலோசகர்:


உங்கள் துறை சார்ந்து உங்களிடம் சந்தேகம் கேட்பவர்களுக்கு ஆலோசனை வழங்குபவராக மாறலாம். இதற்காக, குறிப்பிட்ட தொகையை கட்டணமாக நியமிக்கலாம். இப்படி நீங்கள் உங்களை பிரபலப்படுத்தி கொண்டீர்கள் என்றால், கண்டிப்பாக உங்கள் துறை சார்ந்து உள்ளவர்களுக்கு நீங்கள் வழிக்காட்டியாக செயல்படலாம். 


பிராண்ட் பார்ட்னர்ஷிப்:


ஒரு சில பிராண்டுகள், கண்டன் கிரியேட்டர்ஸை நியமித்து அவர்களின் பொருட்களை ப்ரமோட் செய்ய சொல்லி கூறுவர். இதனால் உங்களுக்கு இரு வகையில் லாபம் கிடைக்கலாம். ஒன்று, அவர்கள் அனுப்பும் பொருட்களை உங்களையே எடுத்துக்கொள்ள சொல்லி, அதற்காக நீங்கள் வீடியோ அல்லது ப்ளாக் கிரியேட் செய்ய சொல்லலாம். அல்லது, அவர்கள் நீங்கள் உருவாக்கும் கண்டண்டிற்காக நீங்கள் கேட்கும் தொகையை உங்களுக்கு வழங்குவர். எப்படி பார்த்தாலும் அது உங்களுக்கு லாபகரமானதாக அமையும். 


கலையை விற்கலாம்:


கலை துறை சார்ந்து content உருவாக்குபவர்கள், அதை விற்க கூடியதாக உருவாக்கலாம். புகைப்படங்கள், கையால் வரைந்த ஓவியங்கள், கைவினை பொருட்கள் ஆகியவை இப்படி விற்கப்படும் பொருட்களுள் அடங்கும். 


யூடியூப் சேனல்:


ஆன்லைனில் பணம் சம்பாதிப்பதற்கு இன்னொரு எளிய, உபயோகரமான வழி முறைகளுள் ஒன்று, யூடியூப் சேனலை தொடங்குவது. இதன் மூலம் உங்கள் வீடியோ பிரபலமானால் இதன் மூலம் வருமானம் கிடைக்கும். 2020ஆம் ஆண்டில் மட்டும், உலகளவில் மொத்தம் 303 மில்லியல் கிரியேட்டர்ஸ் உள்ளதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. 


(பொறுப்பு துறப்பு: இந்த செய்தி, தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. பொதுவான தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள இந்த குறிப்புகளை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக துறை சம்பந்தப்பட்டவர்களிடம் ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | டாப் பணக்காரர்களின் லிஸ்டில் இடம் பெற்ற 4 மாத குழந்தையின் பெயர்! அது எப்படிப்பா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ