Free LPG Cylinder On Holi : ஹோலி பண்டிகை இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு வண்ணமயமான பண்டிகை ஆகும். பனி காலத்திற்கு விடையளித்து, வெயில் காலத்திற்கு வரவேற்புரை வழங்கும் காலத்தில் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். அந்த வகையில் ஹோலி பண்டிகை வருகிற மார்ச் 25 ஆம் தேதி வரப்போகிறது. இதையொட்டி, ஒவ்வொரு வீட்டிலும் ஏராளமான உணவுகள் தயாரிக்கப்படும், மேலும் விருந்தினர்களின் வருகை தொடர்ந்து இருக்கும். இதுபோன்ற சூழ்நிலையில், வீட்டில் உள்ள கேஸ் சிலிண்டர் தீர்ந்துவிடக்கூடாது என்பதற்காக, நாம் கூடுதல் சிலிண்டர்களை முன்கூட்டியே வாங்கி வைத்திருப்போம். பணவீக்கம் அதிகரித்துள்ள இந்த காலகட்டத்தில், ஒரு சிலிண்டரை மட்டும் வாங்கும் அளவுக்கு மக்களிடம் பட்ஜெட் இல்லை. அந்த வகையில் பொதுமக்களின் இந்த கவலையை தீர்க்க உத்தரபிரதேச மாநிலத்தில் சிலிண்டர்களை இலவசமாக பெறலாம். பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் இந்த நன்மையைப் பெறலாம். இதற்கு நீங்கள் உத்தரபிரதேசத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். இதன் பலனைப் பெறுவது எப்படி என்பதை தெரிந்துக்கொள்வோம்.
கடந்த ஆண்டு, அதாவது நவம்பர் 2023 ஆம் ஆண்டில், உத்தரபிரதேசத்தின் யோகி ஆதித்யநாத் அரசு இலவச எல்பிஜி நிரப்பும் பிரச்சாரத்தைத் தொடங்கியது. இதன் கீழ், மக்கள் ஆண்டுக்கு இரண்டு முறை இலவச எல்பிஜி சிலிண்டரைப் பெற்று வருகின்றனர். முன்னதாக தீபாவளி பண்டிகையன்று பயனாளிகளுக்கு இலவச எல்பிஜி சிலிண்டர்களை அரசு வழங்கியது.
இலவச எல்பிஜி சிலிண்டர் பெறுவது எப்படி? | How to get free LPG cylinder?
நீங்கள் உத்தரபிரதேச மாநிலத்தில் வசிப்பவராக இருந்தால், இந்த திட்டத்தின் பலன்களைப் பெற்றுக் கொள்ளலாம். நீங்கள் இலவச எல்பிஜி சிலிண்டரைப் பெற விரும்பினால், உங்கள் வங்கிக் கணக்கை ஆதார் அட்டையுடன் கட்டாயம் இணைக்க வேண்டும். இந்த திட்டம் பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த 2016 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
மேலும் படிக்க | EPF கணக்கின் இருப்பை தெரிந்துகொள்ள ஈசியான 4 வழிகள்
செயல்முறை என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள் (PM Ujjwala Yojana/PMUY Registration Process)
முதலில் உஜ்வாலா எரிவாயு இணைப்புக்கு பதிவு செய்ய வேண்டும். எப்படி விண்ணப்பிப்பது என்பதை பார்ப்போம்.
* இந்தத் திட்டத்தின் பலனைப் பெற, முதலில் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
* பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா என்கிற விருப்பம் தோன்றும், அதைக் கிளிக் செய்து படிவத்தைப் பதிவிறக்கவும்.
* படிவத்தில் தேவையான தகவல்களை முழுமையாக நிரப்பவும்.
* உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள எல்பிஜி மையத்திற்குச் சென்று படிவத்தை சமர்ப்பிக்கவும்.
* இதனுடன், அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
* ஆவண சரிபார்ப்புக்குப் பிறகு, எல்பிஜி கேஸ் இணைப்பு வழங்கப்படும்.
என்ன ஆவணங்கள் தேவைப்படும் (Documents Required)
ஆதார் அட்டை
கைபேசி எண்
பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
வயது சான்றிதழ்
பிபிஎல் பட்டியலில் பெயர்
ரேஷன் கார்டின் நகல்
bpl அட்டை
வங்கியின் புகைப்பட நகல்
யார் யார் விண்ணப்பிக்க முடியும்?
இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர் ஒரு பெண்ணாகவும், அவரது வயது 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
பிபிஎல் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
பிபிஎல் கார்டு மற்றும் ரேஷன் கார்டு இருக்க வேண்டும்.
இலவச சிலிண்டருடன் மானியம் வழங்கப்படும்
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ், இதுவரை 9 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு இலவச எல்பிஜி இணைப்பு வழங்கப்பட்டுள்ளன. இதன் கீழ், எல்பிஜி சிலிண்டர் இலவசமாக கிடைப்பது மட்டுமின்றி, ஒவ்வொரு சிலிண்டருக்கும் 300 ரூபாய் மானியமும் வழங்கப்படும்.
மேலும் படிக்க | இரண்டு வங்கி கணக்கிற்கு மேல் வைத்துள்ளீர்களா? இந்த விதிகளை தெரிஞ்சுக்கோங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ