How To Increase Interest Rate In Savings Bank Account: தனிநபருக்கு, அவர்களுக்கான அடையாள அட்டைகள் வாங்குவது எவ்வளவு முக்கியமானதாக இருக்கிறதோ, அதே போல அவர்கள் சேமிப்பு கணக்குகளை தொடங்கி, அதை ஆக்டிவாக வைத்துக்கொள்வதும் முக்கியமானதாக பார்க்கபடுகிறது. பணத்தை சேமிக்க, பண பரிவர்த்தனைகளுக்கு உதவ, அரசாங்கத்தின் சலுகைகளை பெற்றுக்கொள்ள என பல விஷயங்களுக்காக சேமிப்பு கணக்குகள் உருவாக்கப்படுகின்றன. இந்த சேமிப்பு கணக்குகளில் நாம் நிதி வைப்பதன் மூலமாக குறிப்பிட்ட தொகையை வட்டியாக பெற முடியும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சேமிப்புக் கணக்கு என்பது தற்போது ஒரு பொதுவான மற்றும் அடிப்படையான நிதிக் கருவியாக பார்க்கப்படுகிறது. பொதுவாக, மக்கள் தங்கள் நிதிப் பயணத்தின் தொடக்கத்தில் இந்த சேமிப்பு கணக்குகளை ஆரம்பிக்கின்றனர். ஒரு சேமிப்புக் கணக்கு, பெரும்பாலும் முதலீட்டாளரின் முதல் வங்கிக் கணக்காகும், இது வழக்கமான பரிவர்த்தனைகளுக்கு பணத்தை நிர்வகிக்க உதவுகிறது. 


வட்டி பெறுவது எப்படி? 


சேமிப்புக் கணக்குகளில், வட்டியை தினசரி, மாதாந்திர அல்லது காலாண்டுக்கு ஒருமுறை கூட்ட வாய்ப்பிருக்கிறது. மேலும் அதுவரை சம்பாதித்த வட்டிக்கும் அதற்கு மேற்பட்ட வட்டியைப் பெறலாம். முதலீட்டாளர்கள் இருப்பில் எவ்வளவு அடிக்கடி வட்டி சேர்க்கப்படுகிறதோ, அவ்வளவு வேகமாக அவர்களின் சேமிப்பும் வளரும்.


அதிக வட்டி பெறுவதற்கான டிப்ஸ்:


அதிக வட்டி விகிதம்:


சேமிப்புக் கணக்கிலிருந்து அதிகபட்ச வருமானத்தைப் பெறுவதற்கு சிறந்த வழிகளில் ஒன்று, அதிக வட்டி விகிதத்தை வழங்கும் வங்கியில் கணக்கைத் திறப்பதாகும். இந்த வட்டியின் அடிப்படையல், வருமானமும் இரட்டிப்பாகும். இதனால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு நிறைய பணத்தை சேமிக்க வங்கியில் கணக்கு வைத்திருப்பவருக்கு உதவுகிறது. பெரும்பாலான வங்கிகள், சேமிப்புக் கணக்குகளுக்கு ஆண்டுக்கு 7 சதவீதம் வரை வட்டி அளிக்கின்றன.


மேலும் படிக்க | ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட்நியூஸ்.. இப்படி ஒரு பிளானா? உடனே தெரிஞ்சிக்கோங்க


ஆட்டோ ஸ்வீப் வசதி:


இந்த வசதியை பயன்படுத்தி, சேமிப்பு கணக்க நிரந்தர வைப்பு கணக்காக மாற்றிக்கொள்ளலாம். இது, மாதாந்திர செலவுகளை தனி நபர் சரிபார்த்த பின்னர், மாற்றிக்கொள்ளலாம். இது, பணத்தை ஃபிக்சட் டெப்பாசிட்டாக மாற்றுவது மட்டுமன்றி, அதிக வட்டி விகிதத்தையும் வாடிக்கையாளருக்கு அளிக்கிறது. 


அதிக வைப்புநிதி:


சேமிப்பு கணக்கில், மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட அதிகமான தொகை இருப்பது போல பார்த்துக்கொள்ளலாம். மாதா மாதம், அதிகமாக பணத்தை டெப்பாசிட் செய்வது மூலம் அதிக வட்டி தொகையை பெறலாம். சில வங்கிகள், அதிக வைப்பு நிதிக்கு ஏற்ற அதிக வட்டி விகிதத்தை வழங்குகின்றன. 


தொடர் வைப்புத்தொகை:


சேமிப்பு கணக்கின் மூலம் அதிக வட்டி பெறுவதற்கு தொடர் வைப்புத்தொகை வைத்துக்கொள்வது நல்ல முறையாகும். இது குறித்த பல திட்டங்களும் வங்கிகளில் உள்ளன. சரியான சேமிப்பு பழக்கத்தினை உருவாகிக்கொள்ள இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். 


கேஷ்பேக் சலுகைகள்:


சேமிப்புக் கணக்குகளின் மூலம் பெறும் டெபிட் கார்டுகளின் மூலமாக வாடிக்கையாளர்கள் பலவிதமான தள்ளுபடிகள், பலன்கள், வெகுமதிகள் மற்றும் கேஷ்பேக் சலுகைகளைப் பெறலாம். இந்த வெகுமதிகளை முறையாக பயன்படுத்தினால், நீண்ட காலத்திற்கு கணிசமான தொகையைச் சேமிக்க முடியும். தினசரி பண பரிவர்த்தனைகளுக்கு கார்டுகளைப் பயன்படுத்துவதன் மூலமாகவும், ஆன்லைனில் பில்களை செலுத்துவதன் மூலமாகவும், வெகுமதிகளுடன் வரும் பிற வங்கிச் சேவைகளை ஆராய்வதன் வாயிலாகவும் இந்த நன்மைகளைப் பெற்று கொள்ளலாம். 


மேலும் படிக்க | Jackpot! இந்த ‘2’ ரூபாய் நோட்டு இருந்தா லட்சங்களில் பணத்தை அள்ளலாம்..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ