PPF Maturity Calculator: பணம் என்பது நம் அனைவரின் வாழ்விலும் மிகவும் தேவையான ஒன்று. நாம் பணத்தை ஈட்டுவது எவ்வளவு முக்கியமோ, அதை சேமிப்பதும், பாதுகாப்பதும் அவ்வளவு முக்கியமே. பெரும்பாலான மக்களுக்கு அதிக அளவில் பணம் சம்பாதித்து கோடீஸ்வரராக வேண்டும் என ஆசை இருக்கினது. ஆகையால், அதிக லாபம் உள்ள இடத்தில் பணத்தை முதலீடு செய்ய விரும்புகிறார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதலீட்டில் இருந்து அதிக வருமானம் பெற்று, வருமான வரி வரம்பிற்குள்ளும் வராமல் சேமிக்க வேண்டுமானால், பொது வருங்கால வைப்பு நிதி (PPF) இதற்கான நல்ல தீர்வாக அமையும். இந்தத் திட்டம் முதலீட்டில் நல்ல வருமானம் மற்றும் வரி சேமிப்பு விருப்பத்தை வழங்குகிறது. நீங்கள் பணி ஓய்வு காலத்திற்காக திட்டமிடுகிறீர்களா?  நீண்ட கால முதலீட்டில் இருந்து நல்ல வருமானம் பெற விரும்புகிறீர்களா? ஆப்படியென்றால், பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தை தேர்வு செய்யலாம். PPF என்ற பெயரில் இந்தத் திட்டம் மிகவும் பிரபலமானது.


Public Provident Fund: பிபிஎஃப் ஏன் சிறந்த தேர்வாகக் கருதப்படுகிறது?


பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) மக்ளிடையே மிகவும் பிரபலமானக உள்ளது. ஏனெனில் அதில் டெபாசிட் செய்யப்படும் பணம், பெறப்பட்ட வட்டி மற்றும் முதிர்வு காலத்தில் பெறப்பட்ட தொகை என இவை அனைத்திலும் முற்றிலும் வரி விலக்கு கிடைக்கிறது. அதாவது இது EEE பிரிவில் வைக்கப்பட்டுள்ளது. EEE என்றால் Exempt அதாவது விலக்கு. ஒவ்வொரு ஆண்டும் டெபாசிட்களுக்கு வரி விலக்கு கோருவதற்கான விருப்பம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பெறும் வட்டிக்கு வரி செலுத்த வேண்டியதில்லை. கணக்கு முதிர்ச்சியடைந்தவுடன், முழுத் தொகைக்கும் வரி விலக்கு அளிக்கப்படும்.


PPF: இதில் யார் முதலீடு செய்யலாம்?


நாட்டின் குடிமக்கள் அனைவரும் PPF இல் முதலீடு செய்யலாம். இதை தபால் அலுவலகம் அல்லது அனைத்து வங்கிகளிலும் திறக்கலாம். ஒவ்வொரு நிதியாண்டிலும் குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சம் ரூ.1,50,000 வரை இதில் முதலீடு செய்யலாம். வட்டி ஆண்டு அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இருப்பினும், வட்டி காலாண்டு அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. தற்போது PPFக்கு 7.1% வட்டி வழங்கப்படுகிறது. முதிர்வு காலம் 15 ஆண்டுகள் நீடிக்கும். 


இந்த திட்டத்தில் கூட்டுக் கணக்கு தொடங்க வசதி இல்லை. இருப்பினும், இதில் நாமினியை பரிந்துரைக்கலாம். HUF பெயரிலும் பிபிஎஃப் கணக்கைத் (PPF Account) திறக்கும் விருப்பம் இல்லை. குழந்தைகளாக இருந்தால், பாதுகாவலரின் பெயர் PPF கணக்கில் சேர்க்கப்படுகிறது. ஆனால், அது 18 வயது வரை மட்டுமே செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


PPF மூலம் கோடீஸ்வரராவது எப்படி?


- PPF திட்டத்தின் மூலம் எளிய வழியில் கோடீஸ்வரர் ஆகலாம்.


- இதற்கு வழக்கமான முதலீடு தேவை. 


- ஒருவர் 25 வயதில் PPF கணக்கை தொடங்கியுள்ளார் என வைத்துக்கொள்வோம். 


- நிதியாண்டின் துவக்கத்தில், 1 முதல் 5ம் தேதிக்குள் கணக்கில் ரூ.1,50,000 (அதிகபட்ச வரம்பு) டெபாசிட் செய்தால், அடுத்த நிதியாண்டின் தொடக்கத்தில் வட்டியாக மட்டும் ரூ.10,650 சேர்ந்துவிடும்.


- அதாவது, அடுத்த நிதியாண்டின் முதல் நாளில் உங்கள் இருப்பு ரூ.1,60,650 ஆக இருக்கும். 


- அடுத்த ஆண்டும் இதையே செய்தால் கணக்கு இருப்பு ரூ.3,10,650 ஆக இருக்கும். 


- ஏனெனில், ரூ.1,50,000 மீண்டும் டெபாசிட் செய்யப்பட்டு அதன் பிறகு முழுத் தொகைக்கும் வட்டி வழங்கப்படும். 


- இம்முறை வட்டித் தொகை ரூ.22,056 ஆக இருக்கும். 


- ஏனெனில், கூட்டு வட்டி சூத்திரம் இங்கே வேலை செய்யும்.


- இப்போது 15 வருட பிபிஎஃப் முதிர்வு முடிந்துவிட்டது என்று வைத்துக்கொள்வோம்.


- அப்போது அவரது கணக்கில் ரூ.40,68,209 இருக்கும். 


- இவற்றில் மொத்த டெபாசிட் தொகை ரூ.22,50,000 ஆக இருக்கும். வட்டி வருமானம் மட்டும் ரூ.18,18,209 கிடைக்கும்.


கோடீஸ்வரர் ஆக விரும்பினால், முதிர்ச்சியடைந்த பிறகும் முதலீடு செய்ய வேண்டும்


PPF 25 வயதில் தொடங்கப்பட்டு, 15 ஆண்டுகள் முதிர்ச்சி காலத்தில், 40 வயதில், 40 லட்சத்துக்கும் அதிகமான தொகை கையில் கிடைக்கும். ஆனால் திட்டமிடல் நீண்ட காலமாக இருந்தால், பணம் வேகமாக வளரும். PPF இல் முதிர்ச்சியடைந்த பிறகு, கணக்கை 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும். முதலீட்டாளர் பிபிஎஃப் கணக்கை 5 ஆண்டுகளுக்கு நீட்டித்தால், 45 வயதிற்குள் மொத்தத் தொகை ரூ.66,58,288 ஆக இருக்கும். இதில் முதலீடு செய்த தொகை ரூ.30,00,000 ஆகவும், வட்டி வருமானம் ரூ.36,58,288 ஆகவும் இருக்கும்.


மேலும் படிக்க | NPS: ரூ.50,000 மாத ஓய்வூதியம் அளிக்கும் அட்டகாசமான அரசாங்க திட்டம்.... முழு கணக்கீடு இதொ


எந்த வயதில் நீங்கள் கோடீஸ்வரராகலாம்?


இதற்கு PPF கணக்கை மீண்டும் 5 ஆண்டுகளுக்கு அதாவது 25 ஆண்டுகள் வரை நீட்டிக்க வேண்டும். மீண்டும் நீங்கள் ஆண்டுக்கு ரூ.1,50,000 முதலீடு செய்ய வேண்டும். பிபிஎஃப் கணக்கில் 50 வயதில் மொத்தம் ரூ.1,03,08,014 இருக்கும். இதில் முதலீடு ரூ.37,50,000 ஆகவும், வட்டி வருமானம் ரூ.65,58,015 ஆகவும் இருக்கும்.


வட்டி வருவாய் ரூ. 1 கோடியைத் தாண்டும்


PPF இன் இரண்டாவது அம்சம் என்னவென்றால், நீங்கள் அதை எத்தனை முறை வேண்டுமானாலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம். இப்போது மீண்டும் ஒருமுறை கணக்கை 5 ஆண்டுகள் நீட்டித்தால், 55 வயதில் உங்களிடம் ரூ.1,54,50,910 இருக்கும். இதில் முதலீடு ரூ.45,00,000 மட்டுமே. ஆனால் வட்டி வருமானம் ரூ.1 கோடியைத் தாண்டும். மொத்த வருமானம் ரூ.1,09,50,911 ஆக இருக்கும்.


35 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் ரூ.2,26,97,857 கிடைக்கும்


நீங்கள் ஓய்வூதியத்திற்காக அதில் முதலீடு செய்திருந்தால், கடைசியாக 5 ஆண்டுகளுக்கு பிபிஎஃப் -ஐ மீண்டும் ஒருமுறை அதிகரிக்க வேண்டும். அதாவது ஒட்டுமொத்த முதலீடு 35 ஆண்டுகளுக்கு தொடரும். இந்த நிலையில், முதிர்ச்சி 60 வயதில் இருக்கும். இந்நிலையில், பிபிஎஃப் கணக்கில் உள்ள மொத்த டெபாசிட் தொகை ரூ.2 கோடியே 26 லட்சத்து 97 ஆயிரத்து 857 ஆக இருக்கும். இதில் மொத்த முதலீடு ரூ.52,50,000 ஆகவும், வட்டி வருமானம் ரூ.1,74,47,857 ஆகவும் இருக்கும்.


உங்கள் பணத்தை இரட்டிப்பாக்க விரும்பினால், இப்படி முதலீடு செய்யுங்கள்


நீங்கள் 60 வயதில் ஓய்வு பெறும்போது, ​​2 கோடி ரூபாய்க்கு மேல் சேர்ந்துள்ள பிபிஎஃப் தொகைக்கு (PPF Amount) வரி ஏதும் இருக்காது. பொதுவாக, இவ்வளவு பெரிய தொகையை வேறு எங்காவது சம்பாதித்தால், அதற்கு அதிக வரி செலுத்த வேண்டியிருக்கும். கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து 35 ஆண்டுகள் பிபிஎஃப் கணக்கை (PPF Account) இயக்கினால், இருவரின் மொத்த இருப்பும் ரூ.4,53,95,714 ஆக இருக்கும்.


மேலும் படிக்க | உங்கள் பெயரில் பான் கார்ட் இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ