EPS 95 குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை அதிகரிக்க திட்டம்: அரசின் மிகப்பெரிய அறிவிப்பு விரைவில்

EPS Pension: குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகையை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை ஊழியர்கள் நீண்ட நாட்களாக வலியுறுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 7, 2024, 01:35 PM IST
  • குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகையை உயர்த்துவதற்கான திட்டம்.
  • குறைந்தபட்ச ஓய்வூதிய மதிப்பாய்வு.
  • சமூக பாதுகாப்பு கட்டமைப்பு வலுப்படுத்தப்படும்.
EPS 95 குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை அதிகரிக்க திட்டம்: அரசின் மிகப்பெரிய அறிவிப்பு விரைவில் title=

EPS Pension: ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் (Employee Pension Scheme) கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகையை உயர்த்தி, ஓய்வூதிய நிதியை கவர்ச்சிகரமானதாக மாற்றுவது குறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகையை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை ஊழியர்கள் நீண்ட நாட்களாக வலியுறுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்த இந்தத் திட்டத்தில் பல முக்கிய மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக தொழிலாளர் அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது. இபிஎஸ் ஓய்வூதியம் பெறுபவரின் குழந்தைகள் மற்றும் மனைவிக்கு அவரது மரணத்திற்குப் பிறகு ஓய்வூதிய நிதித் தொகையை வழங்குவது இவற்றில் முக்கியமானதாக பார்கப்படுகின்றது.

Minimum Monthly Pension: குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகையை உயர்த்துவதற்கான திட்டம்

இபிஎஸ்-95 திட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் இபிஎஃப் உறுப்பினர்களுக்கு (EPF Members) குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகையை தற்போதுள்ள ரூ.1,000 -க்கு மேல் உயர்த்துவது குறித்து தொழிலாளர் அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. ஓய்வூதியத் திட்டத்தை மிகவும் கவர்ச்சிகரமானதாகவும், லாபகரமானதாகவும் மாற்றும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

EPS 95: ஓய்வூதிய சீர்திருத்தத்தை கருத்தில் கொள்வது

ஓய்வூதியத் திட்ட சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, இபிஎஸ் ஓய்வூதிய நிதிக்கு தங்கள் பங்களிப்பை அதிகரிக்க விரும்பும் உறுப்பினர்களுக்கு அதிக ஓய்வூதியத்தைப் பெறுவதற்கான விருப்பத்தை வழங்க தொழிலாளர் அமைச்சகம் (Labour Ministry) பரிசீலித்து வருகிறது. ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் டெபாசிட் செய்யப்படும் தொகையானது ஓய்வூதியம் பெறுபவருக்கும், அவர் இறந்த பிறகு அவரது குடும்பத்தினருக்கும் பலன்களை வழங்குவதை அரசாங்கம் உறுதி செய்ய விரும்புகிறது.

Family Pension: குடும்ப ஓய்வூதியம் வழங்குதல்

இபிஎஸ்-95 திட்டத்தில் ஊழியர் இறந்த பிறகு, மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் கிடைக்கும் என தெளிவாக கூறப்பட்டுள்ளது. இருவரும் இறந்தால், மீதமுள்ள தொகை அவர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்படும்.

மேலும் படிக்க | MSSC: மத்திய அரசின் ஜாக்பாட் திட்டம், சூப்பர் வட்டி... பெண்களே உடனே பாருங்க... நெருங்கும் கடைசி தேதி!

குறைந்தபட்ச ஓய்வூதிய மதிப்பாய்வு

ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தின் தற்போதைய குறைந்தபட்சத் தொகை மதிப்பாய்வு செய்யப்படும் என்று தொழிலாளர் அமைச்சகமும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பும் (EPFO) ஒப்புக் கொண்டுள்ளன. இதன் மூலம் நீண்டகாலமாக பணியாற்றும் ஊழியர்களுக்கு சிறந்த பலன்கள் கிடைக்கும். இபிஎஃப் சந்தாதாரர்கள் (EPF Subscribers) அதிக்கபட்ச நன்மகளை பெற வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

 EPS-95: இனி அதிக ஓய்வூதியம் கிடைக்கும்

- EPS-95 ஓய்வூதிய நிதி 95 கணக்கிற்கான பங்களிப்பு சம்பளத்தில் 8.33% ஆகும். 
- இருப்பினும், அதிகபட்ச ஓய்வூதிய ஊதியம் ரூ.15,000 மட்டுமே.
- இதன் காரணமாக, அதிகபட்ச ஓய்வூதிய பங்கு மாதம் 1250 ரூபாயாக உள்ளது.
- இதன் கீழ், குறைந்தபட்ச ஓய்வூதியம் 1000 ரூபாய் மற்றும் அதிகபட்சம் 7,500 ரூபாய் வழங்கப்படும். 
- ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்ட கூட்டத்தில், இந்த வரம்பை ரூ.15 ஆயிரமாக உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டும்.
- இந்த வரம்பு உயர்த்தப்பட்டால், குறைந்தபட்ச ஓய்வூதியத்தின் பங்கும் அதிகரிக்கும்.

இந்த முன்முயற்சிக்குப் பிறகு, இபிஎஸ்-95 திட்டம் மிகவும் கவர்ச்சிகரமானதாக மாறுவதோடு மட்டுமல்லாமல், சமூக பாதுகாப்பு கட்டமைப்பு வலுப்படுத்தப்படும் என்பதிலும் சந்தேகமில்லை.

மேலும் படிக்க | EPFO new rule : UAN இணைப்பதில் தாமதம் ஏற்படுவதை தடுக்க சில முக்கிய அம்சங்கள் தெரிந்து கொள்ளுங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News