Money Making: வீட்டில் இருந்தே பணம் சம்பாதிக்கும் 5 வழிகள்
இன்றைய கொரோனா காலகட்டத்தில் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்று கூறும் நிலையில் பணம் சம்பாதிக்கும் வழிகள் குறைகின்றன. ஆனால் வீட்டில் இருந்தபடியே வருமானம் ஈட்டும் சில வழிகள் இதோ உங்களுக்காக...
புதுடெல்லி: எந்நாளும் நன்னாளே. இன்றும் ஒரு நல்ல நாள். ஏனென்றால் எதையும் சாதிக்க உங்களுக்கு தைரியம் இருக்கிறது. நம்பிக்கையுடன் செயலாற்றினால், எந்நாளும் பொன்னாள் தானே? வீட்டில் தங்குவதன் மூலம் அதிக சம்பாதிக்க 5 வழிகள் இங்கே. அது மட்டுமல்லாமல், உங்கள் வணிகத்தை எவ்வாறு மேம்படுத்துவது என்பதையும் நாங்கள் விளக்குகிறோம். இவற்றைப் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் நல்ல லாபம் ஈட்ட முடியும். இந்த விஷயத்தில் இறங்குவோம்.
ஆன்லைன் யோகா பயிற்சி (Online Yoga Training)
நீங்கள் வீட்டில் இருக்கும்போது யோகா பயிற்சி அளிக்கலாம். கொஞ்சம் டிஜிட்டல் அறிவு தேவைப்படும் என்பதே முதலீடு. ஜூம் அல்லது கூகிள் மீட் மூலம் வாடிக்கையாளர்களைப் பெறலாம். கொரோனா வைரஸ் தொற்று யோகாவின் முக்கியத்துவத்தை மேலும் அதிகரித்துள்ளது. வீட்டில் இருக்கும் ஒரு வாடிக்கையாளருக்கு நீங்கள் யோகா பயிற்சி அளிக்கலாம். ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியம் .. வருமானத்திற்கு வருமானம். Health is wealth என்பது உண்மை தான்...
வீட்டு தோட்டம் (Home Gardening)
நாம் அனைவரும் தாவரங்களை விரும்புகிறோம். வீட்டில் பல வகையான தாவரங்களை வளர்க்க விரும்புகிறோம். பூக்களை கண்டு மனம் மலராதவர்கள் யாரும் இருக்க மாட்டோம். இருப்பினும், இன்றைய பிஸியான வாழ்க்கைமுறையில் வீடுகளில் தோட்டம் போடும் கலையை செய்ய நம்மில் பெரும்பாலோருக்கு நேரம் இல்லை. அதனால்தான் பலர் தங்கள் வீட்டு தோட்ட வேலைக்கு வேலையாட்களை தேடுகின்றனர். தாவரங்களைப் பற்றி உங்களுக்கு நல்ல புரிதல் இருந்தால், நீங்கள் வீட்டில் இருக்கும்போது நர்சரியை தொடங்கலாம். இடம் பற்றக்குறையா கவலை வேண்டாம். மொட்டை மாடித் தோட்டம் இருக்கிறது.
சமூக ஊடக செல்வாக்கு (Social Media Influencer)
நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உங்கள் ஆளுமையை அதன் மூலமே வெளிப்படுத்தலாம். இன்றைய கால வாசகர்களின் ரசனைக்கு ஏற்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்து எழுதுவதுதான் உங்கள் வேலை. உங்களுக்கு நல்ல புரிதல் உள்ள ஒரு விஷயத்தை தேர்வு செய்ய வேண்டும். அப்போதுதான், உங்கள் சொல்வன்மை செல்வாக்கை ஏற்படுத்தும். வருமானம் ஈட்டிக் கொடுக்கும் அந்தத் திறன் உங்களைப் பிரபலமாக்கும்.
ஃப்ரீலான்ஸாக எழுதுதல் (Freelance Writing)
உங்களிடம் நல்ல எழுத்துத் திறமை இருந்தால், நீங்கள் ஃப்ரீலான்சாக எழுதும் தொழிலைத் தொடங்கலாம். இன்று ஆன்லைனில் எழுத்துத் திறமைக்கு பல வாய்ப்புகள் உள்ளன. உங்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நல்ல அறிவு இருந்தால் குறைந்த காலகட்டத்தில் அதிகம் சம்பாதிக்கலாம்.
ஆன்லைன் ஆலோசனை ( Online Consultancy)
இந்த நாட்களில் மக்களின் ஆன்லைன் அறிவு மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. கொரோனா காரணமாக பலர் மருத்துவரிடம் செல்லாமல் ஆன்லைனில் சிகிச்சை எடுத்து வருகின்றனர். அதனால்தான் பல மருத்துவர்கள் ஆன்லைன் ஆலோசனை கொடுத்து பாதுகாப்பாக சம்பாதிக்கிறார்கள்.
ஒரு வாடிக்கையாளரை வீட்டில் உட்கார வைப்பது மிகவும் கடினம். எனவே கிளையண்ட் உங்களிடம் வர வேண்டும, உங்கள் தயாரிப்பு அல்லது திறமை மற்றவர்களை அடைய எளிதான வழியை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். எனவே நீங்கள் ஒரு பேஸ்புக் குழுவை உருவாக்கலாம். அந்தக் குழுவுக்கு உங்களுக்கு விருப்பமான பெயரைக் கொடுங்கள். உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் உறவினர்களையும் அதில் தவறாமல் சேர்த்து பதிவுகளை தொடர்ந்து இடவும்.
Read Also | UIDAI: குழந்தைகளின் ஆதார் அட்டை தொடர்பான முக்கிய விதிகள்..!!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR