Investment Tips: பணம் மனித வாழ்வின் இன்றியமையாத அம்சமாக உள்ளது. பணத்தை சேமிப்பதும், முதலீடு செய்வதும் இதை பெருக்குவதற்கான முக்கியமான வழிகளாக பார்க்கப்படுகின்றன. முதலீடு செய்யும் அனைவருமே அதில் நல்ல லாபம் கிடைக்க வேண்டும் என்றே எண்ணுகிறோம். முதலீடு செய்யும் முன், எந்த திட்டத்தில் எவ்வளவு வட்டி கிடைக்கும் என்பதை ஆராய்வது மிக அவசியம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எந்த திட்டத்தில் எவ்வளவு முதலீடு செய்தால், தொகை இரு மடங்காகவோ, மும்மடங்காகவோ அல்லது நான்கு மடங்காகவோ அதிகரிக்கும் என்பது தெரிந்தால், முதலீட்டு முடிவை எடுப்பது மிகவும் எளிதாக இருக்கும். முதலீடு செய்த மூலதனம் எப்படி இரு மடங்காகவோ, மும்மடங்காகவோ அல்லது நான்கு மடங்காகவோ அதிகரிக்கும் என்பதை எளிதாகக் கண்டறியக்கூடிய 3 சூத்திரங்களை பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம். 


Rule of 72


Rule of 72 சூத்திரம் முதலீட்டுப் பார்வையில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. முதலீடு செய்யும் பணத்தை இரட்டிப்பாக்க எவ்வளவு நேரம் ஆகும் என்பதை இந்த சூத்திரம் காட்டுகிறது. பெரும்பாலான வல்லுநர்கள் இது கணக்கீட்டிற்கான மிகவும் துல்லியமான சூத்திரம் என கூறுகிறார்கள். இந்த சூத்திரத்தைப் பயன்படுத்த, முதலீட்டுத் திட்டத்தில் பெறப்பட்ட வருடாந்திர வட்டி பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்குப் பிறகு நீங்கள் அந்த வட்டியை 72 ஆல் வகுக்க வேண்டும். இதன் மூலம் உங்கள் பணம் எவ்வளவு நேரத்தில் இரட்டிப்பாகும் என்பதை அறிய முடியும்.


மேலும் படிக்க | NPS உறுப்பினர்களுக்கு குட் நியுஸ்: வருகிறது என்பிஎஸ் மேற்பார்வை அமைப்பு... இனி வசதிகள் அதிகரிக்கும்


ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்து கொள்ளலாம். ஒரு முதலீட்டாளர் போஸ்ட் ஆஃபீஸ் எஃப்டியில் 5 வருடங்கள் முதலீடு செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். தற்போது அதற்கு 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. தற்போதைய வட்டி விகிதத்தை 72 ஆல் வகுத்தால், 72/7.5 = 9.6. இந்த கணக்கீட்டின்படி, முதலீட்டாளரின் பணம் 9 ஆண்டுகள் 6 மாதங்களில் அதாவது சுமார் 10 ஆண்டுகளில் இரட்டிப்பாகும்.


Rule of 114


முதலீடு செய்யப்பட்ட பணம் எப்போது மூன்று மடங்காகும் என்பதை அறிய விரும்பினால், Rule of 114 பயனுள்ளதாக இருக்கும். இந்த சூத்திரம் 72 விதியைப் போன்றது. இது கணக்கீடுகளுக்கு அதே வழியில் பயன்படுத்தப்படுகிறது. இங்கேயும் போஸ்ட் ஆஃபீஸ் எஃப்டியின் உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். போஸ்ட் ஆஃபீஸ் எஃப்டியில் டெபாசிட் செய்யப்பட்ட பணம் மும்மடங்காக எவ்வளவு நேரம் ஆகும் என்பதை அறிய, 114/7.5 சூத்திரத்தைப் பயன்படுத்த வேண்டும். கணக்கீட்டிற்குப் பிறகு, பதில் 15.2 ஆக இருக்கும். அதாவது 7.5 சதவீத வட்டி விகிதத்தின்படி, முதலீட்டாளர் முதலீடு செய்த பணம் 15 ஆண்டுகள் மற்றும் 2 மாதங்களில் மூன்று மடங்கு அதிகரிக்கும்.


Rule of 144


ஒரு திட்டத்தில் டெபாசிட் செய்யப்பட்ட தொகை நான்கு மடங்காக அதிகரிக்க எவ்வளவு கால அளவு தேவைப்படும் என்பதை Rule of 144 மூலம் தெரிந்துகொள்ளலாம். 6 சதவிகிதம் வட்டி அளிக்கும் திட்டத்தில் ஒருவர் முதலீடு செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். கணக்கீட்டின் படி, 144/6 = 24 அதாவது உங்கள் தொகை 24 ஆண்டுகளில் நான்கு மடங்காக அதிகரித்துவிடும். 


போஸ்ட் ஆஃபீஸ் எஃப்டி


போஸ்ட் ஆஃபீஸ் எஃப்டியின் உதாரணத்தை எடுத்துக்கொண்டால், 7.5 சதவீத வட்டி விகிதத்தின்படி 144/7.5 = 19.2 அதாவது 7.5 சதவீத வட்டி விகிதத்தில், உங்கள் தொகை நான்கு மடங்காக அதிகரிக்க 19 ஆண்டுகள் மற்றும் 2 மாதங்கள் ஆகும்.


மேலும் படிக்க | EPF கணக்கில் உள்ள தொகையை எடுப்பதற்கான விதிகளில் மாற்றம்: முழுமையான விவரம் இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ