கடந்த 10-12 ஆண்டுகளில் ஆதார் அட்டையை உருவாக்க மத்திய அரசு பெரும் முயற்சியை மேற்கொண்டது. நாட்டில் பலர் ஆதார் அட்டைகளை உருவாக்கியுள்ளனர். இந்த ஆவணம் நவீன காலத்திற்கு முக்கியமானது. ஆதார் அட்டை பல அரசு செயல்பாடுகளை, கணக்கு திறப்பதை எளிதாக்கியுள்ளது. இப்போது மத்திய அரசால், நாடு முழுவதுமுள்ள அனைத்து மாணவர்களுக்கும் ஒரே நாடு, ஒரு அடையாள அட்டை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த அட்டைக்கு அபார் - APAAR அடையாள அட்டை என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில், அபார் கார்டு உருவாக்கும் பணி நடைபெறவுள்ளது. அபார் கார்டு மாணவர்களுக்கு மட்டுமே. அது அவருக்குப் பெரிதும் பயனளிக்கும். இந்த அட்டை மாணவர்களுக்கு முக்கியமானதாக இருக்கும். அபார் கார்டு என்பது ஒரே நாடு, ஒரே மாணவர் என்ற கருத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட அடையாள அட்டை. எங்கு பயன்படுத்தினால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்ப்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆதார் போன்ற சக்திவாய்ந்த அபார் கார்டு


படிக்கும் சிறுவர் சிறுமிகளுக்கு அபார் கார்டு முக்கியமானது. இது எதிர்காலத்தில் மிகவும் அவசியமான ஆவணமாக இருக்கும். இதில் மாணவர்களின் கல்விப் பதிவுகள் இருக்கும். அவரது விளையாட்டுத் திறமை இதில் பதிவாகும். பல்வேறு பள்ளிகளில் அபார் கார்டு பதிவு விரைவில் துவங்க உள்ளது. இந்த அட்டையில், மாணவர்களின் கல்வி உதவித்தொகை குறித்த தகவல்களும் பதிவு செய்யப்படும். கல்லூரிகளில் சேரும் மாணவ, மாணவிகளின் விவரங்களை வைத்து போலி மதிப்பெண் சான்றிதழ்களும், ஆவணங்களும் உருவாக்கப்பட்டு ஏகப்பட்ட மோசடிகள் நடப்பது அதிகரித்து வருகிறது. அதனை அபார் அட்டை மூலம் தடுக்கலாம் என மத்திய அரசு கூறியுள்ளது.


மேலும் படிக்க | SIP Calculator: வெறும் ரூ.150 சேமித்து ரூ.22,70,592 பம்பர் லாபம் பெறுவது எப்படி?


ஆன்லைன் பதிவு


ஆபார் அட்டைகளை உருவாக்குவது பற்றி கவலைப்பட தேவையில்லை. இந்த அட்டையை உருவாக்க ஆன்லைன் பதிவு செய்யப்படும். அதற்காக, எங்கும் அவசரப்பட வேண்டிய அவசியமில்லை, நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய தேவையும் இல்லை.


1. இது அகாடமிக் பாங்க் ஆஃப் கிரெடிட்டில் (Academic Bank of Credit) பதிவு செய்யப்படும்.


2. ஏபிசியின் (ABC) தளத்திற்குச் சென்ற பிறகு, நீங்கள் எனது கணக்கு என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.


3. பின்னர் மாணவர் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். இங்கே பதிவு செய்யவும்.


4. இதற்கு ஆதார் அட்டை எண், மொபைல் எண்ணை உள்ளிடவும்.


5. அப்போது டிஜிலாக்கர் கணக்கு திறக்கப்படும். டிஜிலாக்கரில் உள்நுழைக.


அபார் கார்டு பதிவு


1.அபார் கார்டு பதிவு செய்வதற்கான விண்ணப்ப படிவம் மாணவர்களுக்கு வழங்கப்படும்.


2. நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்காக டிஜிட்டல் கார்டுகள் உருவாக்கப்படும்.


3. மாணவர்களுக்கு 12 இலக்க அபார் கார்டு வழங்கப்படும்.


4. மாணவரின் முழு பெயர், முகவரி, ஆதார் அட்டை பதிவு செய்யப்படும்


5. இந்த அபார் கார்டில், 12 இலக்க அட்டை எண், கியூஆர் குறியீடு இருக்கும்.


மேலும் படிக்க | RBI புதிய வங்கி லாக்கர் விதிகள்: வாடிக்கையாளர்களுக்கு ஆதாயம், வங்கிகளுக்கு கெடுபிடி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ