SIP calculator: மக்கள் கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள். எதிர்கால பாதுகாப்பிற்காகவும், அவசர தேவைகளின் போது பயன்படுத்தவும், பணத்தை பெருக்கவும் முதலீடுகள் செய்யப்படுகின்றன. ரிஸ்க் எடுக்க தயாராக இருக்கும் சிலர் பங்குச்சந்தை போன்றவற்றில் பணத்தை போடுகிறார்கள். எனினும், பெரும்பாலான உழைக்கும் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பாதுகாப்பான முதலீட்டு திட்டங்களையே தேர்ந்தெடுக்கிறார்கள்.
பணத்தை சேமிக்க விருப்பம் கொண்ட நபர்கள் நீண்ட கால முதலீட்டின் ( long term investment) மூலம் நல்ல நிதியை உருவாக்கலாம். சிறிய தொகையை சேமித்து முதலீடு செய்வதன் மூலம், பெரிய தொகையை சேர்க்கலாம். ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளாலாம். 2024 ஆம் ஆண்டில் உங்கள் குழந்தையின் வயது 3 என வைத்துக்கொள்வோம். குழந்தைக்கு 18 வயதாகும் போது, அதாவது 15 ஆண்டுகளில், அதாவது 2042 ஆம் ஆண்டுக்குள் நீங்கள் ரூ. 22 லட்சம் முதிர்வு நிதியைப் பெறலாம். இந்த நிதியை உருவாக்க, நீங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள SIP திட்டத்தில் சேர வேண்டும். குழந்தைகளின் கல்விக்கும், உயர்கல்விக்கும் இதைப் பயன்படுத்தலாம்.
SIP முதலீடு என்றால் என்ன?
முறையான முதலீட்டுத் திட்டம் SIP என்று அழைக்கப்படுகிறது. இதன் மூலம் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். பொதுவாக பங்குச் சந்தையில் பணத்தை இழக்க நேரிடும் என்ற பயம் இருக்கும். நீங்கள் ஆபத்திலிருந்து விலகி இருக்க விரும்பி, பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்ய விரும்பவில்லை என்றால், SIP முதலீடு உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். சந்தையின் ஏற்ற இறக்கங்களின் தாக்கம் இதில் இருக்கின்றது. இந்த காரணத்திற்காக, SIP இல் நீண்ட கால முதலீடு உங்கள் முதலீட்டுத் தொகையை இழப்பிலிருந்து காப்பாற்றும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். SIP இல் ஒரு நிலையான தொகையை ஒரு குறிப்பிட்ட காலத்தில் முதலீடு செய்ய வேண்டும்.
மேலும் படிக்க | RBI புதிய வங்கி லாக்கர் விதிகள்: வாடிக்கையாளர்களுக்கு ஆதாயம், வங்கிகளுக்கு கெடுபிடி
SIP Calculator: ரூ.150 ல் இருந்து ரூ.22 லட்சத்தை உருவாக்குவது எப்படி
இந்த SIP திட்டத்தில் நீங்கள் தினமும் 150 ரூபாய் முதலீடு (Investment) செய்ய வேண்டும். அதாவது ஒரு மாதத்தில் ரூ. 4,500 மற்றும் ஒரு வருடத்தில் ரூ. 54,000 முதலீடு செய்வீர்கள். நீங்கள் இந்த முதலீட்டை 15 ஆண்டுகளுக்குச் செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதாவது நீங்கள் SIP இல் மொத்தம் ரூ. 8,10,000 முதலீடு செய்வீர்கள்.
பொதுவாக, SIP இல் நீண்ட கால முதலீடு 12% ஆண்டு வருமானத்தை அளிக்கும். உங்களுக்கும் 12% வருமானம் கிடைக்கும் என்று வைத்துக்கொள்வோம். இந்தக் கணக்கீட்டின்படி, வட்டி மட்டுமே 15 ஆண்டுகளில் ரூ. 14,60,592 என்ற அளவில் கிடைக்கும். .அதே நேரத்தில், SIP முதிர்ச்சியடையும் போது, முதலீட்டுத் தொகையையும் (ரூ. 8,10,000) வட்டித் தொகையையும் (ரூ. 14,60,592) ஒன்றாகப் பெறுவீர்கள். இது மொத்தம் ரூ.22,70,592 ஆக இருக்கும். முதலீடு செய்வதற்கு முன், நிதி ஆலோசகரை கண்டிப்பாக அணுகவும். உதவி பெறுவது உங்கள் SIP வருமானத்தை மேம்படுத்தலாம்.
ஒரு அட்டவணை மூலம் இதை புரிந்துகொள்ளலாம்:
SIP: தினசரி சேமிப்பு |
SIP: மாத சேமிப்பு | SIP: ஆண்டு சேமிப்பு | 15 ஆண்டுகளுக்கு பின் மொத்த முதலீடு | ஆண்டு சராசரி வருமானம் | 15 ஆண்டுகளுக்கு பிறகு கிடைக்கும் மொத்த தொகை |
ரூ.150 | ரூ.4,500 | ரூ.54,000 | ரூ.8,10,000 | 12% | ரூ.22,70,592 |
(பொறுப்புத் துறப்பு: மியூச்சுவல் ஃபண்டுகளில் SIP முதலீடு செய்வது சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. முதலீட்டு முடிவை எடுப்பதற்கு முன் உங்கள் ஆலோசகரை அணுகவும்.)
மேலும் படிக்க | OfflinePay: HDFCயின் ‘ஆஃப்லைன் சில்லறை கட்டணங்களை’ ரிசர்வ் வங்கி அங்கீகரிக்கிறது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ