தீபாவளி மற்றும் சத் பூஜை வருவதால் வெளியூர்களில் தங்கியிருக்கும் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள், இதில் பெரும்பாலான மக்கள் ரயில்வழி போக்குவரத்தை தேர்ந்தெடுப்பார்கள்.  அதனால் பண்டிகை காலங்களில் இந்திய ரயில்வேயில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும், மேலும் இந்த காலகட்டத்தில் உறுதிசெய்யப்பட்ட டிக்கெட்டுகளைப் பெறுவது கடினமான ஒன்றாகவும் இருந்து வந்த நிலையில் தற்போது அந்த நிலை மாறியுள்ளது.  பண்டிகைக் காலத்தில், ரயில் டிக்கெட்டுகளை சீக்கிரமாக உறுதிப்படுத்துவதற்காக 'Quick Tatkal' என்கிற புதிய அங்கீகரிக்கப்பட்ட செயலி அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது, இதன்மூலம் விரைவாக டிக்கெட்டுகளை உறுதிசெய்து கொள்ளலாம், பயணிகளுக்கு ஏற்ப இந்திய ரயில்வே 179 சிறப்பு ரயில்களை தொடங்கியுள்ளது, இப்போது உறுதிப்படுத்தப்பட்ட தட்கல் டிக்கெட்டுகளை பெறுவது என்பது பற்றி பார்ப்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | இந்திய ரூபாய் நோட்டுகள் பற்றி இந்த விஷயங்கள்லாம் தெரியுமா?


1) செயலியில் உங்கள் முன்பதிவு விவரங்களை முன் நிரப்பவும், தட்கல் ரயில் முன்பதிவு தொடங்கியவுடன், ஐஆர்சிடிசி இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது தானாகவே நிரப்பப்பட்டுவிடும்.


2) ரயில் கனெக்ட் செயலியானது உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டைப் பெறுவதற்கான அதிகபட்ச வாய்ப்புகளை உருவாக்கும்.


3) தட்கல் மற்றும் பொது ரயில் டிக்கெட்டுகளுக்கு முன்பதிவு செய்ய அனுமதிக்கிறது. 


4) ஒரே நேரத்தில் 1 டிக்கெட் முன்பதிவு மட்டுமே அனுமதிக்கப்படும், ஐபி முகவரியை மறைக்க முடியாது மற்றும் விபிஎன் பயன்படுத்த முடியாது.


5) பிஎன்ஆர் சரிபார்ப்பு சரிபார்ப்புகள், ரயில்களில் உணவு ஆர்டர்கள் மற்றும் லைவ் ரயில் ஸ்டேட்டஸை கண்காணிப்பது போன்றவற்றை இதில் செய்யலாம்.


இதுகுறித்து அஃப்ரே ஸ்டுடியோஸின் நிறுவனர் விஷால் அஃப்ரே கூறுகையில், நாங்கள் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக மென்பொருள்கள் மற்றும் செயலிகளை உருவாக்கி வருகிறோம், அதில் பிரபலமான ஒன்று தான் எண்களின் 'Quick Tatkal' செயலி.  இந்த செயலியின் மூலம் தட்கல் மற்றும் பொது ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் செயல்முறையை எளிதாக்குவது தான் எண்களின் முக்கிய நோக்கமாகும்.  Railofy உடன் நாங்கள் கூட்டணி அமைந்திருக்கிறோம், இதன்மூலம் மக்களுக்கு சிறந்த வசதிகளை செய்து தருவோம்.  எதிர்காலத்தில் இ-மெயில் மார்கெட்டிங்கில் மேம்பாடு செய்வதில் கவனம் செலுத்த போகிறோம், தற்போது இந்த செயலி கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.


மேலும் படிக்க | mAadhaar பயன்படுத்த பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் தேவையா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ