Permanent Account Number (PAN) மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும்.  ஒரு நபரின் பான் அட்டை தொலைந்துவிட்டால் ஏனெனில்,  முக்கியமான பல பணிகளை நின்று விடும் வாய்ப்பு உள்ளது. ஏனென்றால், பான் என்பது நிதி பரிவர்த்தனையிலும் பயன்படுத்தப்படும் ஆவணம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால், பான் கார்டு தொலைந்து விட்டால் என்ன செய்வது. கவலைப்பட வேண்டாம், ஒரு சுலபமான வழி இருக்கிறது. வருமான வரித் துறையிலிருந்து  டூப்ளிகேட் பான் அட்டையை எளிதில் பெறலாம்.


இதற்கான வழிமுறைகள்
வழிமுறை 1. வருமான வரி பான் சேவைகள் பிரிவின் வலைத்தளத்திற்குச் செல்லவும். அதில் கொடுக்கப்பட்டுள்ள பல ஆப்ஷன்களில் இருந்து, பான் அட்டையை மீண்டும் ப்ரிண்ட் செய்வதற்கான, ‘ரீபிரிண்ட் பான் கார்டு' என்ற  ஆப்ஷனை தேர்தெடுக்க வேண்டும். 


வழிமுறை 2. இந்த படிவத்தில் அனைத்து தகவல்களையும் நீங்கள் நிரப்ப வேண்டும், ஆனால் இடது விளிம்பில் பெட்டியில் எதையும் குறிக்க வேண்டாம். அதன் பிறகு நீங்கள் 105 ரூபாய் செலுத்த வேண்டும். நீங்கள் விரும்பினால், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு,  நெட் பாங்கிங், டிமாண்ட் ட்ராஃப்ட் அல்லது காசோலை மூலம் இந்த கட்டணத்தை செலுத்தலாம். இந்த செயல்முறைகள் அனைத்தையும் பூர்த்திசெய்த பிறகு, இந்த படிவத்தை நீங்கள் சமர்ப்பிக்கும்போது, ​​ஒப்புதல் ரசீது கிடைக்கும்.


வழிமுறை 3.இந்த ரசீதை நகல் எடுத்துக் கொள்ளவும். 2.5 செ.மீ X 3.5 செ.மீ  அளவுள்ள வண்ண புகைப்படத்தை ஒட்டவும். உங்கள் கையொப்பத்தை அதில் இடவும். டிமாண்ட் ட்ராஃப்ட் அல்லது காசோலை மூலம் நீங்கள் பணம் செலுத்தியிருந்தால், அதையும் நகலெடுக்கவும். பின்னர் அடையாளம் தொடர்பான ஆதாரம், முகவரி ஆதாரம் மற்றும் பிறந்த தேதிக்கான ஆதாரம் ஆகியவற்றுடன் புனேவில் உள்ள என்.எஸ்.டி.எல் (NSDL) அலுவலகத்திற்கு அனுப்பவும்.


வழிமுறை 4. உங்கள் ஆவணங்கள் அனைத்தும் ஆன் லைன் விண்ணப்பம் செய்த 15 நாட்களுக்குள் என்.எஸ்.டி.எல் அலுவலகத்தை அடைய வேண்டும். 15 நாட்களுக்குள் உங்களுக்கு டூப்ளிகேட் பான் அட்டை கிடைக்கும். நீங்கள் விரும்பினால், உங்கள் பான் கார்ட் எப்போது கிடைக்கும் மற்றும் பிற விபரங்களை நிலையை நீங்கள் அறிந்து கொள்ளலாம். இதற்காக, நீங்கள் NSDLPAN என தட்டச்சு செய்து, ஒரு ஸ்பேஸ் விட்டு, உங்களுக்கு கொடுப்பட்ட  எண்ணை உள்ளிட்டு 57575 க்கு எஸ் எம் எஸ் அனுப்பவும்.


மேலும் படிக்க | பென்ஷன் இல்லையே என்ற டென்ஷன் வேண்டாம்... ₹44,793 ஓய்வூதியம் தரும் முதலீடு இருக்கு..!!!


ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்


  • Https://www.tin-nsdl.com/ வலைத்தளத்திற்குச் செல்லவும்.

  • பான் அட்டையை மீண்டும் ப்ரிண்ட் செய்வதற்கான, ‘ரீபிரிண்ட் பான் கார்டு' என்ற  ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும். 

  • அதை கிளிக் செய்த பிறகு, புதிய பக்கம் தோன்றும், இங்கே உங்கள் பான் எண், ஆதார் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை நிரப்ப வேண்டும். செக் பாக்ஸ் மீது க்ளிக் செய்யவும்.

  • OTP தொடர்பான ஆப்ஷன் கேட்கப்படும். 

  • ஓடிபியை பெற மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைலில் இருந்து எந்த ஆப்ஷனையும் நீங்கள் தேர்வு செய்யலாம். 

  • நீங்கள் கொடுக்கும் மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் ஐடி, உங்கள் அசல் பான் எண்ணுடன் பதிவு செய்யப்பட்டதாக இருக்க வேண்டும்.

  • 'Generate OTP ' என்பதைக் கிளிக் செய்த பிறகு, நீங்கள் OTP ஐப் பெற்று சமர்ப்பி என்ற ஆப்ஷனை கிளிக் செய்க. நினைவில் கொள்ளுங்கள். OTP 10 நிமிடங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.

  • OTP ஐ சமர்பித்த பிறகு கட்டணம் செலுத்த வேண்டும். 50 ரூபாய் கட்டணத்தை டெபாசிட் செய்து,  பிரிண்ட் என்பதை கிளிக் செய்யலாம்.

  • அபோது, உங்கள் மொபைல் எண்ணுக்கு ஒரு செய்தி அனுப்பப்படும். இந்த செய்தியில் கொடுக்கப்பட்ட இணைப்பின் உதவியுடன், உங்கள் e-Pan-ஐ பதிவிறக்கம் செய்யலாம்.

  • டூப்ளிகேட் பான் கார்டில் தகவல் புதுப்பிக்கப்படாது

  • விண்ணப்பிப்பதற்கு முன், பழைய பான் அட்டையின் அடிப்படையில் நகல் பான் அட்டை விவரங்களை நிரப்ப வேண்டும். தகவல்களை புதுப்பிக்க முடியாது. நகல் பான் அட்டையை, வருமான வரித் துறை, உங்களது பதிவு முகவரிக்கு அனுப்பும்.


பான் கார்டை ஆன்லைனில் பதிவிறக்குவது எப்படி?
1. முதலில் www.onlineservices.nsdl.com என்ற வலைதளத்திற்கு செல்லவும்.
2. இதற்குப் பிறகு, நீங்கள் பெயர், தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் தகவல்களை நிரப்பவும்.
3. இதற்குப் பிறகு, விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கவும்.
4. உங்கள் மின்னஞ்சலுக்கு PDF வடிவத்தில் ஒரு e-Pan அட்டை அனுப்பப்படும்.
5. உங்கள் மின்னஞ்சலில் இருந்து ஒரு PDF கோப்பை பதிவிறக்கலாம்.


மேலும் படிக்க | வருமான வரியை வீட்டிலிருந்தே தாக்கல் செய்ய இந்த எளிய முறையை கடைபிடித்தால் போதும்..!!!
எவ்வளவு செலவாகும்


புதிய அல்லது டூப்ளிகேட் பான் கார்டுக்கு, நீங்கள் ரூ .93 + 18% ஜிஎஸ்டிக்கு ரூ .93 செலுத்த வேண்டும். நீங்கள் வெளிநாட்டில் பான் கார்டைப் பெற விரும்பினால், இதற்கு நீங்கள்,  1011 ரூபாய் செலுத்த வேண்டும். இதில் ஜிஎஸ்டி, பான் அட்டை அனுப்பும் கட்டணம் போன்றவை அடங்கும்.