SIP Investment: தினமும் ரூ.200 முதலீடு செய்து ரூ. 1.1 கோடிக்கு மேல் லாபம் பெறலாம்.. ஆமாங்க கோடீஸ்வரராகலாம்!!
SIP Investment: மியூச்சுவல் ஃபண்டுகள் பல்வேறு வகையான பங்குகளில் தங்களிடம் உள்ள தொகையை முதலீடு செய்கின்றன. இது முதலீடு செய்யப்பட்ட சில பங்குகள் மோசமாக இருந்தாலும் பிற பங்குகள் மூலம் சந்தை அபாயத்தைக் குறைக்கிறது.
SIP Investment: முறையான முதலீட்டுத் திட்டங்கள் (Systematic Investment Plan) மூலம் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு கடந்த சில ஆண்டுகளாக பிரபலமடைந்து வருகிறது. இது சந்தை அபாயத்தைக் குறைத்து, சந்தை மீண்டவுடன் இழப்புகளைச் சமன் செய்கிறது. இரண்டாவதாக, மியூச்சுவல் ஃபண்டுகள் பல்வேறு வகையான பங்குகளில் தங்களிடம் உள்ள தொகையை முதலீடு செய்கின்றன. இது முதலீடு செய்யப்பட்ட சில பங்குகள் மோசமாக இருந்தாலும் பிற பங்குகள் மூலம் சந்தை அபாயத்தைக் குறைக்கிறது.
எஸ்ஐபி (SIP) முதலீட்டில் பல நன்மைகள் உள்ளன:
- இது முதலீட்டாளரிடம் (Investor) முதலீட்டு ஒழுக்கத்தை வளர்க்கிறது
- ஒவ்வொரு சுழற்சியிலும் பணத்தைச் சேமிக்கும் பழக்கத்தை ஒருவர் வளர்த்துக்கொள்கிரார்
- 100 ரூபாய் முதலீட்டிலும் இதை தொடங்கலாம்
- பங்கு முதலீட்டின் மற்ற வடிவங்களைக் காட்டிலும் சந்தை ஏற்ற இறக்கத்தால் பாதிக்கப்படுவது இதில் குறைவு
- இது காம்பவுண்டிங் வசதியை வழங்குகிறது
- இதிலிருந்து எப்போது வேண்டுமானாலும் வெளியெறலாம்
வெவ்வேறு ஃபண்ட் ஹவுஸ்களிலிருந்து மியூசுவல் ஃப்ண்டுகளில் (Mutual Funds) SIP -களைத் தொடங்குவதன் மூலம் முதலீட்டாளர் தங்கள் முதலீட்டு போர்ட்ஃபோலியோவை பன்முகப்படுத்தலாம். பல ஆண்டுகளாக நீங்கள் உங்கள் முதலீட்டை வைத்திருந்தால், உங்கள் முதலீடு பல மடங்கு வளர்ச்சியடைய கூட்டும். கடந்த சில ஆண்டுகளில், SIP -கள் 12 சதவீத சராசரி வருமானத்தை அளித்துள்ளன.
மிகக் குறைந்த அளவு பணத்தை முதலீடு (Investment) செய்து மிக அதிக அளவு லாபத்தை பெற SIP -கள் மிகச்சிறந்த வழியாக உள்ளன. இந்த பதிவில், SIP இல் ஒரு நாளைக்கு ரூ. 200 முதலீடு செய்தால் 15, 20 மற்றும் 25 ஆண்டுகளில் உங்களுக்கு கிடைக்கக்கூடிய வருமானத்தின் கணக்கீட்டைக் காணலாம்.
SIP Calculator: 15 ஆண்டுகளுக்கு ஒரு நாளைக்கு 200 ரூபாய் முதலீடு செய்தால் கிடைக்கும் வருமானம்
ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். ஒரு நபருக்கு 25 வயதாகிறது என வைத்துக்கொள்வோம். இவர் தினமும் ரூ.200 சேமிக்கத் தொடங்கி, SIP மூலம் மியூசுவல் ஃபண்டிகளில் முதலீடு செய்கிறார். அவர் 15 ஆண்டுகள் நீண்ட கால முதலீட்டு உத்தியை கையாள்கிறார் என வைத்துக்கொள்ளலாம்.
- SIP கால்குலேட்டரின் (SIP Calculator) படி, ஒவ்வொரு ஆண்டும் 12 சதவீத சராசரி வருமானம் கிடைத்தால், 15 ஆண்டுகளில் அவரது மொத்த முதலீடு ரூ.10,80,000 (ரூ. 10.8 லட்சம்) ஆக இருக்கும்.
- 15 ஆண்டுகளுக்குப் பிறகு, முதலீட்டாளர் ரூ. 19,47,456 (ரூ. 19.50 லட்சம்) மூலதன ஆதாயங்களைப் பெறலாம். அதே நேரத்தில் அவரது மொத்த முதிர்வுத் தொகை ரூ. 30,27,456 (30.3 லட்சம்) ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | ஆதார் அட்டை முதல் வருமான வரி வரை... நீங்கள் முடிக்க வேண்டிய 7 முக்கிய வேலைகள்!
20 ஆண்டுகளுக்கு ஒரு நாளைக்கு 200 ரூபாய் முதலீடு செய்தால் கிடைக்கும் வருமானம்
25 வயதான நபர் தினமும் ரூ. 200 முதலீடு செய்து, 20 ஆண்டுகளுக்கு SIP மூலம் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்கிறார். 20 ஆண்டுகளில் அவரது மொத்த முதலீடு ரூ.14,40,000 (ரூ. 14.4 லட்சம்) ஆக இருக்கும்.
- 20 ஆண்டுகளுக்குப் பிறகு, சராசரியாக 12 சதவீத வருடாந்திர வருமானத்தில் அவர் ரூ. 59,94,888 (59.9 லட்சம்) முதிர்வுத் தொகையை வைத்திருப்பார் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது அவரது மூலதன ஆதாயம் ரூ.45,54,888 (ரூ. 45.5 லட்சம்) இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
25 ஆண்டுகளுக்கு ஒரு நாளைக்கு 200 ரூபாய் முதலீடு செய்தால் கிடைக்கும் வருமானம்
ஒரு முதலீட்டாளர் தனது 25 வயதில் ஒரு நாளைக்கு 200 ரூபாய் முதலீடு செய்யத் தொடங்கினால், அவரது முதிர்வுத் தொகை அவரை ஒரு கோடீஸ்வரராக மாற்றலாம்.
25 ஆண்டுகளில், அவரது மொத்த SIP முதலீடு ரூ.18,00,000 (ரூ. 18 லட்சம்) ஆக இருக்கும். 12 சதவீத வருவாய் விகிதத்தில், அவரது மூலதன ஆதாயம் ரூ. 95,85,811 (ரூ. 95.9 லட்சம்) ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அவரது முதிர்வுத் தொகை ரூ.1,13,85,811 (1.1 கோடி) ஆக இருக்கும்.
இதை வேறு விதமாகச் சொல்வதானால், 25 ஆண்டுகளுக்கு தினமும் ரூ.200 முதலீடு செய்வதன் மூலம் ஒரு முதலீட்டாளர் 50 வயதில் கோடீஸ்வரராகலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ