சொந்த தொழில் தொடங்கணுமா? ரூ.10 லட்சம் வரை கடன் தரும் அரசு.... இப்படி எளிய வழியில் விண்ணப்பிக்கலாம்
PM Mudra Yojana: அரசாங்கம் இந்த திட்டத்தை சுயதொழிலை ஊக்குவிக்கும் நோக்கில் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் வரை பிணையில்லாமல் கடன் பெற முடியும்.
PM Mudra Yojana: பணம் என்பது நம் வாழ்வில் இன்றியமையாத ஒன்று. நம்மில் பலர் அதற்காக அலுவலக பணிகளில் வேலை செய்கிறோம். சிலர் சொந்தமாக வியாபாரம் செய்கிறோம். மாத சம்பளம் வாங்கும் பலருக்கு, பல வித காரணங்களால், சொந்த வேலை செய்து, சொந்த காலில் நிற்பதே மேல் என்ற எண்ணம் ஏற்படலாம். பிறரின் கீழ் பணிபுரிவதில் உள்ள இக்கட்டுகளை சந்திக்காமல், சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்று எண்ணும் நபர்கள், பல சந்தர்ப்பங்களில் பணப்பற்றாக்குறையால் தொழில் தொடங்க முடியாமல் தவிக்கின்றனர்.
PM Mudra Yojana
இப்படிப்பட்டவர்கள்க்கு அரசாங்கம் உதவுகின்றது. மத்திய அரசின் (Central Government) பிரதம மந்திரி முத்ரா யோஜனா மூலம் உங்கள் பிரச்சனைக்கு தீர்வு காணலாம். அரசாங்கம் இந்த திட்டத்தை சுயதொழிலை ஊக்குவிக்கும் நோக்கில் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் வரை பிணையில்லாமல் கடன் பெற முடியும். எனினும், இந்த கடன் கார்ப்பரேட் அல்லாத மற்றும் விவசாயம் அல்லாத நோக்கங்களுக்காக வழங்கப்படுகிறது. கார்பரேட் மற்றும் விவசாயம் அல்லாமல், நீங்கள் சொந்தமாக தொழில் தொடங்க விரும்பினால், அரசின் இந்த திட்டத்தின் மூலம் உங்கள் பணத்தேவையை பூர்த்தி செய்துகொள்ளலாம். இந்த திட்டத்தின் கீழ் கடன் பெற தேவையான தகுதி என்ன? இதன் நன்மைகள் என்ன? இவற்றை பற்றி முழுமையாக இந்த பதிவில் காணலாம்.
PM Mudra Yojana: இதற்கான தகுதி என்ன
- கடனுக்காக விண்ணப்பிக்கும் நபர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
- விண்ணப்பிக்கும் நபரிடம் எந்த வங்கியிலும் டீஃபால்ட் ஹிஸ்டரி இருக்கக்கூடாது, அதாவது அவர் கடன்களை சரியாக திருப்பி செலுத்திகியிருக்க வேண்டும்.
- முத்ரா கடன் வாங்கப்படும் எந்த வணிகமும் கார்ப்பரேட் நிறுவனமாக இருக்கக்கூடாது.
- கடனுக்கு விண்ணப்பிக்கும் நபர் வங்கிக் கணக்கு வைத்திருக்க வேண்டும்.
- கடனுக்கு விண்ணப்பிக்கும் நபரின் வயது 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.
பிரதம மந்திரி முத்ரா திட்டம்: மூன்று வகைகளில் கடன் கிடைக்கிறது
பிரதம மந்திரி முத்ரா யோஜனா மூலம் கடன் பெற விரும்பும் நபர்கள், அரசு-தனியார் வங்கிகளுடன், பிராந்திய கிராம வங்கி, சிறு நிதி வங்கி, நான்-ஃபைனான்சியல் நிறுவனனகள் போன்ற எந்த ஒரு வங்கியிலும் கடனுக்காக விண்ணப்பிக்கலாம்.
கடன் வகைகளின் படி கடன் தொகையின் வரம்பு நிரணயிக்கப்படுள்ளது
- சிசு கடன்: இதில், 50 ஆயிரம் ரூபாய் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது.
- கிஷோர் கடன்: இதில், 5 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது.
- தருண் கடன்: இதில், 10 லட்சம் ரூபாய் வரை கடனாக வழங்கப்படுகிறது.
PMMY: இதன் நன்மைகள் என்ன?
- பிரதம மந்திரி முத்ரா யோஜனா மூலம், உங்கள் தேவைக்கேற்ப ரூ.50 ஆயிரம் முதல் ரூ.10 லட்சம் வரை கடன் கிடைக்கும். இந்த கடன் பிணையம் இல்லாதது. மேலும், இதற்கு செயலாக்க கட்டணம் எதுவும் விதிக்கப்படாது.
- இந்தத் திட்டத்தின் கீழ் கிடைக்கும் கடனை (Loan) திருப்பிச் செலுத்த வழங்கப்படும் மொத்த காலம் 12 மாதங்கள் முதல் 5 ஆண்டுகள் வரை ஆகும். ஆனால் 5 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்த முடியாவிட்டால், உங்கள் கடன் காலத்தை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்கலாம்.
- அனுமதிக்கப்பட்ட கடனின் முழுத் தொகைக்கும் நீங்கள் வட்டி செலுத்த வேண்டியதில்லை என்பது இந்தக் கடனின் சிறப்பம்சமாகும். முத்ரா கார்டு (MUDRA Card) மூலம் நீங்கள் எடுத்த மற்றும் செலவழித்த தொகைக்கு மட்டுமே வட்டி விதிக்கப்படும்.
- நீங்கள் பிறருடன் கூட்டாக ஏதேனும் வியாபாரம் செய்தாலும், முத்ரா யோஜனா மூலம் கடன் (MUDRA Loan) பெறலாம். இதில் மூன்று வகைகளில் கடன் கிடைக்கும். வகையைப் பொறுத்து வட்டி விகிதங்கள் மாறுபடும்.
MUDRA Loan: இதற்கு விண்ணப்பிப்பது எப்படி?
- முதலில் முத்ரா யோஜனாவின் mudra.org.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
- முகப்புப் பக்கம் திறக்கும்.
- அதில் ஷிஷு, கிஷோர் மற்றும் தருண் ஆகிய மூன்று வகையான கடன்கள் பற்றி எழுதப்பட்டிருப்பதை காண முடியும்.
- உங்கள் விருப்பப்படி வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
- இதன் பின்னர் ஒரு புதிய பக்கம் திறக்கும்.
- விண்ணப்பப் படிவத்தை இங்கிருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
- இந்த விண்ணப்பப்படிவத்தை பிரிண்ட் எடுத்துக்கொள்ளுங்கள்.
- விண்ணப்பப் படிவத்தை சரியாக நிரப்ப வேண்டும்.
- ஆதார் அட்டை, பான் கார்டு, நிரந்தர மற்றும் வணிக முகவரிக்கான சான்று, வருமான வரிக் கணக்கு மற்றும் சுயவரி அறிக்கையின் நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் போன்ற சில ஆவணங்களின் நகல் கேட்கப்படும்.
- இந்த விண்ணப்பப் படிவத்தை உங்கள் அருகிலுள்ள வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.
- வங்கி உங்கள் விண்ணப்பத்தை சரிபார்த்து 1 மாதத்திற்குள் உங்களுக்கு கடன் வழங்கப்படும்.
- ஆன்லைனில் விண்ணப்பிக்க, நீங்கள் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உருவாக்க வேண்டும்.
- அதன் உதவியுடன் முத்ரா கடன் இணையதளத்தில் லாக் இன் செய்ய வேண்டும்.
- அதன் பிறகு சேட்கப்படும் தகவல்களை சமர்ப்பித்து ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ