வேலையை விட்டு தூக்கிட்டாங்களா? நிதி நிலைமையை சமாளிப்பது எப்படி? இதோ டிப்ஸ்!
பல்வேறு ஐடி நிறுவனங்களிலும், உலக நிறுவனங்களிலும் லே ஆஃப் செய்து வருகிறது. இந்த சமயத்தில் நாம் நிதி நிலையை சமாளிப்பது எப்படி? இங்கு பார்ப்போம்.
எப்போது வரும், எப்படி வரும் என்றே தெரியாமல் பலரது மெயிலில் வந்து சேர்கிறது, இந்த ‘லே ஆஃப்’ மெயில். நிறுவனத்தின் நிதி இழப்பு, பண வீக்கம், நிறுவனத்திற்கு சீல், மீள முடியா கடனில் நிறுவனம் சிக்குவது, போன்ற பல்வேறு காரணங்களுக்காக ஒரு நிறுவனம் தங்களின் தொழிலாளர்களை வேலையை விட்டு தூக்கும். ஒரு சில கார்பரேட் நிறுவனங்களின் பாலிசிக்களில் வேலையை விட்டு தூக்கும் போது, தொழிலாளருக்கு 2 மாத சம்பளத்தை கொடுத்து அனுப்ப வேண்டும் என்று இருக்கும். ஆனால், இது அனைத்து நிறுவனங்களுக்கும் ஒத்துப்போகாது. இப்படி, கையில் பணமும் இல்லாமல், வீட்டு செலவுகளையும் சமாளிக்க முடியாமல் இருக்கும். இந்த சமயத்தில், நிதி நிலையை சமாளிப்பது எப்படி? இங்கு பார்ப்போம்.
மேலும் படிக்க | ரேஷன் கார்டில் புதிய உறுப்பினரை சேர்க்கணுமா? உடனே இதை படிக்கவும்
நிதி மேலாண்மை டிப்ஸ்:
>நாம், நமது வருவாயில் 50 சதவிகிதத்தை அத்தியாவசிய தேவைகளுக்காகவும், 30 சதவிகிதம் நாம் ஆடம்பரத்திற்காகவும், 20 சதவிதிகம் சேமிப்பு மற்றும் முதலீட்டுக்காகவும் பயன்படுத்துகிறோம். லே ஆஃப் ஏற்படும் போது, நாம் ஆடம்பர செலவுகள் மற்றும் சேமிப்பிற்காக ஒதுக்கப்படும் நிதியை நிறுத்திக்கொள்ள வேண்டும். இந்த சமயத்தில், நாம் நமது செலவுகளை கண்காணிக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும்.
>கையில் இருக்கும் தொகையை அடுத்து கையில் பணம் கிடைக்கும் வரை செலவுகளை சமாளிக்க முடியுமா என்பதை நாம் பார்க்க வேண்டும். இந்த பணத்தை எந்த அத்தியாவசிய தேவைக்கு உபயோகப்படுத்த முடியுமா என்பதை பார்க்க வேண்டும்.
>அத்தியாவசிய தேவைகளை அடுத்து நாம் பார்க்க வேண்டியது வீட்டு வாடகை, மின்சார கட்டணம் மற்றும் மாத மளிகை சாமான் லிஸ்ட்தான். கையில் இருக்கும் தொகையை இதற்கு பிரித்து பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
>தேவையற்ற செலவை அறவே ஒழித்துக்கட்டிவிட வேண்டும். ஹோட்டலில் சாப்பிடுவது, வெளியில் சுற்றுகையில் ஏற்படும் செலவுகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இது போன்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது.
>மாதந்தோறும் இ.எம்.ஐ கட்டணம் செலுத்துபவராக இருந்தால், அந்த கட்டணத்தை ஒரு மாதம் செலுத்தவில்லை என்றால் பின்விளைவுகள் என்ன என்று யோசிக்க வேண்டும். அப்படி எதுவும் இல்லை என்றால், அடுத்த மாதம் பெனாலிட்டியுடன் சேர்த்து இதை கட்டலாம்.
>வெகு விரைவில் வேலை தேடுவது மிகவும் முக்கியமாகும். சுய தொழில் செய்யும் ஐடியா இருந்தால், அதை தாமதிக்காமல் தொடங்கவும். அதற்கேற்ற நிதி நிலை இல்லை என்றால் பிற வேலையை தேடலாம்.
>உங்கள் சுய விவரக்குறிப்பை (Resume) அப்டேட்டாக வைத்திருந்து பின்னர் அதை நீங்கள் விண்ணப்பிக்க இருக்கும் நிறுவனங்களுக்கு அனுப்பலாம்.
மேலும் படிக்க | வேலையில் இருந்து ரிசைன்.. கிராஜுவிட்டி எவ்வளவு கிடைக்கும்? முழு கணக்கீடு இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ