How To Calculate Gratuity Rules: கிராஜுவிட்டி (Gratuity) என்பது நிறுவனம் அல்லது முதலாளியிடமிருந்து ஊழியர்கள் பெறும் தொகையாகும். இதை பணிக்கொடை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கிராஜுவிட்டியைப் பெற ஊழியர்கள் அந்த நிறுவனத்தில் குறைந்தது 5 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். அந்த ஊழியர் நிறுவனத்தை விட்டு வெளியேறும்போதோ அல்லது ஓய்வுபெறும்போதோ தான் இந்த கிராஜுவிட்டி பணம் வழங்கப்படும். அதேபோல் ஏதேனும் ஒரு காரணத்தினாலோ அல்லது விபத்தாலோ பணியாளர் இறந்தால், இந்த கிராஜுவிட்டி தொகை அந்த ஊழியரின் நாமினிக்கு வழங்கப்படும்.
இப்படித்தான் கிராஜுவிட்டி தொகை கணக்கிடப்படுகிறது:
கிராஜுவிட்டி கணக்கிடுவது மிகவும் கடினம் அல்ல. கிராஜுவிட்டி என்பது ஐந்தாண்டு பணியை முடித்தவுடன் பணிபுரியும் நிறுவனத்தால் வழங்கப்படும் தொகையாகும். இதுபோன்ற சூழ்நிலையில், ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு, ஒவ்வொரு ஆண்டும், கடைசி மாதத்தின் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி சேர்த்து, முதலில் 15 ஆல் பெருக்கப்படுகிறது. இதற்குப் பிறகு, உங்களின் பணிக்கொடைத் தொகையானது, சேவையின் மொத்த ஆண்டுகளையும் அதன்பின் ஈட்டிய தொகையையும் 26ஆல் வகுத்தால் கிடைக்கும்.
கிராஜுவிட்டிக்கான தகுதி | Eligibility For Gratuity :
1972ஆம் ஆண்டு கிராசுட்டி சட்ட விதியின் படி, அதிகபட்ச கிராஜுவிட்டி தொகை ரூ. 25 லட்சம் ஆகும். கிராஜுவிட்டி பெறுவதற்கு, பணியாளர் அந்த நிறுவனத்தில் குறைந்தது 5 ஆண்டுகள் பணியமர்த்தப்பட்டிருக்க வேண்டும். ஒரு நிறுவனத்தில் 4 ஆண்டுகள் 11 மாதங்கள் பணிபுரிந்தாலும் கிராஜுவிட்டி தொகை வழங்கப்படாது. இருப்பினும், ஊழியருக்கு திடீர் மரணம் அல்லது விபத்து ஏற்பட்டாலோ, வேலையை விட்டு வெளியேறினாலோ இந்த விதி பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | Ration Card Rules: ரேஷன் கார்டில் புதிய உறுப்பினரை சேர்க்கணுமா? உடனே இதை படிக்கவும்
கிராஜுவிட்டி கணக்கீடு | Gratuity Calculation :
கிராஜுவிட்டியானது (இறுதிச் சம்பளம்) x (15/26) x (நிறுவனத்தில் பணிபுரிந்த ஆண்டுகளின் எண்ணிக்கை) அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
உதாரணமாக, நீங்கள் 7 வருடங்களாக ஒரே நிறுவனத்தில் வேலை செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உங்களுடைய கடைசி சம்பளம் ரூ.55000 (அடிப்படை ஊதியம் மற்றும் பணிக்கொடை உட்பட) என்றால் கணக்கீடு (Employee Gratuity) இப்படி இருக்கும். (55000) x (15/26) x (7) = 2,22,115 ரூபாய் உங்களுக்கு வழங்கப்படும்.
பணிக்கொடை என்பது ஒரு ஆண்டுக்கு 15 நாட்கள் என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. அதுமட்டுமின்றி ஒரு மாதத்தில் 4 நாட்கள் விடுமுறை என்ற அடிப்படையில் 26 நாட்களை மட்டுமே பணி நாட்களாக கணக்கில் கொள்கின்றனர். இதனால் தான் பணிக்கொடை ஃபார்முலாவில் 15/26 என்பது இடம்பெறுகிறது.
பணிக்கொடை என்றால் என்ன | What Is Gratuity:
பணிக்கொடை என்பது பணியாளரின் சம்பளத்தின் ஒரு பகுதியாகும், இது உங்கள் பல வருட சேவைகளுக்கு ஈடாக நிறுவனம் வழங்குகிறது. பணிக்கொடை என்பது ஒரு நன்மைத் திட்டமாகும், இது ஓய்வூதிய பலன்களின் ஒரு பகுதியாகும் மற்றும் பணியை விட்டு வெளியேறும்போது அல்லது பணிநீக்கம் செய்யப்பட்டவுடன் பணியாளருக்கு முதலாளியால் வழங்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ