பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மூலம் மாதந்தோறும் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு எதிர்பாராத வகையில் பல்வேறு சலுகைகள் கிடைக்கப்போகிறது.  இதன் மூலம் ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கவர்ச்சியான வட்டி விகிதங்கள், வரிச் சலுகை போன்றவை கிடைக்கும் மற்றும் ஊழியர் ஒருவர் ஓய்வு பெரும்பொழுது அவருக்கு 12 இலக்க எண்(பிபிஓ) ஒன்று வழங்கப்படுகிறது, இந்த எண்ணை பயன்படுத்தி ஊழியர்கள் அவர்களது ஓய்வூதியம் தொடர்பான அனைத்து தகவல்களையும் அறிந்துகொள்ளலாம்.  இபிஎஸ் சந்தாதாரர்கள் இந்த பிபிஓ-வை பயன்படுத்தி, இபிஎஃப்ஓ ​​இணையதளத்தில் ஓய்வூதிய நிலையைச் சரிபார்த்து கொள்ளலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதேசமயம் இந்த 12 இலக்க பிபிஓ-வானது அனைவருக்கும் பொதுவானதல்ல, ஒவ்வொரு ஓய்வூதியதாரர் அல்லது குடும்ப ஓய்வூதியம் பெறுபவர் என ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வழங்கப்படுகிறது, இது அவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.  ஓய்வூதியதாரர்கள் அல்லது அவர்களது குடும்பத்தினர்கள் இந்த 12 இலக்கங்களை பயன்படுத்தி புகார் பதிவு செய்யலாம், இப்போது ஓய்வூதிய நிலையை எவ்வாறு சரிபார்க்கலாம் என்பதை இங்கே காண்போம்.  இதனை செய்ய முதலில் epfindia.gov.in-க்குள் லாக் இன் செய்யவும், பின்னர் அதிலுள்ள 'பென்ஷனர் போர்டல்' என்பதைக் கிளிக் செய்யவும்.  இப்போது அந்த பென்ஷனர் போர்டலில் 'வெல்கம் டு' என்கிற ஆப்ஷனுக்கு நீங்கள் திருப்பி விடப்படுவீர்கள், அடுத்த பிறகு 'நோ யுவர் பிபிஓ நம்பர்' என்பதைக் கிளிக் செய்யவும்.  



மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு சூப்பர் நியூஸ், இந்த தேதியில் அறிவிப்பு 


பிறகு உங்கள் வங்கி கணக்கு எண் அல்லது பிஎஃப் எண்ணை உள்ளிடவும், இப்போது உங்களுக்கு பிபிஓ கிடைக்கும்.  அதன்பிறகு நீங்கள் உங்கள் ஓய்வூதியத்தின் நிலையை எளிதாக சரிபார்க்க முடியும்.  ஓய்வூதிய நிலையை சரிபார்க்க  epfindia.gov.in-க்குள் லாக் இன் செய்து, பென்ஷனர் போர்டல் ஆன்லைன் சர்வீஸை க்ளிக் செய்து 'பென்ஷனர்ஸ் வெல்கம் போராட்டல்'க்கு செல்ல வேண்டும்.  இப்போது திரையில் தோன்றும் புதிய பக்கத்தில் வலது பக்கத்தில் உள்ள 'நோ யுவர் பென்ஷன் ஸ்டேட்டஸ்' என்பதைக் கிளிக் செய்யவும்.  அதன் பின்னர் அலுவலகம், அலுவலக ஐடி, பிபிஓ எண் ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து, ஓய்வூதியத்தின் நிலையைப் பெற, 'ஸ்டேட்டஸ் ரிஸீவ்ட்' என்பதைக் கிளிக் செய்தவுடன், ஓய்வூதியம் தொடர்பான முழுமையான தகவல்கள் உங்களுக்கு காண்பிக்கப்படும்.


மேலும் படிக்க | 7வது ஊதியக் குழு பரிந்துரை குறித்த வழக்கு செப்டம்பர் 26ம் தேதிக்கு ஒத்தி வைப்பு! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ