வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பது எப்படி
How to link aadhar card and voter card: போலி வாக்குப்பதிவை தடுக்க வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்கும் பணியை தேர்தல் ஆணையம் தற்போது தொடங்கி செயல்படுத்தி வருகிறது.
How to link aadhar card and voter card: கடந்த மாதம் இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார், தேர்தல் ஆணையர்களான ஞானேஷ் குமார், சுக்வீர் சிங் சந்து ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து மக்களவை தேர்தலுக்கான அட்டவணையை வெளியிட்டனர். அந்தவகையில் இந்த மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நாடு முழுவதும் 26 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த 26 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் மக்களவை தேர்தலுடன் வாக்குப்பதிவு நடைபெறும். இதில் முதல் கட்டத்தில் ஏப்ரல் 19ஆம் தேதியிலேயே விளவங்கோடு இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.
இந்நிலையில் தற்போது லோக்சபா தேர்தல் (Lok Sabha) தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி இந்த தேர்தலில் வாக்குபதிவு செய்ய வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இடம் பெற்று இருக்க வேண்டும். அந்த வகையில் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் வாக்காளர் அடையாள அட்டை மூலம் தங்களின் வாக்குகளை பதிவிட முடியும். இந்த அட்டை நாட்டின் குடியுரிமையின் அடையாளமாகவும் அறியப்படுகிறது.
இந்நிலையில் நீங்களும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பதற்கான அலர்ட்டை பெறுகிறீர்களா? அப்படியானால் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை நீங்கள் இணைத்துக் கொள்ளலாம். உண்மையில், போலி வாக்குப்பதிவை தடுக்க, தலைநகர் டெல்லி உட்பட நாடு முழுவதும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்கும் பணியை தேர்தல் ஆணையம் தற்போது தொடங்கியுள்ளது. எனவே இப்போது வீட்டில் இருந்தபடியே எந்தெந்த வழிகளில் ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கலாம் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
ஆன்லைனில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைப்பது எப்படி
* இதற்காக, முதலில் வாக்காளர் சேவை இணையதளத்திற்குச் சென்று, 'படிவம்' என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
* நீங்கள் ஏற்கனவே பதிவு செய்த பயனராக இருந்தால், மொபைல் எண், பாஸ்வேர்ட் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு உள்நுழை என்பதைக் கிளிக் செய்யவும்.
* நீங்கள் பதிவுசெய்யப்பட்ட பயனராக இல்லாவிட்டால், ‘Signup’ விருப்பத்தைக் கிளிக் செய்வதன் மூலம் விவரங்களை நிரப்பி செயல்முறையை முடித்து பதிவுபெறவும்.
* பதிவுசெய்த பிறகு, உங்கள் மொபைல் எண் மற்றும் பாஸ்வேர்ட்டை உள்ளிட்டு உள்நுழையவும்.
* பதிவு செய்த பிறகு, ‘படிவம் 6B’ உங்கள் முன் திறக்கப்படும். இப்போது உங்கள் சட்டமன்ற/நாடாளுமன்றத் தொகுதியைத் தேர்ந்தெடுக்கவும்.
* இதற்குப் பிறகு, உங்கள் விவரங்கள், OTP, ஆதார் எண்ணை உள்ளிட்டு சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும். இதற்குப் பிறகு உங்கள் விண்ணப்பத்தை டிராக் செய்துக் கொள்ளலாம்.
தொலைபேசி மற்றும் எஸ்எம்எஸ் மூலம் இணைப்பது எப்படி?
தொலைபேசி மூலம் ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க விரும்பினால், காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் 1950 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு வோட்டர் ஐடி மற்றும் ஆதார் அட்டையை இணைக்கலாம். ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அட்டையை மெசேஜ் மூலம் இணைக்க விரும்பினால், 166 அல்லது 51969 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பி இணைத்துக் கொள்ளலாம்.
மேலும் படிக்க | ஆதார் கார்டில் உங்களால் என்ன என்ன தகவல்களை மாற்ற முடியும்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ