Ayushman Card: நாட்டில் உள்ள ஏராளமான மக்களுக்கு நன்மை பயக்கும் பல திட்டங்களை மத்திய அரசு நடத்தி வருகின்றது. குறிப்பாக, மூத்த குடிமக்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோருக்கு இந்த திட்டங்களால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். சில திட்டங்களில் மானியமும், சில திட்டங்களில் சில பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், பல திட்டங்களின் கீழ் நிதி பலன்களை வழங்குவதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வரிசையில், ஒரு முக்கியமான திட்டம்தான் ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டம். இதன் கீழ் தகுதியான நபர்களின் ஆயுஷ்மான் அட்டைகள் உருவாக்கப்படு, இந்த அட்டையின் மூலம் பட்டியலிடப்பட்ட மருத்துவமனைகளில் அட்டைதாரர் தனது இலவச சிகிச்சையைப் பெற வழிவகை செய்யப்படுகின்றது. 


இப்போது ஆயுஷ்மான் கார்டுகளை 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் உருவாக்க முடியும். நீங்கள் இந்த பிரிவில் இருந்தாலோ, அல்லது உங்கள் வீட்டில் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் இருந்தாலோ, அவர்களுக்கான ஆயுஷ்மான் கார்டை உருவாக்கலாம். ஆயுஷ்மான் அட்டையை பெறுவதற்கான வழி என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.


ஆயுஷ்மான் அட்டை உருவாக்கும் செயல்முறை பின்வருமாறு:-


ஸ்டெப் 1:


- உங்கள் வயது 70 -க்கு மேல் இருந்தால், நீங்கள் ஆயுஷ்மான் கார்டைப் பெறலாம்.
- இதற்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
- ஆயுஷ்மான் கார்டைப் பெற, முதலில் திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான pmjay.gov.in -க்குச் செல்ல வேண்டும்.


மேலும் படிக்க | Budget 2025: மிடில் கிளாஸ் மக்களுக்கு மீண்டும் குட் நியூஸ்.... தயாராகும் நிதி அமைச்சகம்


ஸ்டெப் 2:


- வலைத்தளத்திற்குச் சென்றவுடன், இங்கே பல விருப்பங்கள் உங்கள் முன் இருக்கும்.
- இவற்றில் உள்ள ‘PMJAY for 70+’ பகுதிக்குச் செல்ல வேண்டும்.
- இதற்குப் பிறகு, ‘Enrol for PMJAY for 70+’ என்ற ஆப்ஷன் இருக்கும். அதைக் கிளிக் செய்ய வேண்டும்.


ஸ்டெப் 3


- அதன் பின்னர், உங்கள் ஆதார் அட்டை விவரங்களை இங்கே கொடுக்க வேண்டும்.
- இதற்கு, உங்கள் ஆதார் அட்டையை வெரிஃபை செய்ய வேண்டும்.
- ஆதார் சரிபார்ப்புக்கு, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். அதை நீங்கள் இங்கே உள்ளிட வேண்டும்


ஸ்டெப் 4


- இதன் பின்னர் ஆதார் வெரிஃஇகேஷன் முடியும். 
- அதற்கு பிறகு உங்கள் ஆவணங்களை இங்கே பதிவேற்றவும்
- இவற்றில், குடியுரிமைச் சான்றிதழ், புகைப்படம், ஆதார் அட்டை மற்றும் பிற ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- அதன் பின்னர் சப்மிட் பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும்.
- சிறிது நேரம் கழித்து, உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதைக் காண்பீர்கள்.
- அதன் பிறகு, நீங்கள் ஆயுஷ்மான் அட்டையை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
- இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சையைப் பெற முடியும்.


மேலும் படிக்க | EPFO சூப்பர் செய்தி: இந்த உறுப்பினர்களுக்கு ரூ.50,000 கூடுதல் போனஸ், உங்களுக்கு கிடைக்குமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ