ஆதார் கார்ட் இருந்தால் மட்டும் போதும்! ரூ. 5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு பெறலாம்!

Ayushman Bharat Card: 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவரும் ஆயுஷ்மான் இலவச மருத்துவ காப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம். எப்படி விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
1 /5

அனைவருக்கும் சுகாதாரம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா (AB PM-JAY) திட்டத்தில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதன்படி, 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்கு வரம்பை அதிகப்படுத்தி உள்ளது.    

2 /5

ஒரு குடும்பத்தின் வருமானத்தை பொருட்படுத்தாமல் 4.5 கோடிக்கு அதிகமான குடும்பங்களுக்கு சுகாதாரம் கிடைப்பதை இந்த திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது. இந்த திட்டத்தில் ரூபாய் 5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீட்டில் 6 கோடி மூத்த குடிமக்கள் பயன்பெற உள்ளனர்.  

3 /5

மூத்த குடிமக்கள் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இணைய ஆதார் கார்ட் மட்டும் இருந்தால் போதுமானது. NHA இணையதளம் அல்லது ஆயுஷ்மான் செயலி மூலம் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.  

4 /5

70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் ஆயுஷ்மான் பாரத் PM-JAY திட்டத்தின் கீழ் இணைந்து அடையாள அட்டையை பெற்று கொள்ளலாம். இந்த அட்டை மூலம் ரூ. 5 லட்சம் வரை ஆண்டு கவரேஜ் வழங்கப்படும்.  

5 /5

தனியார் உடல்நலக் காப்பீடு அல்லது வேறு ஏதேனும் மாநிலக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஏற்கனவே இணைந்து இருந்தாலும், மூத்த குடிமக்கள் இந்த AB PM-JAY திட்டத்தின் கீழ் நன்மைகளைப் பெறத் தகுதியுடையவர்கள்.