Credit Card: கிரெடிட் கார்டை UPI மூலம் பயன்படுத்துவது எப்படி? எளிதான டிப்ஸ்
கிரெடிட் கார்டை பயன்படுத்தி யுபிஐ மூலம் பணம் செலுத்தலாம். மளிகை பொருட்கள் முதல் ஆடைகள் வாங்குவது வரை நீங்கள் செய்யும் செலவுகளுக்கான பில்லை கிரெடிட் கார்டில் இருந்து யுபிஐ வழியாகவே செலுத்திவிட முடியும்.
உங்கள் கிரெடிட் கார்டை மிகவும் எளிமையாக பயன்படுத்த விரும்புகிறீர்களா?. நிச்சயமாக ஏதாவதொரு யுபிஐ செயலி மூலம் அதனை மிகவும் வசதியாகவும், எளிமையாகவும் பயன்படுத்தலாம். உங்கள் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு தொடர்பான தகவல்களை யுபிஐ செயலியில் நீங்கள் பதிவிட வேண்டும். இதற்கு அரசும் அனுமதி கொடுத்துள்ளது. டிஜிட்டல் பேமெண்ட் முறைகளை மிகவும் எளிமையாக்கும் வகையில் கொடுக்கப்பட்டுள்ள இந்த அனுமதியால், பேமெண்டுகளை மிகமிக எளிதாக, பாதுகாப்பாக மேற்கொள்ளலாம். ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் OTP பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும்.
PhonePe செயலி மூலம் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்துவது எப்படி?
PhonePe ஆப்ஸ் மூலம் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்த, முதலில் கிரெடிட் அல்லது டெபிட் கார்டை பேமெண்ட் ஆப்சனில் சேர்க்க வேண்டும். எப்படி சேர்ப்பது என உங்களுக்கு தெரியவில்லை என்றால், இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
* உங்கள் ஸ்மார்ட்போனில் PhonePe-ஐ திறக்கவும்
* உங்கள் சுயவிவரப் படத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
* வங்கிக் கணக்குகள் மற்றும் கார்டுகளைத் தேர்ந்தெடுத்து, உங்கள் கார்டைச் சேர்க்கவும்
* கார்டு எண், காலாவதி தேதி, CVV மற்றும் அட்டைதாரரின் பெயர் மற்றும் பில்லிங் முகவரியை உள்ளிடவும்.
* விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நீங்கள் ஏற்க வேண்டும்.
* உங்கள் புதிய கார்டின் கட்டண முறை பட்டியலுக்கு அடுத்துள்ள Activate என்பதைத் கிளிக் செய்யவும்.
* உங்கள் மொபைலுக்கு வந்திருக்கும் OTP-ஐ பதிவிடவும்.
உங்கள் கார்டு யுபிஐ ஐடியில் சேர்க்கப்பட்டவுடன் உடனடியாக பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். அதாவது, கிரெடிட் கார்டு மூலம் PhonePe-வில் இருந்து வணிகர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கான பில்லை செலுத்தலாம்.
மேலும் படிக்க | கிரெடிட் கார்டு பில் தேதியை தவறவிட்டுவிட்டீர்களா? ஆர்பிஐ சொல்வது இதுதான்
GPay மூலம் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்துவது எப்படி?
* உங்கள் ஸ்மார்ட்போனில் GPayஐத் திறக்கவும்
* உங்கள் சுயவிவரப் படத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
* வங்கி கணக்குகள் மற்றும் கார்டுகளில் உங்கள் கார்டை தேர்ந்தெடுக்கவும்
* கார்டு எண், காலாவதி தேதி, CVV மற்றும் அட்டைதாரரின் பெயர் மற்றும் பில்லிங் முகவரியை உள்ளிடவும்.
* விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நீங்கள் ஏற்க வேண்டும்.
* உங்கள் புதிய கார்டின் கட்டண முறை பட்டியலுக்கு அடுத்துள்ள Activate என்பதை கிளிக் செய்யவும்.
* உங்கள் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிடவும்.
சரியாக உங்கள் கார்டை பதிவிட்டவுடன் பேமெண்ட் செய்ய தொடங்கலாம். QR குறியீடு அடிப்படையிலான கட்டணங்கள், Google Pay பில் பேமெண்ட்கள் மற்றும் ரீசார்ஜ்கள், Myntra, Dunzo, Yatra, MagicPin, Coolwinks, EaseMyTrip மற்றும் Confirmtkt ஆண்ட்ராய்டு பயன்பாடுகள் , மற்றும் Google Pay பில் பேமெண்ட்கள் மற்றும் recharges.android ஆப்ஸ் மற்றும் Google Pay பில் பேமெண்ட்கள் மற்றும் ரீசார்ஜ்கள் ஆகியவற்றை இதில் மேற்கொள்ள முடியும்.
Paytm ஆப் மூலம் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்துவது எப்படி?
* உங்கள் ஸ்மார்ட்போனில் Paytm ஐ திறக்கவும்.
* UPI மற்றும் கட்டண அமைப்புகள் விருப்பத்திற்குச் செல்லவும்
* கொடுக்கப்பட்ட கார்டு லிஸ்டில் உங்கள் கார்டை தேர்ந்தெடுக்கவும்
* கார்டு எண், காலாவதி தேதி, CVV மற்றும் அட்டைதாரரின் பெயர் மற்றும் பில்லிங் முகவரியை உள்ளிடவும்.
* விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நீங்கள் ஏற்க வேண்டும்.
* உங்கள் புதிய கார்டின் கட்டண முறை பட்டியலுக்கு அடுத்துள்ள Activate என்பதை கிளிக் செய்யவும்.
* உங்கள் மொபைலுக்கு வந்திருக்கும் OTP-ஐ உள்ளிடவும்
இதன் பிறகு பேடிஎம் மூலம் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பணப்பரிவர்த்தனைகளை எளிமையாக மேற்கொள்ளலாம்.
மேலும் படிக்க | ஊர் சுத்துவதற்கு ஆஃபர்களை அள்ளி வழங்கும் கிரெடிட் கார்டுகள்! செலவு மிச்சம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ