EPF Accounts and UAN Merging: EPFO சந்தாதாரரா நீங்கள்? அப்படி என்றால் இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இபிஎஃப் கணக்கு தொடர்பான ஒரு பொதுவான கேள்வி உள்ளது. பலரிடம் ஒன்றுக்கு மேற்பட்ட பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்குகள் மற்றும் யுஏஎன் எண்கள் (UAN) இருக்கின்றன. அப்படி இருந்தால் என்ன செய்வது? இவற்றை இணைப்பது எப்படி? இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெரும்பாலும், ஒரு நபர் அடிக்கடி வேலையை மாற்றும்போது பல இபிஎஃப் கணக்குகள் உருவாகின்றன. மேலும் சில சமயங்களில் அலுவலக கிளார்குகளின் தவறுகளாலும் ஒரே நபருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகள் உருவாகி விடுகின்றன. இந்த காலத்தில் இது சாதாரண விஷயமாகி விட்டது. ஆனால், ஒன்றுக்கும் மேற்பட்ட இபிஎஃப் கணக்குகளை (EPF Accounts) வைத்திருப்பது உங்கள் ஓய்வூதிய சேமிப்பை நிர்வகிக்கும் போது குழப்பத்தை உண்டாக்கும். 


ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, பல EPF கணக்குகள் மற்றும் UAN -ஐ ஒரே கணக்கில் இணைப்பதற்கான செயல்முறையை வழங்குகிறது. இந்த செயல்முறையை பின்பற்றி ஒரு ஊழியர் தனது அனைத்து கணக்குகளையும் ஒன்றிணைக்கலாம். அந்த செயல்முறையை இங்கே காணலாம்.


இபிஎஃப் கணக்கு இணைப்புச் (EPF Accounts Merging) செயல்முறையைத் தொடங்குவதற்கு முன், பின்வரும் இந்த தகவல்கள் உங்களிடம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்:


- UAN: 
உங்கள் இபிஎஃப் கணக்குகளுடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து UAN களையும் சேகரித்துக் கொள்ளவும்.


- EPF உறுப்பினர் ஐடி (EPF Member ID): 
அனைத்து UAN -களுடன் தொடர்புடைய EPF உறுப்பினர் ஐடியைக் குறித்துக் கொள்ளுங்கள்.


- தனிப்பட்ட விவரங்கள் (Personal Details): 
பெயர், பிறந்த தேதி மற்றும் ஆதார் எண் போன்ற உங்களின் தனிப்பட்ட விவரங்கள் சரியாக இருக்கின்றதா என்பதையும், EPFO ​​தரவுத்தளத்தில் இவை புதுப்பிக்கப்பட்டுள்ளனவா என்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள். 


EPFO Helpdesk ஐத் தொடர்பு கொள்ளவும்


வெரிஃபிகேஷன் செயல்பாட்டின் போது ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டாலோ அல்லது ஒருங்கிணைந்த உறுப்பினர் போர்ட்டலை அணுக முடியாமல் போனாலோ, உதவிக்கு EPFO Helpdesk ஐத் தொடர்பு கொள்ளவும். UAN சரிபார்ப்பு தொடர்பான சிக்கல்களைத் தீர்ப்பதற்கு இதன் மூலம் வழிகாட்டுதல்களும் உதவியும் கிடைக்கும். 


UAN Verification


அனைத்து UAN இன் நம்பகத்தன்மையையும் சரிபார்க்க EPFO ​​இன் ஒருங்கிணைந்த உறுப்பினர் போர்டல் அல்லது UMANG செயலியை (UMANG App) பயன்படுத்தவும். வழங்கப்பட்ட UAN இல் ஏதேனும் பொருத்தமின்மை அல்லது தவறுகள் இருந்தால், அதை இந்த வழியின் நீங்கள் அறியலாம். 


மேலும் படிக்க | வீட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்? வருமான வரித்துறை விதிகளை மீறினால் சிக்கல்!!


EPF Balance Transfer


இபிஎஃப் சந்தாதாரர்கள் (EPF Subscribers) UAN ஐச் சரிபார்த்தவுடன், பழைய கணக்குகளிலிருந்து நடப்புக் கணக்குகளுக்கு EPF இருப்பை மாற்றும் செயல்முறையைத் தொடங்க வேண்டும். இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) ஆன்லைனில் e-Seva போர்டல் (e-Seva Portal) மூலமாகவோ அல்லது அவர்களது தற்போதைய பணியாளரிடம் பரிமாற்றக் கோரிக்கைக்கான படிவத்தை சமர்பித்தோ இதைச் செய்யலாம்.


படிவம் 13 (Form 13) -ஐ நிரப்ப வேண்டும்


பல UAN -களில் உங்களின் தனிப்பட்ட விவரங்களில் பொருத்தமின்மை இருந்தால் அல்லது ஆன்லைன் பரிமாற்ற செயல்முறை சாத்தியமில்லை என்றால், படிவம் 13 -ஐ (Transfer Request) பூர்த்தி செய்து யூஏஎன் -களை இணைப்பதற்கான வழியை தேர்வு செய்யலாம். இந்தப் படிவம் EPFO ​​இணையதளத்தில் கிடைக்கும். இந்த படிவத்தை உங்கள் தற்போதைய நிறுவனம் மூலம் நீங்கள் சமர்ப்பிக்கலாம்.


ஃபாலோ அப் நடவடிக்கை


கணக்குகளை சேர்ப்பதற்கு தேவையான படிவங்களைச் சமர்ப்பித்த பிறகு அல்லது ஆன்லைன் பரிமாற்றத்தைத் தொடங்கிய பிறகு, அந்த செயல்முறை சுமூகமாக முடிந்ததை உறுதிசெய்ய, உங்கள் தற்போதைய நிறுவனம் மற்றும் EPFO ​​ஐத் தொடர்புகொள்ளலாம். இது தவிர, ஒருங்கிணைந்த உறுப்பினர் போர்டல் (Integrated Member Portal) மூலமாகவோ அல்லது EPFO ​​ஹெல்ப்டெஸ்க்கைத் தொடர்புகொண்டோ உங்கள் பரிமாற்றக் கோரிக்கையின் நிலையைக் கண்காணிக்கலாம். 


UAN -ஐ கன்சாலிடேட் செய்வது எப்படி?


இபிஎஃப் இருப்புத் தொகை (EPF Amount) மாற்றப்பட்டு, தேவையான சம்பிரதாயங்கள் முடிந்ததும், EPFO ​​உங்களின் பல UAN களை ஒரே UAN ஆக ஒருங்கிணைக்கும். இந்த ஒருங்கிணைந்த UAN, உங்களின் இணைக்கப்பட்ட EPF கணக்குடன் இணைக்கப்பட்டு, உங்கள் ஓய்வூதிய சேமிப்பை நிர்வகிப்பதை எளிதாக்கும்.


இந்த வகையில், மேலே கொடுக்கப்பட்டுள்ள செயல்முறையை பின்பற்றி, ஒன்றுக்கும் மேற்பட்ட இபிஎஃப் கணக்குகள் மற்றும் UAN -களை வெற்றிகரமாக ஒன்றிணைக்கலாம். 


மேலும் படிக்க | சீனியர் சிட்டிசன்களுக்கு இனி டபுள் வருமானம்.. FD வட்டியை உயர்த்திய ICICI வங்கி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ