இன்றைய காலகட்டத்தில், வேலை தேடுவதை விட சொந்தமாக தொழில் தொடங்குவதில், இளைஞர்கள் மத்தியில் ஆர்வம் உள்ளது. அதற்கு மத்திய அரசும் ஊக்கமும் அளித்து வருகிறது. தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், முத்ரா திட்டம் போன்ற பல திட்டங்கள் மூலம், எளிமையான வகையில் குறைந்த வட்டியில் கடன் அளித்து வருகிறது. அந்த வகையில், மத்திய அரசின் பிரதம மந்திரி ஜன அவுஷதி திட்டம் என்னும் மக்கள் மருந்தகத் திட்டத்தின் கீழ், நீங்களும் மருந்து கடை திறந்து, மலிவு விலை மருந்துகளை விற்று லாபம் பெறலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சாமானிய மக்களின், மருந்து செலவை குறைக்கும் வகையில், மலிவு விலையில் மருந்துகளை வழங்க மக்கள் மருந்தகங்கள் திறக்கப்படுகின்றன. சமீபத்தில், மத்திய அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் மக்கள் மருந்தாக உங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வலியுறுத்தி வருகிறது. 2024 மார்ச் மாதத்திற்குள், மக்கள் மருந்தகங்களின் (Jan Aushadhi Kendra) எண்ணிக்கையை, 10,000 என்ற அளவில் அதிகரிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 


மக்கள் மருந்தகம் திறப்பதற்கான தகுதி


மக்கள் மருந்தகத்தை திறக்க மத்திய அரசு மூன்று பிரிவுகளை உருவாக்கியுள்ளது. முதல் பிரிவில் மருந்தாளர், மருத்துவ, பதிவு செய்யப்பட்ட பயிற்சி மருத்துவர் எவரும் மக்கள் மருந்தகத்தை திறக்கலாம். இரண்டாவது பிரிவில், அறக்கட்டளைகள், தன்னார்வ துண்டு நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகள் போன்றவை, மக்கள் மருந்தகத்தை திறக்கலாம். மூன்றாவது பிரிவில் மாநில அரசுகளால் பரிந்துரைக்கப்படும் ஏஜென்சிகளுக்கு மக்கள் மருந்தகத்தை திறக்க வாய்ப்பு அளிக்கப்படும்.


மக்கள் மருந்தகத்தை திறப்பதற்கான நிபந்தனைகள்


மக்கள் மருந்தகத்தை திறக்க நீங்கள் பார்மசி படிப்பு படித்திருக்க வேண்டும். டி ஃபார்ம் அல்லது பி பார்ம் என்னும் பார்மஸி பட்டம் பெற்றிருக்க வேண்டும். மக்கள் மருந்தகம் திறப்பதற்கான விண்ணப்பத்தில், உங்கள் பட்டத்தை சான்றாக சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். மக்கள் மருந்தாக திட்டத்தின் கீழ், ஷெட்யூல்ட் வகுப்பினர், ஷெட்யூல்ட் பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு, மருந்துகளை வாங்க, ரூபாய் ஐயாயிரம் வரை முன்பணம் வழங்கப்படுகிறது.


மக்கள் மருந்தகம் திறக்க விண்ணப்பிக்கும் முறை


அவுஷதி கேந்திரா என்னும் மக்கள் மருந்தகத்தை திறக்க, முதலில் ஜென் அவுஷதி கேந்திரா என்ற பெயரில் சில்லறை மருந்து விற்பனை உரிமத்தை பெற வேண்டும். இதற்கு https://janaushadhi.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். படிவத்தைப் பதிவிறக்கிய பிறகு, பியூரோ ஆஃப் பார்மா பப்ளிக் செக்டர் அண்டர்டேக்கிங் ஆஃப் இந்தியாவின் பொது மேலாளருக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.


மக்கள் மருந்தகம் மூலம் கிடைக்கும் வருமானம்


ஜன் ஔஷதி கேந்திராவில் மருந்து விற்பனையில் 20 சதவீதம் வரை கமிஷன் கிடைக்கும். இந்த கமிஷன் தவிர, ஒவ்வொரு மாதமும் செய்யப்படும் விற்பனையில் 15 சதவீதம் வரை ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது. மக்கள் மருந்தக திட்டத்தின் கீழ், மருந்து கடை திறக்க தேவையான மருந்துகள் மற்றும் பிற பொருட்கள் வாங்க 1.5 லட்சம் ரூபாய் வரை அரசு உதவி வழங்குகிறது. இது தவிர பில்லிங் செய்ய கம்ப்யூட்டர்கள் மற்றும் பிரிண்டர்கள் வாங்குவதற்கு 50,000 ரூபாய் வரையும் அரசு உதவி கிடைக்கும்.


மக்கள் மருந்தகத்தில் கிடைக்கும் மருந்துகள்


பிரதம மந்திரியின் பாரதீய ஜன அவுஷதி யோஜனா திட்டத்தின் கீழ், 1950க்கும் அதிகமான வகை மருந்துகள் மற்றும் 293 அறுவை சிகிச்சை கருவிகள் ஆகியவை அடங்கும். இதில் கார்டியோவாஸ்குலர், கேன்சர், சர்க்கரை நோய், ஒவ்வாமைக்கான மருந்துகள், குழந்தைகளுக்கான மருந்துகள் என பல வகை மருந்துகள் அடங்கும். மத்திர அரசு, தற்போது குருகிராம், பெங்களூரு, சென்னை, குவஹாத்தி மற்றும் சூரத் ஆகிய இடங்களில் ஐந்து கிடங்குகள் வைத்துள்ளன. இவற்றின் மூலம், நாட்டின் கிராமப்புறங்களுக்கும் மருந்துகள் வழங்கப்படுகின்றன. தற்போது, ​​மக்கள் மருந்தகம் என்னும் ஜன ஔஷதி கேந்திராவில் கிடைக்கும் மருந்துகளுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடியை 75 சதவீதமாக உயர்த்த சாத்தியம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.


மக்கள் மருந்தக மையத்தைத் திறக்க நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 


மக்கள் மருந்தகம் திறக்க அதிகாரப்பூர்வ இணையதளம் - www.janaushadi.gov.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பான எந்தத் தகவலையும் 1800 180 8080 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் பெறலாம்.


மேலும் படிக்க | ரயில் தாமதம் ஆயிடுச்சா? அப்போ பயணிகளுக்கு ரீபண்ட் கண்டிப்பா கிடைக்கும்.. எப்படி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ