மக்கள் மருந்தகம்... இனி பொது மக்களுக்கு 75% தள்ளுபடியில் மருந்துகள் கிடைக்குமா..!!

பிரதம மந்திரி பாரதிய ஜன ஔஷதி திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மக்கள் மருத்தக மையங்களின் எண்ணிக்கையை 25,000 ஆக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 24, 2023, 03:01 PM IST
  • தற்போது மக்கள் மருந்தகத்தில் பல மருந்துகளுக்கு 50% தள்ளுபடி கிடைக்கும்.
  • நாட்டின் கிராமப்புறங்களுக்கும் மருந்துகள் வழங்கப்படுகின்றன.
  • மிகக் குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கின்றன.
மக்கள் மருந்தகம்... இனி பொது மக்களுக்கு 75% தள்ளுபடியில் மருந்துகள் கிடைக்குமா..!! title=

பட்ஜெட் 2024: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆறாவது முறையாக பட்ஜெட்டை (Union Budget 2024) பிப்ரவரி 1, 2024 அன்று தாக்கல் செய்வார். அதற்குப் பிறகு நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், மோடி அரசின் இரண்டாவது ஆட்சியின் கடைசி பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இப்படிப்பட்ட சூழ்நிலையில், மக்களவை தேர்தல் காரணமாக, இது முழு அளவிலான பட்ஜெட் ஆக இருக்காது என்றாலும், சாமானியர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவது தொடர்பாக, அரசு முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாம். பிரதம மந்திரி பாரதிய ஜனௌஷதி பரியோஜனா (PMBJP) திட்டம் தொடர்பாக அரசாங்கம் ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிடலாம். நாடு முழுவதும் 25000 மக்கள் மருந்தகம் என்னும் பாரதீய ஜன ஔஷதி மையங்களை திறப்பதே அரசின் இலக்கு. தவிர, ஜன் ஔஷதி கேந்திராவில் கிடைக்கும் மருந்துகளுக்கு 75 சதவீதம் வரை தள்ளுபடியையும் அரசாங்கம் அறிவிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜன் ஔஷதி மையத்தைத் திறப்பது தொடர்பான அரசின் இலக்கு 

பிரதம மந்திரி பாரதிய ஜன ஔஷதி திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதுவே ஒரு பெரிய சாதனை. தற்போது நாட்டில் 785க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மக்கள் மருந்தகங்கள் என்னும் ஜன் ஔஷதி மையங்கள் உள்ளன. இங்கிருந்து மருந்துகளை வாங்கியதன் மூலம் மக்கள் சுமார் 5000 கோடி ரூபாய் மிச்சப்படுத்தியுள்ளனர். கடந்த 9 ஆண்டுகளில் மக்கள் மருந்தகம் 100 மடங்கு அதிகரித்துள்ளது. 2014 ஆம் ஆண்டில், 80 மக்கள் மருந்தக மையங்கள் மட்டுமே இருந்தன. அவை இப்போது 10,000 ஆக அதிகரித்துள்ளது. மக்கள் மருத்தக மையங்களின் எண்ணிக்கையை 25,000 ஆக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்த இலக்கை மார்ச் 2026க்குள் முடிக்க அரசு விரும்புகிறது.

மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசு.. 4% DA ஹைக், சம்பளம் உயர்வு

மக்கள் மருந்தகத்தில் பல மருந்துகளுக்கு 50% தள்ளுபடி

பிரதம மந்திரி பாரதிய ஜனௌஷதி யோஜனா திட்டத்தின் கீழ், 1963 வகையான மருந்துகள் மற்றும் 293 அறுவை சிகிச்சை கருவிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் கார்டியோவாஸ்குலர், கேன்சர், சர்க்கரை நோய், ஒவ்வாமை எதிர்ப்பு, காஸ்ட்ரோ மருந்துகள் மற்றும் குழந்தைகளுக்கான மருந்துகளும் அடங்கும். தற்போது குருகிராம், பெங்களூரு, சென்னை, குவஹாத்தி மற்றும் சூரத் ஆகிய இடங்களில் ஐந்து கிடங்குகளைக் கொண்டுள்ளது. இவற்றின் மூலம், நாட்டின் கிராமப்புறங்களுக்கும் மருந்துகள் வழங்கப்படுகின்றன. இங்கு மிகக் குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கின்றன. தற்போது, ​​மக்கள் மருந்தகம் என்னும் ஜன் ஔஷதி கேந்திராவில் கிடைக்கும் மருந்துகளுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கிறது. மோடி அரசால் இந்த தள்ளுபடியை 75 சதவீதமாக உயர்த்த முடியும்.

ஜன் ஔஷதி மையத்தைத் திறக்க நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 

பிஎம்பிஐ-யின் அதிகாரப்பூர்வ இணையதளம் - www.janaushadi.gov.in மூலம் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் புதிய மக்கள் மருந்தக மையங்களைத் திறப்பதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பான எந்தத் தகவலையும் 1800 180 8080 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் பெறலாம்.

மேலும் படிக்க | நாம் வீட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்? வருமான வரியின் புதிய விதிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News