EPF Account Balance Check: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, நாடு முழுவதும் கோடிக்கணக்கான சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது. அலுவக பணிகளில் இருக்கும் அனைவரும் இபிஎஃப் கணக்கை திறக்கிறார்கள். மாதா மாதம் ஊழியர்கள் ஒரு தொகையை இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்கிறார்கள். அதே அளவு தொகையை நிறுவனமும் டெபாசிட் செய்கின்றது. இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தை பணியாளர்கள் ஓய்வு பெறும் நேரத்தில் எடுத்துக்கொள்ளலாம். இது ஓய்வு காலத்திற்கான மிகச்சிறந்த உதவித்தொகையாக பார்க்கப்படுகின்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இபிஎஃப் கணக்கில் (EPF Account) உள்ள தொகையை பணி ஓய்வுக்கு பிறகுதான் எடுக்க வேண்டும் என்றில்லை. அவசர காலங்களிலும் சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களிலும் இபிஎஃப் இருப்பிலிருந்து தொகையை எடுக்கலாம். நமது இபஎஃப் கணக்கில் நிறுவனம் மாதா மாதம் தொகையை டெபாசிட் செய்கின்றதா? அரசாங்கம் போடும் வட்டித் தொகை நமது கணக்கில் டெபாசிட் ஆனதா? மாதா மாதம் நாம் பங்களிக்கும் தொகை நமது கணக்கில் சேர்கிறதா? இந்த அனைத்தையும் சரிபார்க்க நாம் எங்கும் சென்று அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தபடியே இதை நாம் செய்யலாம். அதைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 


இபிஎஃப் தொகையை செக் செய்வதற்கான வழிமுறைகள்:


1. இபிஎஃப்ஓ இணையதளம் (EPFO Website) மூலம் இபிஎஃப் இருப்பை சரிபார்ப்பதற்கான வழிமுறை


- முதலில் https://www.epfindia.gov.in/site_en/index.php என்ற இபிஎஃப் இணையதளத்திற்கு செல்லவும்.


- போர்டலில் லாக் இன் செய்ய வேண்டும்.


- அதில் Our Services என்ற டேபை கிளிக் செய்யவும்.


- அதன் பிறகு அதில் உள்ள For Employees என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.


- அதன் பின்னர் PF Passbook View என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.


- இதில் பணியாளர்கள் இபிஎஃப் கணக்கில் உள்ள மாதாந்திர பங்களிப்புடன் மொத்த இபிஎஃப் இருப்பையும் தெரிந்துகொள்ளலாம். 


2. உமங் செயலி மூலம் இபிஎஃப் இருப்பை சரிபார்ப்பதற்கான வழிமுறை


- உமங் செயலி மூலம் இருப்பை சரி பார்க்க உமங் செயலியை மொபைலில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். 


 - இந்த செயலியில் பணியாளர்கள் 127 வகையான சேவைகளின் பலனைப் பெற முடியும்.  


- உமங் செயலி (Umang App) இந்திய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட ஒரு மொபைல் செயலியாகும்.


- இந்த செயலியானது ஆல்-இன்-ஒன், சிங்கிள், யூனிஃபைட், செக்யூர், மல்டி-சேனல், மல்டி-ப்ளாட்ஃபர்ம், பல மொழி வசதிகளை ஆகியவற்றை பயனர்களுக்கு வழங்குகிறது.


- இருப்பை சரிபார்க்க முதலில் உமங் செயலியில் லாக் இன் செய்ய வேண்டும். 


- அடுத்து View Passbook என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். 


- அதன் பிறகு UAN எண்ணை உள்ளிடவும். 


- உங்கள் மொபைலில் OTP வரும், அதை உள்ளிடவும். 


- அதன் பிறகு, இ-பாஸ்புக்கைக் காண உறுப்பினர் ஐடியைக் கிளிக் செய்ய வேண்டும். 


மேலும் படிக்க | ஆன்லைனில் சேமிப்புக் கணக்கைத் திறப்பதில் இருக்கும் ஆபத்துக்கள் என்ன?


3. SMS மூலம் இபிஎஃப் இருப்பை சரிபார்ப்பதற்கான வழிமுறை


- இபிஎஃப் கணக்கில் உள்ள இருப்பை ஆஃப்லைனில் சரிபார்க்க விரும்பினால், பணியாளர்கள் தங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மூலம் இதை தெரிந்துகொள்ளலாம். 


- இதற்கு பணியாளர்கள் தங்கள் UAN எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 7738299899 என்ற எண்ணுக்கு SMS அனுப்ப வேண்டும். 


- பின்வரும் வடிவத்தில் 7738299899 என்ற எண்ணுக்கு SMS அனுப்ப வேண்டும்: EPFOHO UAN ENG.


- இதில் கடைசி மூன்று எழுத்துக்கள் மொழியை குறிக்கும். தமிழுக்கு EPFOHO UAN TAM என அனுப்ப வேண்டும்.


- தங்கள் கணக்கின் தற்போதைய EPF இருப்பு விவரங்களை பணியாளர்கள் தாங்கள் விரும்பும் மொழியில் பார்க்கும் விருப்பத்தை பெறுகிறார்கள். 


- பிற மொழிகளுக்கு அந்தந்த மொழியின் முதல் மூன்று எழுத்துக்களை உள்ளிட வேண்டும்.


4. மிஸ்டு கால் (Missed Call) மூலம் இபிஎஃப் இருப்பை சரிபார்ப்பதற்கான வழிமுறை


- மிஸ்டு கால் கொடுத்தும் இபிஎஃப் இருப்பை சரிபார்க்கலாம்.


- இதற்கு, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 011-22901406 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க வெண்டும். 


- இதற்குப் பிறகு, சில நாட்களுக்குள் உங்கள் EPF கணக்கின் இருப்பு பற்றிய தகவலை பெறலாம்.


மேலும் படிக்க | ஆன்லைனில் செய்யக்கூடிய அற்புதமான சிறு தொழில்கள்! செம லாபம் பார்க்கலாம்..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ