Open Savings Account Online: அனைவருக்கும் மாதம் மாதம் தங்கள் வருமானத்தில் இருந்து ஒரு சிறு தொகையை சேமிக்க ஆசை இருக்கும். இதற்காக தனியாக பட்ஜெட் போட்டு செலவு செய்பவர்களும் உண்டு. தேவையான நிதியை சேமித்து வைப்பது ஒருவரின் எதிர்காலத்தை தேவையை பயனுள்ளதாக மாற்றும். பெரும்பாலானவர்களுக்கு, சேமிப்பை கொண்டு செல்வதற்கு நம்பகமான வழியாக வங்கி கணக்கு உள்ளது. வங்கியில் சேமிப்புக் கணக்குகள் நமது அன்றாடச் செலவுகளைப் பூர்த்தி செய்வதற்கும், பண பரிவர்த்தனை செய்வதற்கும், சேமித்து வைப்பதற்கும் பயனுள்ளதாக இருக்கும். அதனால்தான் பலரும் சேமிப்பிற்கு வங்கி கணக்குகளை விரும்புகின்றனர்.
ஆரம்ப காலத்தில் வங்கி கணக்கை திறப்பதற்கு வங்கியை நாட வேண்டி இருந்தது. தற்போது எவ்வளவு வங்கி கணக்குகளை வேண்டும் என்றாலும் சில நிமிடங்களில் ஆன்லைனில் திறக்க முடியும். டிஜிட்டல் பேங்கிங்கின் மூலம் பல விஷயங்களை நாம் இருந்த இடத்தில் இருந்தே செய்து முடிக்க முடியும். சேமிப்பு கணக்குகள் குறைந்த மாதாந்திர கட்டணம், சேமிப்பிற்கு வட்டி, ஏடிஎம் வசதி, கிரெடிட் கார்ட் வசதி, லோன் வசதி போன்றவற்றை வாடிக்கையாளர்களுக்கு தருகிறது. இவை அனைத்தையும் ஒரு சேமிப்பு கணக்கு திறந்தாலே ஒரு வாடிக்கையாளருக்கு கிடைக்கும்.
மேலும் படிக்க | ஹோலி பண்டிகைக்கு ஜாக்பாட்.. இலவசமாகப் பெறலாம் எல்பிஜி சிலிண்டர்
ஆன்லைனில் வங்கிக் கணக்கைத் திறப்பது ஆபத்தா?
பொதுவாக ஆன்லைனில் வங்கி கணக்கை திறக்க பெரும்பாலானோர் விரும்புவதில்லை. வங்கிக்கு நேரடியாக சென்றோ அல்லது வங்கி பணியாளர்கள் மூலம் திறந்து கொள்கின்றனர். பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக வாடிக்கையாளர்கள் இதனை விரும்புவதில்லை. இருப்பினும் ஒவ்வொரு வங்கியும் பாதுகாப்பை உறுதி செய்ய பல பாதுகாப்பு அடுக்குகளைப் பயன்படுத்துகின்றன. ஆதார் OTP சரிபார்ப்பு, பான், அடையாளச் சான்று, முகவரிச் சான்று, KYC மற்றும் ஆதார் புகைப்படம் போன்ற கூடுதல் பாதுகாப்பு வசதிகளுடன் ஆன்லைனில் வங்கி கணக்கை திறக்க அனுமதிக்கின்றனர்.
ஆன்லைன் சேமிப்புக் கணக்கைத் திறப்பதில் உள்ள மற்றொரு முக்கியமான நன்மை என்ன வென்றால் நாம் இருக்கும் இடத்தில் இருந்து வங்கி சேமிப்பு கணக்கை திறந்து கொள்ள முடியும். வங்கி விடுமுறை நாள், பண்டிகை நாள் என்பதை பார்க்க தேவையில்லை. 24/7 என்ற அடிப்படையில் நம்மால் வங்கி கணக்கை திறந்து கொள்ள முடியும். ஆன்லைனில் சேமிப்புக் கணக்கைத் திறக்க சில நிமிடங்கள் போதும். நீங்கள் உங்களின் சேமிப்பு கணக்கை உடனடியாக பயன்படுத்த முடியும்.
எந்த வங்கியில் எவ்வளவு வட்டி விகிதங்கள் உள்ளன? வேறு என்ன சிறப்பு சலுகைகள் தருகின்றனர்? போன்ற விவரங்களை தெரிந்து கொள்ள ஒவ்வொரு வங்கிக்கும் நேரடியாக செல்ல தேவையில்லை. வங்கியின் சலுகைகளை ஆன்லைன் வெப்சைட் மூலம் எளிதாக தெரிந்து கொள்ள முடியும். சேமிப்புக் கணக்கு வட்டி விகிதங்கள், ஆன்லைன் கணக்கு திறப்பிற்கான கட்டணங்கள், வாடிக்கையாளர் சேவை, ஆன்லைன் பேங்கிங் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ள முடியும். ஆன்லைன் சேமிப்புக் கணக்கு செயல்பட துவங்கியவுடன் இணைய சேவை அல்லது வங்கியின் மொபைல் ஆப் மூலம் டிஜிட்டல் பேங்கிங் வசதியை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், வங்கி கடன்கள், கிரெடிட் கார்டு அப்ளை, முதலீடு, வெகுமதி புள்ளி, நிலையான வைப்பு நிதி போன்றவற்றிற்கும் உடனே அணுகல் கிடைக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ