அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதில் மிகப்பெரிய புதுப்பிப்பு: PSB (பொதுத்துறை வங்கி) இல் ஈடுபட்டுள்ளவர்களை நீண்ட காலம் வேலை செய்ய வைக்க அரசு விரும்புகிறது. அதன்படி எல்ஐசி, எஸ்பிஐ போன்ற பெரிய பொதுத்துறை வங்கிகளின் உயர் அதிகாரிகள் 62 வயதுக்கு பதிலாக 65 வயது வரை மேலும் மூன்று ஆண்டுகள் பணியாற்ற அனுமதிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக சமீபத்திய செய்திகள் தெரிவிக்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது தொடர்பாக PTI இடம் பேசிய நிதியமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர், PSB களில் இந்த அதிகாரிகளின் பதவிக்காலத்தை நீட்டிப்பதற்கான ஆலோசனையைப் பெற்றுள்ளதாக உறுதிப்படுத்தினார். இந்த திட்டத்தில், எல்ஐசி மற்றும் எஸ்பிஐ தலைவர்களின் ஓய்வு பெறும் (Retirement Age New Update) வயதை தற்போதுள்ள 62 ஆண்டுகளில் இருந்து 65 ஆக உயர்த்த வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது என்றார்.


மேலும் படிக்க | கடன் வாங்கியவர்களுக்கு நல்ல செய்தி: கடன் விதிகளில் ரிசர்வ் வங்கி செய்த மாற்றம்


தேர்ந்தெடுக்கப்பட்ட மூத்த பதவிகளில் ஓய்வு பெறும் வயது அதிகரிக்கப்படலாம்


இந்நிலையில் பிடிஐ அறிக்கையின்படி, பொதுத்துறை வங்கித் தலைவர்களின் ஓய்வு பெறும் (Government to Increase Retirement Age) வயதை 60லிருந்து 62 ஆக உயர்த்த அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும், மேலும் 1 முதல் 2 ஆண்டுகள் வரை பணிபுரிய அனுமதிக்கும் என்று கூறப்படுகிறது. பாரத ஸ்டேட் வங்கியின் தற்போதைய தலைவர் தினேஷ் காரா இன்னும் ஓர் இரு தினங்களில் தனது 63 வயதில் ஓய்வு பெற உள்ளார். இப்போது ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் அவருக்கு கூடுதலாக 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கினால், 65 வயது வரை பணிபுரிவார்.


இதேபோல், எல்ஐசி தலைவர் சித்தார்த்த மொகந்தியின் பதவிக்காலம் ஜூன் 29, 2024 அன்று முடிவடைகிறது. எனவே உயர் வங்கி அதிகாரிகளுக்கு ஓய்வு பெறும் வயதை அரசு உயர்த்தினால், அது எல்ஐசி தலைவருக்கும் பலன் தரும்.


இதை ஏன் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது?


மூத்த வங்கி மற்றும் PSB (Public Sector Bank) அதிகாரிகளின் பதவிக் காலத்தை நீட்டிப்பதன் பின்னணியில் உள்ள அரசாங்கத்தின் நோக்கம் வங்கி முடிவுகளில் ஸ்திரத்தன்மையைக் கொண்டுவருவதாக பல நிபுணர்கள் நம்புகின்றனர். இந்த நடவடிக்கை முடிவெடுக்கும் செயல்முறைகளை நெறிப்படுத்தவும், நீண்ட காலத்திற்கு அவற்றின் செயல்திறனை உறுதிப்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், தற்போதைய எஸ்பிஐ தலைவரான தினேஷ் காராவுக்கு 10 மாதங்கள் நீட்டிப்பு வழங்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதனிடையே மூத்த அதிகாரி ஒருவரின் பணிக்காலம் நீட்டிப்பு பரிசீலிக்கப்படுவது இது முதல் நிகழ்வு அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2021 ஆம் ஆண்டில், இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (ஊழியர்கள்) ஒழுங்குமுறை, 1960 இல் ஒரு திருத்தம் செய்யப்பட்டது, இது எல்ஐசி தலைவரின் ஓய்வு வயதை 62 ஆக உயர்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.


இதற்கிடையில் ஆந்திரப் பிரதேசத்தில் உயர்கல்வித் துறையின் கீழ் உள்ள பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயது உயர்த்தப்படுகிறது. மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் மற்றும் யுஜிசி ஊதிய விகிதத்தைப் பெறும் ஆசிரியர்களுக்கு மட்டுமே இது அமல்படுத்தப்படும். இதற்காக, சம்பந்தப்பட்ட பல்கலை பதிவாளருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதிய வயது அதிகரிப்புக்குப் பிறகு, இப்போது ஊழியர்கள் 65 வயது வரை பணியாற்றத் தகுதியுடையவர்கள் என்று அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | 50 கோடி PMJDY வாடிக்கையாளர்களுக்கும் அலர்ட்! மாற்றங்கள் தொடர்பாக நிதியமைச்சர் அப்டேட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ