புதுடெல்லி: வீடு வாங்க விரும்ப்பமா? ஆனால் மலிவான வீட்டுக் கடனை (home loan) எங்கு பெறுவது என்று யோசனையா? ICICI வங்கி உங்களைப் போன்ற மலிவான வீட்டுக் கடனை வாங்குபவர்களுக்காக 'Home Utsav' தொடங்கியுள்ளது. இது டிஜிட்டல் சொத்து (A Digital Property Exhibition) கண்காட்சி. இதில், நாட்டின் கிட்டத்தட்ட அனைத்து பெரிய நகரங்களிலிருந்தும் நல்ல ரியல் எஸ்டேட் உருவாக்குநர்களின் திட்டங்களை நீங்கள் காண்பீர்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த கண்காட்சி மூலம் சொத்து வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் இருந்து பல வகையான சலுகைகள் வழங்கப்படும்.


 


ALSO READ | நாட்டின் 7 நிறுவனங்கள் 67,622 கோடியை ஈட்டியது, HDFC-ICICI வங்கி முதல் பட்டியலில்....


'Home Utsav' கண்காட்சியின் சிறப்பு


  1. நாடு முழுவதும் பெரிய ரியல் எஸ்டேட் உருவாக்குநர்களின் திட்டங்கள் இருக்கும்

  2. இந்த கண்காட்சியின் மூலம், வீடு வாங்கும்போது வீட்டுக் கடனின் வட்டி விகிதத்தில் தள்ளுபடி கிடைக்கும்.

  3. சிறப்பு செயலாக்க கட்டணம் இருக்கும்

  4. டிஜிட்டல் வீட்டுக் கடன் கிடைக்கும்

  5. டெவலப்பர்களுக்கும் பிரத்யேக தள்ளுபடிகள் கிடைக்கும்

  6. நீங்கள் ICICI வங்கியின் வாடிக்கையாளராக இருந்தால், கூடுதல் சலுகைகள் உங்களுக்கு வழங்கப்படும். வங்கியின் இன்ஸ்டா மற்றும் முன் அங்கீகரிக்கப்பட்ட கடன் தயாரிப்புகளைப் பெறுவீர்கள்.


இந்த கண்காட்சிக்கு நீங்கள் எங்கும் செல்ல தேவையில்லை. உங்கள் வீடு அல்லது அலுவலகத்தில் அமர்ந்திருக்கும்போது எல்லா சொத்துக்களையும் ஆன்லைனில் பார்வையிட முடியும். இதற்காக, நீங்கள் www.homeutsavicici.com க்கு செல்ல வேண்டும்.


 


ALSO READ | ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. முழுவிவரம்


முதல் 'ஹோம் உட்சவ்' கண்காட்சி மும்பை-புனே பகுதியில் தொடங்கப்பட்டுள்ளது. முதலில் 'Home Utsav' கண்காட்சி மும்பை-புனே பகுதியில் தொடங்கப்பட்டுள்ளது. இதில் 60 சொத்து உருவாக்குநர்களின் 100 க்கும் மேற்பட்ட திட்டங்கள் உள்ளன, இது தவிர, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா, டெல்லி-என்.சி.ஆர் மற்றும் குஜராத்திலும் ICICI வங்கி ''Home Utsav' ஏற்பாடு செய்யும்.