இனி பணம் எடுக்க ATM வேண்டாம், ஸ்மார்ட்போன் மட்டும் போதும்: ICICI-யின் புதிய திட்டம்!
ATM தேவையில்லை.. ஸ்மார்ட்போன் மட்டும் போதும்.. எங்கு வேண்டுமானாலும் பணம் எடுத்துக் கொள்ளலாம்..!
ATM தேவையில்லை.. ஸ்மார்ட்போன் மட்டும் போதும்.. எங்கு வேண்டுமானாலும் பணம் எடுத்துக் கொள்ளலாம்..!
இனி ATM-களில் டெபிட் கார்டு இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய வசதியை ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank) அறிவித்துள்ளது. இது பழைய திட்டம் தான் என்றாலும் பலருக்கும் இப்படி ஒரு திட்டம் இருப்பது தெரிவதில்லை. அதெல்லாம் சரி ATM-ல் எப்படி கார்டு இல்லாமல் பணம் எடுப்பது என்ற விவரத்தை பார்க்கலாம்.
ICICI-யின் iMobile Pay திட்டம்..
வங்கிகள் நாளுக்கு நாள் தங்களின் டிஜிட்டல் வளர்ச்சி மேம்பட்டை அதிகரித்து வருக்கின்றனர். இந்நிலையில், எப்படியெல்லாம் டிஜிட்டல் வணிகத்தினை மேம்படுத்தலாம் என யோசித்து ஒவ்வொரு வசதியினையும் கொண்டு வருகின்றன. முடிந்தவரை வாடிக்கையாளர்கள் அத்தியாவசிய தேவை தவிர வங்கிகளை நாடத் தேவையில்லை என்பதற்கு ஏற்ப ICICI வங்கி, iMobile Pay என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இதன் மூலம் இனி நீங்கள் ATM செல்லும் போது அவசியம் டெபிட்கார்டுகளை எடுத்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை, வங்கிக் கிளைக்கும் செல்ல வேண்டிய அவசியமும் இல்லை. இதன் மூலம் வங்கிகளுக்கு செலவும் மிச்சம். அதோடு இதன் மூலம் ATM குளோனிங், ATM திருட்டு இப்படி பல மோசடிகளை தவிர்க்க முடியும் என்கின்றனர் வங்கியாளர்கள்.
ALSO READ | வாங்கும் கடனில் பாதி தொகைக்கு வட்டி கட்டினால் போதும்; ICICI-யின் புது திட்டம் இதோ
வாடிக்கையாளர்கள் தங்களது ஸ்மார்ட்போனில் ICICI வங்கியின் iMobile Pay ஆப்பினை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த செயலி மூலமாக வாடிக்கையாளர்கள் ATM மையத்தில் சென்று, ஸ்கேன் செய்து பணம் எடுத்துக் கொள்ள முடியும். தினசரி இந்த ஆப்பினை பயன்படுத்தி 20 ஆயிரம் ரூபாய் வரையில் பணம் எடுத்துக் கொள்ள முடியும்.
UPI ID-யாகவும் பயன்படுத்தலாம்
iMobile Pay செயலியில் UPI ID-யாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் பேமெண்ட்கள், ரீசார்ஜ்கள், பணம் அனுப்புதல், சேமிப்பு, முதலீடு உள்ளிட்ட பல சேவைகளை செய்து கொள்ள முடியும். இது தவிர டிக்கெட்டுகள், டிராவலிங் நேரங்களில் டிக்கெட் எடுத்தல் என பல நேரங்களில் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதன் மூலம் உங்களது மொபைல் எண்ணில் உள்ள காண்டக்ட் நம்பர்களுக்கும் எளிதில் பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். வாய்ஸ் மூலம் பணம் அனுப்பலாம் இது தவிர இந்த செயலி மூலம் குரல் சார்ந்த பணம் வழங்கல்கள்( Voice based payments) குரல் அடிப்படையிலான கட்டளைகளால், வாடிக்கையாளர்கள் பதிவு செய்யப்பட்டவர்களின் வங்கி கணக்குகளுக்கு நிதிகளை பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். குரல் உதவியாளர் சேவை (voice assistant service) பயன்படுத்தப்படுகிறது.
அனைத்து வங்கி வாடிக்கையாளரும் பயன்படுத்தலாம்?
ICICI வங்கியின் வாடிக்கையாளர்கள் மட்டும் அல்ல, இந்த iMobile Pay-யினை யார் வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதன் மூலம் UPI ID-யுடன் வங்கிக் கணக்கினை இணைத்துக் கொண்டு பரிமாற்றம் செய்து கொள்ளும் வசதியும் உண்டு. ஆக இதன் மூலம் எளிதாக உங்களது பணப் பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.
ALSO READ | உங்களிடம் SBI கிரெடிட் கார்டு இருக்கா?, இதை செய்தால் ₹.25,000 வரை பரிசு கிடைக்கும்!!
உடனடி பணப்பரிமாற்றம்
இந்த Mobile pay, Google Pay, Phone Pay செயலியை போன்றது. ஆக கட்டணம் இன்றி நீங்கள் உடனடியாக பரிமாற்றத்தினை செய்து கொள்ளலாம். குறிப்பாக பெட்ரோல் பங்குகள், காய்கறி, மளிகை, உணவகங்கள், ஹாஸ்பிட்டல்ஸ், தியேட்டர்கள் என பல இடங்களிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பல வங்கிக் கணக்குகளை இணைத்துக் கொள்ளலாம்
வாடிக்கையாளர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளை இந்த UPI ID-யில் இணைத்துக் கொள்ளும் வசதியும் உண்டு. எனினும் முதன்மை கணக்கினை அடிப்படையாக வைத்து யுபிஐ ஐடியை உருவாக்கிக் கொள்ளலாம். அதோடு இந்த சேவை மூலம் கிரெடிட் கார்டு செயல்பாட்டுக் கட்டணம் இன்றி வாங்கிக் கொள்ளலாம். கடன் வாங்கிக் கொள்ளலாம். கார் கடன், பர்சனல் கடன் என பலவற்றை உடனடியாக வாங்கிக் கொள்ள முடியும். இதனை தவிர பல அம்சங்கள் இந்த ஐமொபைல் பேயில் உள்ளது. ஆக மற்ற விவரங்களை icicibank.com/mobile-banking/imobile.page என்ற வங்கியின் இணைய பக்கத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.
உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR