ஐடிபிஐ வங்கி (IDBI Bank) வாடிக்கையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள், பெரும் வருமானத்தை பெற வாய்ப்பளிக்கும் வகையில், அம்ரித் மஹோத்சவ் எஃப்டி: ஐடிபிஐ வங்கி அம்ரித் மஹோத்சவ் எஃப்டியில் முதலீடு செய்வதற்கான காலக்கெடுவை அக்டோபர் 31 முதல் நவம்பர் 30, 2023 வரை நீட்டித்துள்ளது. ஐடிபிஐ வங்கியின் இந்தத் திட்டத்தில், முதலீட்டாளர்கள் பெரும் வருமானம் ஈட்ட வாய்ப்பு உள்ளது. ஐடிபிஐ வங்கி 375 நாட்கள் மற்றும் 444 நாட்கள் கொண்ட இரண்டு சிறப்பு FD அம்ரித் மஹோத்சவ் என்னும் திட்டத்தை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த FD திட்டத்தில் வங்கி அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது. இந்த FD திட்டத்தில் முதலீடு செய்வதற்கான கடைசி தேதி 31 அக்டோபர் 2023 ஆகும், இது நவம்பர் 30, 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஐடிபிஐ வங்கியின் இணையதளத்தில், பண்டிகை கால சலுகைகளை கருத்தில் கொண்டு அம்ரித் மஹோத்சவ் எஃப்டி முதலீட்டிற்கான கால வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அம்ரித் மஹோத்சவ் 444 நாட்கள் FD (Amrit Mahotsav 444 days FD)


ஐடிபிஐ வங்கி அம்ரித் மஹோத்சவ் FD என்னும் நிலையான வைப்பு திட்டத்தில் 444 நாட்களுக்கு முதலீடு (Investment Tips) செய்வதற்கு வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு என்ஆர்ஐ மற்றும் என்ஆர்ஓ வாடிக்கையாளர்களுக்கு 7.15% வட்டி விகிதத்தை வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு 7.65% வட்டி வழங்கப்படுகிறது. முதலீட்டாளர்கள் இந்த FD முதலீட்டில் ( Senior Citizens FD Interest Rate ) போடப்பட்டுள்ள பணத்தை முன்கூட்டியே திரும்பப் பெறவும் மூடவும் வங்கி அனுமதிக்கிறது. இப்போது 375 மற்றும் 444 நாட்கள் சிறப்பு FD கணக்குகளில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பு 31 நவம்பர் 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.


அம்ரித் மஹோத்சவ் FD 375 நாட்கள் (Amrit Mahotsav FD 375 days)


ஐடிபிஐ வங்கி அம்ரித் மஹோத்சவ் எஃப்டியில் 375 நாட்களுக்கு முதலீடு செய்யும் மூத்த குடிமக்களுக்கு 7.65% வட்டி வழங்குகிறது. அதே நேரத்தில், வழக்கமான வாடிக்கையாளர்கள், என்ஆர்ஐ மற்றும் என்ஆர்ஓ வாடிக்கையாளர்களுக்கு 375 நாட்களுக்கு எஃப்டியில் 7.10% வட்டி அளிக்கிறது. நேரத்திற்கு முன்பே பணத்தை எடுக்க அல்லது மூடுவதற்கான விருப்பத்தையும் இது வழங்குகிறது.


மேலும் படிக்க | வேலையை மாற்றியபின் இபிஎஃப் கணக்கை மர்ஜ் செய்யாவிட்டால் நஷ்டம்தான்: முழு செயல்முறை இதோ


IDBI வங்கி FD விகிதங்கள் (IDBI Bank FD Rates)


7-30 நாட்கள் 3.00% சதவிகித வட்டி


31-45 நாட்கள் 3.25% சதவிகித வட்டி


46- 90 நாட்கள் 4.00% சதவிகித வட்டி


91-6 மாதங்கள் 4.50% சதவிகித வட்டி


6 மாதங்கள் 1 நாள் முதல் 1 வருடம் வரை 5.75% சதவிகித வட்டி


1 வருடம் முதல் 2 ஆண்டுகள் வரை (375 நாட்கள் மற்றும் 444 நாட்கள் தவிர) 6.80% சதவிகித வட்டி


2 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை 6.50% சதவிகித வட்டி


5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை 6.25% சதவிகித வட்டி


10 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை 4.80% சதவிகித வட்டி


5 ஆண்டுகள் 6.50% சதவிகித வட்டி


மேலும் படிக்க | கர்நாடக மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! இலவச சிகிச்சைக்கு ஆரோக்கிய சஞ்சீவினி திட்டம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ