நீங்கள் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா(SBI)-ன் வாடிக்கையாளராக இருந்தால், உங்கள் வீட்டுக் கடன் நிலுவையில் உள்ளது என்றால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி காத்திருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆம், வீட்டு கடன் வாங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு SBI ஒரு சிறந்த சலுகையை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் கீழ் நீங்கள் ஏற்கனவே இயங்கும் வீட்டுக் கடனில் மேல் கடன் பெறலாம். "SBI Home Top Up Loan" என அறியப்படும் இந்த சலுகையின் கீழ், இணையத்தில் இந்த கடனை வெறும் 4 கிளிக்குகளில் பெறலாம். இந்த கடனை மிக எளிதாக பெற, நீங்கள் SBI YONO மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.


READ | EMI செலுத்துவதற்கான அவகாசம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு...


SBI Home Top Up Loan-க்கு, முதலில் YONO பயன்பாட்டில் உள்நுழைய வேண்டும். YONO பயன்பாட்டில் உள்நுழைந்த பிறகு, மேலே உள்ள பேனரில் உள்ள சலுகையைக் கிளிக் செய்ய வேண்டும். இதன் பிறகு, நீங்கள் கடன் தொகை மற்றும் நேரத்தை தேர்வு செய்ய வேண்டும். பிறகு நீங்கள் ஒரு OTP-யெ பெறுவீர். இந்த OTP-னை கோரப்படும் இடத்தில் உள்ளிட வேண்டும். செயல்பாடுகளை தொடர்ந்து உங்கள் கடன் செயல்படுத்தப்படும்.


ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா(SBI) வழங்கும் "SBI Home Top Up Loan" -ன் கீழ், வாடிக்கையாளர்களுக்கு தனிப்பட்ட கடன்களை விட மிகக் குறைந்த கட்டணத்தில் கடன்கள் வழங்கப்படுகின்றன. எனினும் தனிப்பட்ட காரணங்களுக்காக மக்கள் இந்த கடனை எடுக்க முடியாது.


இந்த கடன் மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் கிடைக்கிறது. இந்த கடனின் செயலாக்கக் கட்டணம் மிகக் குறைவு. மறைக்கப்பட்ட கட்டணம் எதுவும் வைக்கப்படவில்லை, காலத்திற்கு முன்பே கடனைத் திருப்பிச் செலுத்தினால் அபராதம் இருக்காது. தினசரி குறைந்து வரும் தொகையின் படி வட்டி குறைக்கப்படும், இந்த கடன் ஓவர் டிராப்டாக வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் இந்த கடனை 30 வருட காலத்திற்கு பெறலாம் எனவும் வங்கி நிர்வாகம் தெரிவிக்கிறது.


READ | வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு "Bank Virus" குறித்து SBI எச்சரிக்கை..!!


இந்தியாவின் குடிமக்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI-க்கள்) என இரு தரப்பினரும் இந்த கடனுக்கு விண்ணப்பிக்கலாம், குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகளாக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது 70-ஆக இருக்க வேண்டும்.


SBI (ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா) தனது வாடிக்கையாளர்களுக்கு முன்பே அங்கீகரிக்கப்பட்ட தனிநபர் கடன்களுக்கான வசதி வழங்கப்படுகிறது. இந்த கடனின் மூலம், உங்கள் எல்லா தேவைகளையும் எளிதாக பூர்த்தி செய்ய முடியும். இந்த வசதி குறித்து SBI தனது வாடிக்கையாளர்களுக்கு ட்வீட் மூலம் தெரிவித்துள்ளது. இந்த கடனை YONO SBI மூலம் வெறும் 4 கிளிக்குகளில் எளிதாக எடுக்க முடியும் என்றும் SBI தெரிவித்துள்ளது.