டெல்லி: இன்றைய காலகட்டத்தில் ஆதார் அட்டை மிக முக்கியமான அரசாங்க ஆவணம். உங்கள் மொபைல் எண் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டிருந்தால், நீங்கள் வீட்டிலிருந்தே பல வசதிகளைப் பெற முடிகிறது, ஆனால் சில நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மொபைல் எண்ணை வைத்திஒருப்பவர்கள், தங்கள் ஆதார் அட்டையுடன் எந்த மொபைல் எண்ணை இணைத்திருக்கிறார்கள் என்பதை மறந்தால் அது சிக்கலாகி விடும். அதற்காக நீங்கள் ஆதார் மையம் செல்ல தேவையில்லை வீட்டிலிருந்தே சிக்கலை தீர்க்கலாம்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இணைப்பு எண்ணை அறிய எளிதான வழி
ஆதார் அட்டையுடன் (Aadhaar Card)  இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை நீங்கள் மாற்றியிருந்தால் அல்லது உங்கள் எண்ணில் எது ஆதார் உடன் இணைக்கப்பட்டுள்ளது என்பது உங்களுக்கு நினைவில் இல்லை என்றால், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட எண்ணை ஆன்லைனில் எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதை அறிந்து கொள்வது எளிதானது மற்றும் அதை வீட்டில் உட்கார்ந்து கொண்டே ஆன்லைனில் காணலாம்.


- முதலில், UIDAI வலைத்தளத்திற்கு செல்லவும்.


- இதற்குப் பிறகு எனது ஆதார்  (My Aadhar) என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்


- இங்கே நீங்கள் Aadhar Services  என்ற ஆதார் சேவைகளுக்கான ஆப்ஷன் இருக்கும்


- Aadhar Services என்பதைக் கிளிக் செய்க


- முதல் ஆப்ஷன் Verify an Aadhar Number என இருக்கும்


- அதைக் கிளிக் செய்தால் புதிய விண்டோ திறக்கும்


- ஆதார் எண்ணை உள்ளிட்டு அதற்கு கீழே கேப்ட்சாவை நிரப்பவும்


- ப்ரொசீட் டு வெரிபை என்பதை கிளிக் செய்க


- இப்போது நீங்கள் ஆதார் ஸ்டேடஸை பார்ப்பீர்கள்


அதில் ஆதார் எண், வயது, மாநிலம், மொபைல் எண் என பல விவரங்களை பார்க்கலாம்
உங்கள் ஆதார் உடன் ஒரு மொபைல் எண் இணைக்கப்பட்டிருந்தால், எண்ணின் கடைசி மூன்று இலக்கங்கள் இங்கே தோன்றும்.
இந்த வழியில் உங்கள் ஆதார் உடன் எந்த மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் கண்டுபிடிக்கலாம்
உங்கள் ஆதார் உடன் எந்த எண்ணும் இணைக்கப்படாவிட்டால், அங்கே எதுவும் இருக்காது.
இதன் பொருள் உங்கள் ஆதார் உடன் எந்த எண்ணும் இணைக்கப்படவில்லை என்பதாகும்


TRAI இன் வழிகாட்டுதல்களின்படி, இன்கம்மிங் கால்கள் சேவை நிறுத்தப்பட்ட பிறகு ஒரு மொபைல் பயனர் 90 நாட்களுக்கு ஒரு எண்ணை ரீசார்ஜ் செய்யாவிட்டால். அந்த எண்ணை மற்றொரு நுகர்வோருக்கு கொடுக்க மொபைல் நிறுவனத்திற்கு உரிமை உண்டு. நீங்கள் நீண்ட காலமாக ரீசார்ஜ் செய்யாத மொபைல் எண் உங்களிடம் இருந்தால், உடனடியாக அதை ரீசார்ஜ் செய்யுங்கள், இல்லையெனில் இந்த எண்ணை மற்றொரு வாடிக்கையாளருக்கு வழங்கலாம்.


ALSO READ |FASTag பெறுவதற்கான காலக்கெடு மேலும் நீட்டிக்கப்படுமா.. மத்திய அரசு கூறுவது என்ன..!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR