ரயில் பயணிகளுக்கு ஜாக்பாட்! குறைந்தது ரயில் கட்டணம்.. புதிய கட்டணம் என்ன?
Railway Ticket Booking: இப்போது ஏசி 3 எகானமி பெட்டிகளில் பயணிக்கும் பயணிகள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இது தொடர்பாக ரயில்வே தரப்பில் இருந்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ரயில் ஏசி இருக்கை (AC-3 Economy) டிக்கெட் கட்டண குறைப்பு: ரயிலின் ஏசி 3 எகானமி (ஏசி இருக்கை டிக்கெட்) கோச்சில் பயணம் செய்வது மீண்டும் மலிவானதாகிவிட்டது. இது தொடர்பாக ரயில்வே வாரியம் (Railway Board) கடந்த மார்ச் மாதம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் பழைய முறையை மீட்க முடிவு செய்து, ஏசி 3 எகானமி கோச்சின் (AC 3 Economy Coach) கட்டணம் ஏசி 3 கோச்சை விட குறைத்துள்ளது. இந்த முடிவு தற்போது அனைத்து ரயில்களிலும் அமல் படுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த முடிவின் கீழ், ஆன்லைன் மற்றும் கவுன்டர் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த பயணிகளுக்கு கூடுதல் பணம் திருப்பித் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பெட்டியின் (AC 3 Economy Coach) கட்டணம் கடந்த ஆண்டு உயர்த்தப்பட்டது
தகவலின்படி, கடந்த ஆண்டு ரயில்வே வாரியம் வணிக சுற்றறிக்கை வெளியிட்டது, அதில் ஏசி 3 எகானமி கோச் (AC 3 Economy Coach) மற்றும் ஏசி 3 கோச்சின் கட்டணத்தை சமமாக்கியது. எகானமி கோச்களில் முன்பு போர்வைகள் மற்றும் தாள்கள் வழங்கப்படவில்லை என்றாலும், கடந்த ஆண்டு இந்த வசதி பயணிகளுக்கு கிடைக்கத் தொடங்கியது. மேலும் கடந்த மார்ச் 21-ம் தேதி இது தொடர்பாக ஆலோசித்து ரயில்வே சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டு, பழைய முறையையே மாற்ற முடிவு செய்தது.
மேலும் படிக்க | ரயில் டிக்கெட்டில் வேறு ஒருவரின் பெயரா? என்ன செய்யலாம்? உடனே படியுங்கள்
ஏசி 3 எகானமியில் பெர்த்களின் மொத்த எண்ணிக்கை 80 ஆகும்
ரயில்வே அதிகாரிகளின் கூற்றுப்படி, ஏசி 3 அடுக்கு பெட்டிகளில் பெர்த்களின் எண்ணிக்கை 72 ஆகவும், ஏசி 3 அடுக்கு எகானமி வகுப்பில் பெர்த்களின் எண்ணிக்கை 80 ஆகவும் உள்ளது. அதேபோல் ஏசி 3 அடுக்கு எகானமி கோச்சின் பெர்த் அகலம் ஏசி 3 அடுக்கு (AC-3 Third AC Fare) கோச்சை விட சற்று குறைவாக இருப்பதால் ஏசி 3 அடுக்கு எகானமி கோச்சில் பெர்த்களின் எண்ணிக்கை அதிகமா இருப்பது சாத்தியம். இதனிடையே இந்த கட்டணக் குறைப்புடன், எகானமி கோச்சில் போர்வைகள் மற்றும் தாள்கள் வழங்கும் முறை தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
'எகானமி' ஏசி-3 அடுக்கு (AC-3 Economy Fare Reduced) கோச் மூலம் ரயில்வேக்கு முதல் ஆண்டிலேயே ரூ.231 கோடி வருவாய் கிடைத்ததற்கு இதுவே காரணம். புள்ளிவிவரங்களின்படி, ஏப்ரல்-ஆகஸ்ட், 2022 இல் மட்டும் 15 லட்சம் பேர் இந்த எகானமி கோச்சில் பயணம் செய்து ரூ.177 கோடி வருவாய் ஈட்டியுள்ளது ரயில்வே துறை.
மலிவான ஏசி பயணத்தை வழங்கும் எகனாமி ஏசி3 கோச்
இதற்கிடையில் ஏசி 3 எகானமி கோச் மலிவான ஏர் கண்டிஷனர் ரயில் பயணச் சேவையாகும். ஸ்லீப்பர் கிளாஸில் பயணிக்கும் பயணிகளுக்கு சிறந்த மற்றும் மலிவான ஏசி பயணத்தை வழங்குவதற்காக ஏசி 3 எகானமி கோச் ரயில்வேவால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கோச்சின் கட்டணம் சாதாரண ஏசி3யை விட 6 முதல் 7 சதவீதம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ