Indian Railways: ரயில் டிக்கெட்.. ரயில்வே எடுத்த பெரிய முடிவு, மகிழ்ச்சியில் பயணிகள்

Indian Railways: பல சமயங்களில் அவசரமாக ரயிலைப் பிடித்து ஜெனரல் கோச்சில் பயணம் செய்பவர்கள் டிக்கெட் வாங்க முடியாமல் தவிக்கின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில் சிக்கினால், அபராதமும் விதிக்கப்படுகிறது. இதற்காக, ரயில்வே மூலம் மக்களுக்கு சிறப்பு வசதியும் செய்யப்பட்டு வருகிறது. 

இந்த வசதியை பயன்படுத்தி மக்கள் முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்டுகளை (Unreserved Train Ticket) முன்பதிவு செய்யலாம். முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய, மக்கள் தங்கள் தொலைபேசிகளில் UTS செயலியைப் பதிவிறக்க வேண்டும். இதன் செயல்பாடுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

1 /8

UTS செயலி: முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய, மக்கள் தங்கள் தொலைபேசிகளில் UTS செயலியைப் பதிவிறக்க வேண்டும். இதன் செயல்பாடுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

2 /8

இதன் பயன்பாடு என்ன? UTS செயலியின் உதவியுடன், ஜெனெரல் கோச்களுக்கான டிக்கெட்டுகள் அல்லது பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகளை மக்கள் ஆன்லைனில் வாங்கலாம்.

3 /8

யாருக்கு உதவும்? UTS டிக்கெட் முன்பதிவு ரயில்வே பயணிகளின் பயண அனுபவத்தை எளிதாக்கும். குறிப்பாக தினமும் ரயிலில் பயணம் செய்பவர்கள் அல்லது திட்டமிடப்படாத பயணத்தை மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு இதனால் உதவி கிடைக்கும்.

4 /8

பயன்படுத்துவது எப்படி? இந்த செயலியைப் பயன்படுத்த, பயணிகள் தங்கள் மொபைல் எண்ணைப் பயன்படுத்தி செயலியில் தங்களைப் பதிவு செய்து கடவுச்சொல், அதாவது பாஸ்வேர்டை உருவாக்க வேண்டும். இதன் மூலம் டிக்கெட் கிடைப்பதை சரிபார்க்கலாம்,  ரயில் அட்டவணையைப் பெறலாம். தேவைப்பட்டால், பயணிகள் தங்கள் டிக்கெட்டுகளை ரத்து செய்யவும், அதாவது கேன்சல் செய்யவும் இந்த செயலியைப் பயன்படுத்தலாம்.

5 /8

எப்போது ரயிலில் ஏற முடியும்? யுடிஎஸ் செயலியைப் பயன்படுத்தும் பயணிகள், முன்பதிவு செய்த மூன்று மணி நேரத்திற்குப் பிறகு ரயிலில் ஏறலாம்.

6 /8

பிளாட்பார்ம் டிக்கெட்டுகள்: பிளாட்பார்ம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய ஸ்டேஷனில் இருந்து 2 கிமீ தொலைவில் அல்லது ரயில் பாதையில் இருந்து 15 மீட்டர் தொலைவில் இருக்க வேண்டும்.  

7 /8

சீசன் டிக்கெட்டுகள்: இந்த செயலியை பயன்படுத்தி பயணிகள் மூன்று, ஆறு அல்லது பன்னிரெண்டு மாதங்களுக்கு சீசன் டிக்கெட்டுகளை வாங்கலாம்.

8 /8

ஐந்து வகையான ரயில் டிக்கெட்டுகள்: அதிகாரப்பூர்வ ஆண்ட்ராய்டு மொபைல் டிக்கெட் பயன்பாட்டைப் பயன்படுத்தி பயணிகள் பொது டிக்கெட் முன்பதிவு,  விரைவான டிக்கெட் முன்பதிவு, பிளாட்ஃபார்ம் டிக்கெட் முன்பதிவு, சீசன் டிக்கெட் முன்பதிவு/புதுப்பித்தல், QR முன்பதிவு போன்ற ஐந்து வகையான ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.