ரயில் டிக்கெட் புக்கிங் முதல் கிரெடிட் கார்டு வரை... நவம்பரில் மாறும் சில முக்கிய விதிகள்
Important Changes in 2024 November: நவம்பர் மாதம் நாளை பிறக்க உள்ளது. ஒவ்வொரு மாதமும் போலவே இந்த மாதமும் சில முக்கிய மாற்றங்கள் இருக்கும். நவம்பர் 1 முதல், புதிய விதிகள் நடைமுறைக்கு வரும்.
Important Changes in 2024 November: நவம்பர் மாதம் நாளை பிறக்க உள்ளது. ஒவ்வொரு மாதமும் போலவே இந்த மாதமும் சில முக்கிய மாற்றங்கள் இருக்கும். நவம்பர் 1 முதல், புதிய விதிகள் நடைமுறைக்கு வரும். இது சாமானியர்களின் செலவில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். ஒவ்வொரு மாதமும் முதல் தேதி, எல்பிஜி சிலிண்டர்களின் விலை மாறும் நிலையில், இந்த மாதம், கிரெடிட் கார்டு விதிகளிலும் மாற்றங்கள் இருக்கும். இந்த மாதம் என்ன விதிகள் மாறுகின்றன என்பதை அறிந்து கொள்ளலாம்.
எஸ்பிஐ கிரெடிட் கார்டு (SBI Credit card)
நவம்பர் 1 முதல், நாட்டின் மிகப்பெரியபொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) தனது கிரெடிட் கார்டு விதிகளை மாற்றுகிறது. எஸ்பிஐ கார்டு பயனர்கள் நவம்பர் 1 முதல், அன்செக்யூர் எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளுக்கு மாதாந்திர நிதிக் கட்டணம் 3.75% என்ற அளவில் செலுத்த வேண்டும். கூடுதலாக, மின்சாரம், தண்ணீர் மற்றும் எல்பிஜி எரிவாயு போன்ற பயன்பாட்டுச் சேவைகளுக்கு ரூ.50,000க்கு மேல் பணம் செலுத்தினால் 1% கூடுதல் கட்டணம் விதிக்கப்படும்.
புதிய ரயில் டிக்கெட் முன்பதிவு விதி (Train Advance Booking)
இந்திய ரயில்வேயின் ரயில் டிக்கெட் முன்பதிவுக் காலம் (ARP), பயண நாளைத் தவிர்த்து, நவம்பர் 1, 2024 முதல் 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைக்கப்படும். டிக்கெட் முன்பதிவு செயல்முறையை எளிதாக்கும் வகையில் இந்திய ரயில்வே டிக்கெட் முன்பதிவு விதிகளில் இந்த மாற்றத்தை செய்துள்ளது.
ரிசர்வ் வங்கி பண பரிமாற்ற விதிகள் (RBI Money Transfer Rule)
நவம்பர் 1, 2024 முதல் நடைமுறைக்கு வரும் உள்நாட்டு பணப் பரிமாற்றங்களுக்கான (DMT) புதிய விதிகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அறிவித்துள்ளது. இந்த விதிகள் வங்கிச் சேனல்களை மோசடிக்காக தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
LPG சிலிண்டர் விலைகள்
பெட்ரோலிய நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களின் விலையில் மாற்றங்கள் செய்கின்றன. நவம்பர் 1ம் தேதி சிலிண்டர் விலையில் மாற்றம் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீப காலமாக வர்த்தக பயன்பாட்டிற்கான காஸ் சிலிண்டர் விலையில் ஏற்றம் ஏற்பட்டுள்ளது.
ATF மற்றும் CNG-PNG விலைகள்
ஒவ்வொரு மாதமும் முதல் தேதி, எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்கள், LPG எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் மாற்றங்கள் செய்வதைப் போல், விமானங்களுக்கான எரிபொருளான ATF மற்றும் CNG-PNG ஆகியவற்றிலும் விலைகளில் மாற்றங்கள் செய்கின்றன. கடந்த சில மாதங்களாக ஏர் டர்பைன் எரிபொருளின் விலை குறைக்கப்பட்டு வருகிறது. இம்முறையும் பண்டிகை பரிசாக விலை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பரஸ்பர நிதிய விதிகள்
உள்தகவல் மூலம் விற்று-வாங்கி செய்யப்படும் பரிவர்த்தனைகளை தடுக்கவும், பரஸ்பர நிதிகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் புதிய விதிகளை அமல்படுத்த செபி முடிவு செய்துள்ளது. இது நவம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது. இந்த புதிய விதிகளின்படி, சொத்து மேலாண்மை நிறுவனங்கள் (AMC), தங்கள் நாமினிகள் அல்லது உறவினர்கள் மூலம் செய்யப்படும் ரூ. 15 லட்சத்துக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் குறித்த தகவல்களை வழங்க வேண்டும்.
TRAI புதிய விதிகள் (TRAI New Rules)
நவம்பர் 1 முதல், டெலிகாம் துறையில் ஒரு பெரிய மாற்றம் இருக்கும், அதன்படி JIO மற்றும் Airtel உட்பட அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் ஸ்பேம் செய்திகளை கண்டறிந்து தடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விதியின் கீழ், டெலிகாம் நிறுவனங்கள் சந்தேகத்திற்கிடமான அல்லது போலி எண்களை உடனடியாகக் கண்டறிந்து தடுக்க வேண்டும். இது பயனர்களுக்கு சைபப் மோசடியில் இருந்து சிறந்த பாதுகாப்பை வழங்கும்.
வங்கி விடுமுறை 13 நாட்கள்
நவம்பரில், திருவிழாக்கள், பொது விடுமுறைகள் மற்றும் சட்டசபை தேர்தல்கள் காரணமாக 13 நாட்கள் வங்கி விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த விடுமுறை நாட்களில், உங்களின் அத்தியாவசிய வங்கி நடவடிக்கைகள் மற்றும் பரிவர்த்தனைகளில் ஏதேனும் இடையூறு ஏற்படாமல் இருக்க, 24×7 கிடைக்கும் வங்கியின் ஆன்லைன் சேவைகளைப் பயன்படுத்தலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ