புதிய பண பரிமாற்ற கொள்கை: இனி பெயரை இதை செய்யாமலேயே ரூ. 5 லட்சம் வரை அனுப்பலாம்
New Money Transfer Rule: நீங்கள் ஆன்லைனில் பணத்தை பரிமாற்றம் செய்யும் நபராக இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ள செய்தியாக இருக்கும்.
பண பரிமாற்றம் புதிய கொள்கை: இன்றைய காலகட்டத்தில் பலர் இணைய வழி மூலமாகவே பண பரிமாற்றங்களை செய்கிறார்கள். இது மக்களுக்கு வசதியாக இருப்பதோடு அவர்களது நேரத்தையும் மிச்சப்படுத்துகின்றது. நீங்கள் ஆன்லைனில் பண பரிமாற்றம் செய்யும் நபராக இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு மிக முக்கியமான செய்தியாக இருக்கும். வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை மாற்றுவது தொடர்பான புதிய கொள்கையை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கொண்டு வந்துள்ளதாக சமீபத்திய புதுப்பிப்புகள் தெரிவிக்கின்றன. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
நீங்கள் ஆன்லைனில் பணத்தை பரிமாற்றம் செய்யும் நபராக இருந்தால், ஐஎம்பிஎஸ் (IMPS), என்எஃப்டி (NFT) மற்றும் ஆர்டிஜிஎஸ் (RTGS) போன்ற பெயர்களை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். உங்களின் பெரும்பாலான பரிவர்த்தனைகளை IMPS மூலம் செய்யும் நபராக நீங்கள் இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ள செய்தியாக இருக்கும். IMPS சேவையை ரிசர்வ் வங்கி எளிதாக்குகிறது. இதில் பயனாளியின் எந்த விவரங்களையும் தெரிவிக்காமல் ரூ.5 லட்சம் வரையிலான தொகையை வாடிக்கையாளர் மாற்ற முடியும். NPCI அதாவது நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (National Payments Corporation of India) அதன் விதிகளை மாற்ற முடிவு செய்துள்ளது.
மொபைல் எண் மூலமே பணத்தை மாற்றலாம்:
இந்த புதிய மாற்றத்திற்குப் பிறகு, நீங்கள் பயனாளியின் மொபைல் எண்ணிலிருந்தே பணத்தை மாற்ற முடியும். அதுவும் ரூ. 5 லட்சம் வரையிலான தொகையை பரிமாற்றலாம். இதை பற்றிய முழுமையான தகவல் என்ன? வாடிக்கையாளர்களுக்கு என்ன மாதிரியான வசதி கிடைக்கப் போகிறது? இவற்றை பற்றி இங்கே காணலாம்.
இதுவரை, செயல்முறை நீண்டதாக இருந்தது
ஒரு பெரிய தொகையை அனுப்ப, ஒருவர் பயனாளியின் பெயர், கணக்கு எண் மற்றும் IFSC குறியீட்டை உள்ளிட வேண்டும். இந்த செயல்முறை அதிக நேரம் எடுத்தது. ஆனால் இப்போது பயனாளியின் பெயரை சேர்க்காமலேயே பணம் மாற்றப்படும். இந்தப் புதிய செயல்பாட்டில் அனுப்புநரின் அல்லது பெறுநரின் மொபைல் எண் பயன்படுத்தப்படும்.
வங்கிக் கணக்கு பெயர் மூலம் சரிபார்ப்பு செய்யப்படும்
பயனாளியின் வங்கிக் கணக்கில் உள்ள பெயரின் அடிப்படையில் சரிபார்ப்பு, அதாவது வெரிஃபிகேஷன் செய்யப்படும். அதாவது எந்த தொந்தரவும் இல்லாமல் ஒரே கிளிக்கில் ரூ.5 லட்சத்தை மாற்ற முடியும்.
IMPS என்றால் என்ன?
IMPS என்பது ஒரு நிகழ்நேர நேர கட்டண முறையாகும் (Real Time Payment System). இதன் மூலம் நீங்கள் வாரத்தின் 7 நாட்களுக்கும் 24 மணிநேரமும் பணத்தை மாற்றலாம். இது NPCI ஆல் வழங்கப்படும் ஒரு சலுகையாகும். வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்புக் கணக்குகளில் இருந்து ரியல் டைமில் பணம் அனுப்பவும் பெறவும் உதவும் தடையற்ற பணப் பரிமாற்ற தீர்வாக இது செயல்படுகிறது. இந்த சேவையை மொபைல் பேங்கிங் மற்றும் இன்டர்நெட் பேங்கிங் மூலம் அணுகலாம். இது பலதரப்பட்ட பயனர்களுக்கு அணுகக்கூடியதாக இருக்கும்.
IMPS: பரிமாற்றக் கட்டணங்கள்
IMPS ஐப் பயன்படுத்துவதற்கான கட்டணங்கள் மாற்றப்படும் தொகையைப் பொறுத்தது. கட்டணம் ரூ. 2.5 முதல் அதிகபட்சம் ரூ. 25 வரை இருக்கும். இந்த கட்டணங்கள் ரூ. 10,000 முதல் ரூ. 5 லட்சம் வரையிலான பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இது பரந்த அளவிலான பயனர்களுக்கு IMPS ஒரு மலிவு விருப்பமாக இருப்பதை உறுதிசெய்கிறது.
மேலும் படிக்க | போஸ்ட் ஆபீஸ் RD... HDFC RD... எஸ்பிஐ RD... எது பெஸ்ட்..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ