நாட்டில் ஆன்லைன் நிதி மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இன்றைய காலகட்டத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. பெரும்பாலானோர்,  நிதி பரிவர்த்தனைகளை, ஆன்லைன் மூலமே செய்ய விரும்புகிறார்கள். வீட்டில் இருந்த படியே, வேலையை முடித்து விடுவதன் மூலம் நேரத்தையும் மிச்சப்படுத்தலாம். இப்போது சில அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே வங்கி செல்ல வேண்டும் என்ற நிலை உள்ளது. கட்டணம் செலுத்துவது, டிக்கெட்டுகள் புக் செய்வது  என தங்கள் பணிகள் பலவற்றை ஆன்லைனில் செய்யவே பெரும்பாலானோர் விரும்புகின்றனர். யாருக்காவது பணம் அனுப்ப வேண்டும்  என்றாலும் சரி, அல்லது வருமான வரி செலுத்த வேண்டும் என்றாலும், மின் கட்டணம், தொலைபேசி கட்டணம் என ஏதேனும் செலுத்த வேண்டும்  என்றால், இணைய சேவைகள் நம் வாழ்க்கையை எளிதாக்கியுள்ளன. எனினும், இதில் சில பிரச்சனைகளும் உள்ளன. சில சைபர் மோசடி செய்பவர்கள் இதைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது அரசு சைபர் மோசடிகளை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. டிஜிட்டல் மோசடியைத் தடுக்கும் நோக்கில், சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளில் ஈடுபட்டுள்ள 70 லட்சம் மொபைல் எண்களை அரசாங்கம் தற்காலிகமாக முடக்கி வைத்துள்ளதாக நிதிச் சேவைகள் செயலர் விவேக் ஜோஷி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். நிதிச் சேவைகள் துறைச் செயலர், நிதி இணையப் பாதுகாப்பு மற்றும் அதிகரித்து வரும் டிஜிட்டல் பேமெண்ட் மோசடிகள் தொடர்பான முக்கியக் கூட்டத்தை நடத்தினார். இதில் நிதி மோசடிகள், பொருளாதார குற்றங்கள், சைபர் குற்றங்கள் தடுக்க நவீன தொழில்நுட்பத்தை கையாளும் முறையை அதிவேகப்படுத்த அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருக்கிறது. இந்தக் கூட்டத்திற்குப் பிறகு விவேக் ஜோஷி கூறுகையில், சைபர் மோசடிகளை தடுப்பது தொடர்பான அமைப்புகளையும் நடைமுறைகளையும் வலுப்படுத்த வங்கிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. மேலும் இதுபோன்ற கூட்டங்கள் மேலும் நடைபெறும் என்றும், அடுத்த கூட்டம் ஜனவரி மாதம் நடைபெறும் என்றும் கூறினார்.


கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள்


ஆதார் மூலம் செயல்படுத்தப்படும் கட்டண முறை (Aadhaar-enabled Payment System - AePS) மோசடி குறித்து கூறிய, நிதிச் சேவைகள் செயலர், இந்த சிக்கலைக் கவனித்து தரவு பாதுகாப்பை உறுதி செய்யுமாறு மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், வணிகர்களின் கேஒய்சி தரப்படுத்தல் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக அவர் கூறினார். நிதிச் சேவைகள் செயலர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இணைய மோசடிகளைத் தடுப்பதற்கு பல்வேறு நிறுவனங்களுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பை உறுதி செய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது.


மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசு: ஜனவரியில் 5% டிஏ ஹைக்... 51% ஆக உயரும் அகவிலைப்படி


விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை


மோசடிகளில் அப்பாவி வாடிக்கையாளர்கள் பாதிப்படுவதில் இருந்து காப்பாற்ற சமூகத்தில் இணைய மோசடி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார் ஜோஷி. இந்த சந்திப்பின் போது, ​​இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம், தேசிய சைபர் கிரைம் ரிப்போர்ட்டிங் போர்டலில் (NCRP) பதிவாகியுள்ள டிஜிட்டல் பேமெண்ட் மோசடிகள் தொடர்பான சமீபத்திய தரவுகளை பகிர்ந்து கொண்டதோடு, இது போன்ற வழக்குகளை கையாள்வதில் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் சிக்கல்கள் உட்பட பல விஷயங்கள் குறித்து விளக்கமளித்தது.


கூட்டத்தில் பங்கேற்ற முக்கிய துறைகள்


கூட்டத்தில் பொருளாதார விவகாரங்கள் துறை, வருவாய்த் துறை, தொலைத்தொடர்புத் துறை, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY), இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


மேலும் படிக்க | அதிக வட்டி, இலவச காப்பீடு...EPFO சந்தாதாரர்களுக்கு கிடைக்கும் ஜாக்பாட் நன்மைகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ