அதிக வட்டி, இலவச காப்பீடு...EPFO சந்தாதாரர்களுக்கு கிடைக்கும் ஜாக்பாட் நன்மைகள்

EPFO Update: இபிஎஃப்ஓ கணக்கு வைத்திருப்பவர்கள், நிலையான வைப்புத்தொகையுடன் (FD) ஒப்பிடும்போது, தங்களுடைய சேமிப்பிற்கு அதிக வட்டி விகிதங்களைப் பெறுவது மட்டுமல்லாமல், அரசாங்கத்தின் பாதுகாப்பு உத்தரவாதத்திலிருந்தும் பயனடைகிறார்கள்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 28, 2023, 05:44 PM IST
  • இபிஎஃப்ஓ -இல் கணக்கைத் திறக்கும் அனைத்து ஊழியர்களும் EDLI திட்டத்தின் கீழ் நன்மைகளைப் பெறத் தகுதியுடையவர்கள்.
  • இந்தத் திட்டமானது பிஎஃப் கணக்கில் ரூ.7 லட்சம் டேர்ம் இன்சூரன்ஸ் வழங்குகிறது.
  • ஒரு ஊழியர் துரதிர்ஷ்டவசமாக இறந்தால், அந்தக் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் காப்பீட்டுத் தொகையாக வழங்கப்படும்.
அதிக வட்டி, இலவச காப்பீடு...EPFO சந்தாதாரர்களுக்கு கிடைக்கும் ஜாக்பாட் நன்மைகள் title=

EPFO Update: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஊழியர்களுக்கு பல நன்மைகளை வழங்கும் ஒரு விரிவான திட்டத்தை வழங்குகிறது. இபிஎஃப்ஓ கணக்கு வைத்திருப்பவர்கள், நிலையான வைப்புத்தொகையுடன் (FD) ஒப்பிடும்போது, தங்களுடைய சேமிப்பிற்கு அதிக வட்டி விகிதங்களைப் பெறுவது மட்டுமல்லாமல், அரசாங்கத்தின் பாதுகாப்பு உத்தரவாதத்திலிருந்தும் பயனடைகிறார்கள். கூடுதலாக, இத்திட்டம் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள இலவச ஆயுள் காப்பீடு வழங்குகிறது. தனியார் துறை ஊழியர்களுக்கும், வருங்கால வைப்பு நிதிக் கணக்கு (PF கணக்கு) ஒரு முக்கியமான முதலீட்டு விருப்பமாக உள்ளது. ஒரு குறிப்பிட்ட தொகை அவர்களின் மாத சம்பளத்தில் இருந்து கழிக்கப்பட்டு எதிர்கால தேவைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் பங்களிக்கும் அதே அளவு தொகையை நிறுவனமும் பங்களிக்கின்றது. இபிஎஃப்ஓ ஒரே நேரத்தில் மூன்று திட்டங்களை மேற்பார்வையிடுகிறது: EPF திட்டம் 1952, ஓய்வூதியத் திட்டம் 1995 (EPS), மற்றும் ஊழியர்களின் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீடு (EDLI) திட்டம்.

இபிஎஃப்ஓ -இல் கணக்கைத் திறக்கும் அனைத்து ஊழியர்களும் EDLI திட்டத்தின் கீழ் நன்மைகளைப் பெறத் தகுதியுடையவர்கள். இந்தத் திட்டமானது பிஎஃப் கணக்கில் ரூ.7 லட்சம் டேர்ம் இன்சூரன்ஸ் வழங்குகிறது. ஒரு ஊழியர் துரதிர்ஷ்டவசமாக இறந்தால், அந்தக் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் காப்பீட்டுத் தொகையாக வழங்கப்படும். முக்கியமாக, பணியாளர்கள் பிஎஃப் கணக்கு (PF Account) மற்றும் EPS இல் முதலீடு செய்யும் போது, EDLI திட்டத்தில் முதலாளிகள் / நிறுவனங்கள் முதலீடு செய்கின்றனர். ஊழியர்கள் அதன் பலன்களை பெறுவதை நிறுவனம் உறுதிசெய்கிறது.

இபிஎஃப்ஓ இந்த திட்டத்தை 1976 இல் நிறுவியது. அதன் அதிகார வரம்பிற்குள் உள்ள அனைத்து நிறுவனங்களும் இதில் அடங்கும். அதிக கவரேஜ் காப்பீட்டுத் திட்டத்தைத் தேர்ந்தெடுத்தால், ஊழியர்கள் திட்டத்திலிருந்து விலகலாம்; இல்லையெனில், அவர்கள் இரண்டு திட்டங்களின் பலன்களையும் பெறலாம். முன்முயற்சியின் ஒரு பகுதியாக, முதலாளிகள் / நிறுவனங்கள் ஊழியரின் அடிப்படை மற்றும் அகவிலைப்படி தொகையில் 0.5 சதவீதத்தை பிரீமியமாக முதலீடு செய்கிறார்கள். அதிகபட்ச வரம்பு சுமார் ரூ. 75 ஆகும். இந்தத் திட்டத்தின் பலன்கள் நீடித்த வேலைவாய்ப்பு மற்றும் EPF-ல் (ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி) ஆக்டிவ் உறுப்பினராக இருப்பதன் மூலம் தொடர்ந்து இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | கடன் வாங்கியவர்களுக்கு நிவாரணம் அளித்த ரிசர்வ் வங்கி: கடன் சுமையை குறைக்க புதிய விதி

EDLI திட்டத்தின் கீழ் இபிஎஃப்ஓ (EPFO) ஒரு பணியாளரின் சம்பளத்தில் 35 மடங்கு வரை காப்பீடு வழங்குகிறது. இந்தக் கணக்கீட்டிற்குக் கருதப்படும் அதிகபட்ச மாதச் சம்பளம் ரூ. 15,000 ஆக நிர்ணயிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் விளைவாக, ஒரு தகுதியான பணியாளர் இபிஎஃப்ஓ -விடமிருந்து இந்தத் திட்டத்தின் மூலம் ரூ.5.25 லட்சத்தைப் பெறலாம். மேலும், சுமார் ரூ.1.75 லட்சம் கூடுதல் போனஸாக இந்த அமைப்பு வழங்குகிறது. மொத்தத்தில், இந்த முன்முயற்சியானது காப்பீட்டுத் தொகையாக ரூ.7 லட்சம் வழங்குகிறது.

ஊழியர்கள் பிஎஃப் கணக்கைத் (PF Account) திறக்கும்போது, அவர்கள் காப்பீட்டுத் தொகையைப் பெறுவது மட்டுமல்லாமல், நிலையான வைப்புத்தொகைகளுடன் (FD) ஒப்பிடும்போது அவர்களின் வைப்புத்தொகைக்கு அதிக வட்டி விகிதங்களை அனுபவிக்கிறார்கள். எடுத்துக்காட்டாக, மிகப்பெரிய அரசு வங்கியான எஸ்பிஐ, 5 வருட நிலையான வைப்புக்கு (FD-க்கு) சராசரியாக 7 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. இதனுடன் ஒப்பிடுகையில் பிஎஃப் கணக்கு 8.15 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. இது முன்பு 9 சதவீதத்தை எட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | பிபிஎஃப்பில் முதலீடு செய்தே கோடீஸ்வரர் ஆகலாம்! அதற்கு இப்படி முதலீடு செய்யவும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News