7வது ஊதியக்குழு, சமீபத்திய புதுப்பிப்புகள்: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி உள்ளது. அடுத்த ஆண்டு அவர்களது சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில் பல பெரிய மாற்றங்கள் காணப்படலாம். புதிய ஆண்டில் அகவிலைப்படி மீண்டும் அதிகரிக்கும்.
ஏஐசிபிஐ இன்டெக்ஸ் மூலம் அகவிலைப்படி கணக்கிடப்படுகிறது
மத்திய அரசு ஊழியர்களுக்கு (Central Government Employees) வரும் மாதங்கள் சிறப்பாக இருக்கும். அக்டோபரில் அகவிலைப்படி ஏற்றப்பட்டு ஜூலை முதலான அரியர் தொகையும் வழங்கப்பட்டது. இப்போது அடுத்தாக, அடுத்த அகவிலைப்படி உயர்வு பற்றிய பேச்சு எழுந்துள்ளது. இது ஜனவரி 20123 -இல் நடக்கும். ஆனால் இந்த அகவிலைப்படி உயர்வு மிக சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். ஏனெனில், இதன் பிறகு பல விஷயங்களில் மாற்றம் ஏற்படும்.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மிகப்பெரிய புத்தாண்டு பரிசு காத்திருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அகவிலைப்படி உயர்வை (DA Hike) பொறுத்தவரை ஒரு மிகப்பெரிய நல்ல செய்தி கிடைக்கவுள்ளது. ஜூலை 1, 2023 முதல் பணியாளர்கள் 46 சதவீத அகவிலைப்படியைப் பெறத் தொடங்கினார்கள். 2024 ஜனவரியில் அகவிலைப்படியில் மீண்டும் மாற்றம் இருக்கும். இதைக் கணக்கிடுவதற்கான எண்களும் வரத் தொடங்கியுள்ளன. ஏஐசிபிஐ குறியீட்டின் (AICPI Index) அடிப்படையில் அகவிலைப்படி கணக்கிடப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
அகவிலைப்படி 5 சதவீதம் அதிகரிக்கலாம்
ஜனவரியில் அகவிலைப்படி (Dearness Allowance) அதிகபட்சமாக 5% அதிகரிக்கலாம் என கூறப்படுகின்றது. ஏஐசிபிஐ இண்டிகேட்டரிலிருந்து பெறப்பட்ட டிஏ மதிப்பெண் இதை சுட்டிக்காட்டுகிறது. தற்போதைய வளர்ச்சி விகிதத்தில், அகவிலைப்படி 51% ஐ எட்டும் என்று நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர். இது நடந்தால், 5% அகவிலைப்படி உயர்வு என்பது ஊழியர்களுக்கான மிகப்பெரிய ஏற்றமாக இருக்கும். ஏஐசிபிஐ இன்டெக்ஸின் அடிப்படையில் அகவிலைப்படி கணக்கிடப்படுகின்றது. பணவீக்கத்துடன் ஒப்பிடும்போது ஊழியர்களின் கொடுப்பனவு எவ்வளவு அதிகரிக்க வேண்டும் என்பதை குறியீட்டில் உள்ள பல்வேறு துறைகள் தொடர்பான பணவீக்க தரவு காட்டுகிறது.
தற்போதைய நிலை என்ன?
இன்றைய நிலவரப்படி, ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கான ஏஐசிபிஐ குறியீட்டு தரவு வெளியிடப்பட்டுள்ளது. அகவிலைப்படி தற்போது 48.54% ஆகவும், குறியீடு 137.5 புள்ளிகளாகவும் உள்ளது. அக்டோபர் மாதத்திற்குள் இந்த எண்ணிக்கை 49%க்கும் அதிகமாக இருக்கும். நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான புள்ளிவிவரங்களும் இன்னும் வரவில்லை. அகவிலைப்படியின் மொத்த அதிகரிப்பு டிசம்பர் 2023 இன் ஏஐசிபிஐ இன்டெக்ஸ் தரவுகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.
மேலும் படிக்க | அதிக வட்டி, இலவச காப்பீடு...EPFO சந்தாதாரர்களுக்கு கிடைக்கும் ஜாக்பாட் நன்மைகள்
7வது ஊதியக் குழுவின் (7th Pay Commission) கீழ், ஜூலை முதல் டிசம்பர் 2023 வரையிலான ஏஐசிபிஐ எண்களின் அடிப்படையில் ஜனவரி 2023 -க்கான அகவிலைப்படி நிர்ணயிக்கப்படுகின்றது. இதுவரையிலான ஏஐசிபிஐ தரவுகளின் அடிப்படையில் அகவிலைப்படி சுமார் 48.50 சதவீதத்தை எட்டியுள்ளது. இதுவரை மூன்று மாத எண்கள் வரவுள்ளன. இதில் இன்னும் 2.5% கூடுதல் உயர்வு இருக்கலாம் என நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர். ஆனால் குறியீட்டின் கணக்கீடு முற்றிலும் இவற்றைப் பொறுத்தது. மீதமுள்ள மாதங்களில் அகவிலைப்படி 51 சதவீதத்தை எட்டும் என்று அகவிலைப்படி கால்குலேட்டர் (DA Calculator) மதிப்பிட்டுள்ளது.
கீழே உள்ள அட்டவணை (CPI(IW) BY2016=100 DA%) மாதாந்திர வளர்ச்சியைக் காட்டுகிறது:
ஜனவரி 2023 132.8 43.09,
பிப்ரவரி 2023 132.7 43.80,
மார்ச் 2023 133.3 44.47,
ஏப்ரல் 2023 134.2, 45.07,
மே 2023 134.7 45.59,
ஜூன் 2023 136.4 46.25,
ஜூலை 2023 139.7 47,
ஆகஸ்ட் 2023 139.2 47.98,
செப்டம்பர் 2023 137.5 48.54,
அக்டோபர் 2023 49.45
நவம்பர் 2023 50.21
டிசம்பர் 2023 50.93
மேலும் படிக்க | கடன் வாங்கியவர்களுக்கு நிவாரணம் அளித்த ரிசர்வ் வங்கி: கடன் சுமையை குறைக்க புதிய விதி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ