Income Tax Saving 2023: வரி சேமிப்புக்கான திட்டத்தை வகுப்பதற்கு இந்த 2023ம் ஆண்டு ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.  சில தொழில் வல்லுனர்களின் குறிப்புகளை தெரிந்துகொண்டு அதனை பின்பற்றி நீங்கள் இந்த 2023ம் ஆண்டில் உங்களது வரி சேமிப்பை செய்யலாம்.  வரியை சேமிக்க நீங்கள் என்னவெல்லாம் செய்யலாம் என்பதை பின்வருமாறு பார்க்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1) இன்றைய காலகட்டம் உலகமே நம் கைக்குள் அடங்கிவிட்டது, எல்லாவிதமான விஷயங்களை பற்றியும் நாம் நொடிப்பொழுதில் தெரிந்துகொள்ள முடியும்.  வருமான வரி சேமிப்புக்கு தேவையான அனைத்து தகவல்களும் வருமான வரி இணையதளத்தில் உங்களுக்கு இலவசமாகக் கிடைக்கும்.  வருமான வரி இணையதளத்தில் கிடைக்கும் FAQகள் மற்றும் வழிகாட்டிகளை நீங்கள் அடிக்கடி தவறாமல் படிக்க வேண்டும். இது உங்களை பொறுப்பான மற்றும் புத்திசாலித்தனமான வரி செலுத்துபவராக மாற்றும். 


மேலும் படிக்க | Jackpot! உங்கள் தலை எழுத்தை மாற்றும் ‘இந்த’ 50 ரூபாய் நோட்டு உங்ககிட்ட இருக்கா!


2) நீங்கள் சட்டத்தால் வழங்கப்படும் வரிச் சலுகைகளைப் பயன்படுத்துவதற்கு சரியான முதலீட்டை செய்ய வேண்டியது அவசியம்.  ஈக்விட்டி-இணைக்கப்பட்ட சேமிப்புத் திட்டங்கள் சிறந்த முதலீடுகளுக்கு எடுத்துக்காட்டாகும், இதில் முதலீடு செய்வது உங்களுக்கு வரி சலுகைகளை வழங்கும்.  80சி பிரிவின் மூலமாக ஒரு முதலீட்டாளர் ரூ. 50,000 வரை கூடுதல் விலக்கு பெறலாம்.  சிறந்த முதலீட்டு திட்டங்களாக பொது வருங்கால வைப்பு நிதி, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி, ஈக்விட்டி இணைக்கப்பட்ட சேமிப்புத் திட்டம், தேசிய ஓய்வூதிய அமைப்பு, சுகன்யா சம்ரித்தி யோஜனா, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்  ஆகியவை அடங்கும்.


3) உங்களுடன் சேர்த்து உங்கள் குடும்பத்தினருக்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்குவதன் மூலமும் வரியைச் சேமிக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.  வருமான வரிச் சட்டத்தின் 80டி பிரிவின் கீழ், மனைவி மற்றும் குழந்தைகள் உட்பட உடல்நலக் காப்பீட்டு பிரீமியத்தைச் செலுத்துவதற்கு வரி செலுத்துவோர் ரூ.25,000 வரை விலக்கு கோரலாம்.  இந்த பிரிவின் கீழ், மூத்த குடிமக்கள் ரூ.50,000 வரை வரி விலக்கு கோரலாம். 


4) வருமான வரி துறையின் விதிகளின்படி, ஒரு தனிநபர் அல்லது நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 31 அல்லது வருமான வரித்துறை குறிப்பிடும் தேதிக்கு முன்னதாகவே ஐடிஆர் தாக்கல் செய்து முடிக்க வேண்டியது அவசியம்.  அப்படி அந்த குறிப்பிட்ட தேதிக்குள் நீங்கள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யவில்லை என்றால் உங்களுக்கு வருமான வரித்துறை அபராதம் விதிக்கும்.


5) துல்லியமான வரி முறையைத் தேர்ந்தெடுப்பதும் உங்களுக்கு வருமான வரியை சேமிக்க உதவும். இரண்டு வகையான வரி முறைகள் உள்ளன, ரிட்டர்னை வழங்கும்போது இதில் உங்கள் விருப்பப்படி ஏதேனும் ஒன்றை ஒருவர் தேர்வு செய்யலாம்.  வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் ஒருவர் வரி விலக்கு கோரும்போது, ​​பழைய வரி முறையைத் தொடர வேண்டும். 


6) வரி செலுத்துபவர் தங்களது வருவாய் மற்றும் செலவுகளை எந்தவொரு வரி அதிகாரிகளுக்கும் நிரூபிக்கும் வகையில் சரியான கணக்குப் புத்தகங்களை பராமரிக்க வேண்டும்.  அவ்வாறு நீங்கள் செய்யத் தவறினால் உங்கள் கூடுதல் வரி செலுத்துதல், வட்டி மற்றும் அபராதம் விதிக்கப்படும்.


மேலும் படிக்க | ரயில் பயணத்தில் இவர்களுக்கு உணவு, தண்ணீர் இலவசம்! 90% பேருக்கு தெரிவதில்லை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ