Home Loan: இனி அஞ்சலகங்களும் வீட்டுக்கடன் வழங்கும்! வீடு வாங்குவது இனி சுலபமே!
இனிமேல் வீட்டுக்கடன் வாங்குவது மிகவும் சுலபமாகிவிட்டது. 50 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக் கடன்களை இந்தியா போஸ்ட் வழங்கும்
புதுடெல்லி: ஐபிபிபி ஏற்கனவே காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து பொது மற்றும் ஆயுள் காப்பீட்டு தயாரிப்புகளை வழங்குகிறது. இதற்காக, IPPB, எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் (LIC Housing Finance) நிறுவனத்துடன் இணைந்துள்ளது.
இது இந்திய தபால் வங்கியின் 4.5 கோடி வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கும். ஐபிபிபியின் 650 கிளைகள் மற்றும் 1.36 லட்சம் வங்கி அணுகல் மையங்கள் மூலம், வாடிக்கையாளர்கள் எல்ஐ ஹவுசிங் ஃபைனான்ஸின் வீட்டுக்கடன்களைப் பெறலாம்.
வங்கி வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த மூலோபாய கூட்டாண்மை மூலம், எல்ஐசிஎச்எஃப்எல் (LICHFL) அனைத்து வீட்டுக் கடன் தயாரிப்புகளையும் வழங்கும், அதே நேரத்தில் ஐபிபிபி தான் கடனின் ஆதாரமாக இருக்கும். ஐபிபிபி வங்கியின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை விரிவுபடுத்துவதற்கான ஒரு மூலோபாயமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
READ ALSO | வெறும் 5000 ரூபாயில் தபால் அலுவலகத்தில் நீங்கள் பிசினஸ் தொடங்கலாம்!
இந்த இணைப்பின் மூலம் அனைத்து வங்கிச் சேவைகளும் நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப கிடைக்கும். ஐபிபிபி ஏற்கனவே பொது மற்றும் ஆயுள் காப்பீட்டு தயாரிப்புகளை, காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து வழங்குகிறது. இந்தியா பேமென்ட் போஸ்ட் வங்கி (India Payment Post Bank), ஒவ்வொரு நபருக்கும் கடன் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குவதே தனது குறிக்கோள் என்று கூறுகிறது.
2 லட்சத்துக்கும் மேற்பட்ட அஞ்சலக ஊழியர்கள்
இந்தியா போஸ்ட் நெட்வொர்க்கில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தபால் ஊழியர்கள் (போஸ்ட்மேன்கள் மற்றும் கிராமப்புற தபால் நிலைய சேவகர்கள்) உள்ளனர். தற்போது மைக்ரோ ஏடிஎம்கள், பயோமெட்ரிக் சாதனங்கள் போன்ற வசதிகள் உள்ளன.
அவை வீட்டு வாசலில் வங்கி சேவைகளை வழங்குகின்றன. எல்ஐசிஎச்எஃப்எல் உடனான ஒப்பந்தத்திற்குப் பிறகு, இந்தியா போஸ்டின் ஊழியர்களும் வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக்கடன் வழங்க முடியும்.
READ ALSO | Good News Indian Employees: 2022இல் 9.4% வரை சம்பளம் அதிகரிக்க வாய்ப்பு!
எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனம் 6.66% வட்டியில் வீட்டுக் கடனை வழங்குகிறது
எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் 6.66 சதவீத வட்டியில் வீட்டுக்கடன் வழங்குகிறது. இந்த வட்டி விகிதமானது, சம்பளம் பெறும் நபர்களுக்கு 50 லட்சம் வரையிலான வீட்டுக் கடன்களுக்கு பொருந்தும்.
இதன் பொருள் என்னவென்றால், சம்பளம் பெறும் நபருக்கு நல்ல சிபில் ஸ்கோர் (CIBIL score) இருந்தால், அவர் இப்போது ஐபிபிபி கிளை அல்லது அதன் வங்கி மையங்களை அணுகி, 6.66 சதவீத வட்டியில் 50 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக் கடனைப் பெற முடியும்.
ஐபிபிபி வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக் கடன் வசதி கிடைக்கும்
இந்தியா போஸ்ட் வாடிக்கையாளர்கள் தங்கள் தளத்தில் வீட்டுக் கடன் வசதியையும் பெறுவார்கள் என்று, ஐபிபிபி நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஜே. வெங்கடராமு கூறினார். எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸுடன் இணைவது ஒரு முக்கியமான படியாகும் என்று கூறும் அவர், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் தேவைக்கேற்ப வங்கி சேவைகளை வழங்குவதே எங்களின் முயற்சி என்று கூறுகிறார்.
அதே நேரத்தில், எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸின் (LIC Housing Finance) நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஒய் விஸ்வநாத் கவுர், இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியுடனான மூலோபாய உடன்படிக்கையுடன், ஒரு புதிய சந்தையைப் பெறுவோம் என்று கூறினார். புதிய வாடிக்கையாளர்கள் எங்களுடன் சேருவார்கள். என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
READ ALSO | மாதம் ₹60,000 சம்பாதிக்க SBI வழங்கும் அரிய வாய்ப்பு; முழு விபரம்..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR